Table of Contents
‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’
– இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.
திருக்குறள்
“வள்ளுவன் தன்னை இவ்வுலகினுக்கேத் தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
– மகாகவி பாரதி
“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்”
– ஔவையார்
“தார்மீக வாழ்க்கையின் இன்றியமையாத அதிகாரத்தின் ஒரு பாடநூல்.”
“வள்ளுவரின் உச்சரிப்புகள் என் உள்ளத்தைத் தொட்டுவிட்டன. அவரைப் போன்ற ஞானப் பொக்கிஷத்தைத் தந்தவர்கள் யாரும் இல்லை.”
– மகாத்மா காந்தி
“கடந்த காலத்தை நிகழ்காலத்தை சந்திக்கச் செய்து, எதிர்காலத்தை உருவாக்கும் பூமியின் மனிதகுலத்திற்கான நடத்தை நெறிமுறைகளை திருக்குறள் வழங்குவதாக கருதப்படுகிறது.”
– Dr. APJ அப்துல் காலம்
இவ்வாறு உலக மக்கள் அனைவராலும் பாராட்டப்பெற்ற நூல் திருக்குறள். திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், காலத்தால் அழியாத பண்டைய தமிழ் ஞானத்தின் தொகுப்பாகும். திருக்குறளின் காலம் பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 450 வரை என்று பலவாறு கருதப்படுகிறது. தமிழ் மரபின் வாயிலாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசி நூலாக அறியப்படுகிறது. திருக்குறள் பற்றிய 20 சுவாரசியமான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.
திருக்குறள் பற்றிய 20 சுவாரசியமான தகவல்கள்
- திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார்.
- திருக்குறள் இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
- அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என திருக்குறள் முப்பாலை கொண்டுள்ளது.
- அறத்துப்பாலில் – 38 அதிகாரங்கள், பொருட்பாலில் – 70 அதிகாரங்கள், இன்பத்துப்பாலில் – 25 அதிகாரங்கள் உள்ளன.
- திருக்குறள் 133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்டது.
- திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைத்துள்ளன.
- திருக்குறள் பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- வீரமா முனிவர் திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.
- ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
- திருக்குறள் 170 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
- திருக்குறள் முதன் முதலில் 1812 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
- ஞானப்பிரகாசம் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டார்.
- திருக்குறள் உலகப் பொதுமறை, முப்பால், வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி,
- தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, திருவள்ளுவம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.
- திருக்குறளின் முதல் எழுத்து அ; கடைசி எழுத்து ன். (தமிழ் மொழியின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்கள்)
- திருக்குறள் குறிப்பிட்ட மதம் அல்லது கடவுளைப் பற்றி பேசுவதில்லை.
- உலகின் மிக உயரமான சிலைகளில் ஒன்றான கன்னியாகுமரியில் இந்தியாவின் முனையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை 133 அடி உயரம் கொண்டது.
- திருக்குறளில் பயன்படுத்தப்படாத தமிழ் உயிரெழுத்து ஔ மட்டுமே.
- திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் 14,000.
- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42,194.
திருவள்ளுவர்
- திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவரது காலம் கி.மு.31. இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
- இவரது ஊர் பெற்றோர் போன்ற தகவல்கள் கிடைக்கவில்லை.
- திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார், தெய்வப் புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, பெருநாவலர், பொய்யில் புலவர் என பல பெயர்களால் போற்றப்படுகிறார்.
- இந்நூல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil