Tamil govt jobs   »   Study Materials   »   Corporations in Tamil Nadu
Top Performing

6 newly formed corporations in Tamil Nadu | தமிழ்நாட்டில் புதிதாக உருவாகும் 6 மாநகராட்சிகள்

ADDA247 தமிழின் இந்த பகுதியில் நாம் TNPSC குரூப் 1, 2/2A தேர்வுகளுக்கு தேவைப்படும் முதன்மை தேர்விற்கான கட்டுரைகளும் பிற RRB,SSC தேர்வுகளுக்கான கொள்குறி வினாக்களுக்கு தேவையான விஷயங்களும் பார்ப்போம்

 

Tamil Nadu : A preview (தமிழ்நாடு பற்றிய ஒரு முன்னோட்டம்):

தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றாகும். இது தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே, பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.தமிழ் நாட்டில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.அதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் காண்போம்.

 

Corporations in Tamil Nadu and years of establishment (தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நிறுவப்பட்ட வருடங்கள்):

தமிழகத்தில் தற்போது  15 மாநகராட்சிகள் உள்ளது. அவைகள்:

வ. எண்

மாநகராட்சிகள் வருடங்கள்

1.

சென்னை

1688

2.

கோயம்புத்தூர்

1981

3.

திருச்சிராப்பள்ளி

1994

4.

மதுரை

1971

5.

சேலம்

1994

6.

திருநெல்வேலி

1994

7.

திருப்பூர்

2008

8.

ஈரோடு

2008

9.

வேலூர்

2008

10.

தூத்துக்குடி

2008

11.

தஞ்சாவூர்

2014

12.

திண்டுக்கல்

2014

13.

நாகர்கோயில்

2019

14. ஓசூர்

2019

15. ஆவடி

2019

 

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-13″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/14100649/TAMILNADU-State-GK-PART-13.pdf”]

 

Features of corporations (மாநகராட்சிகளின் அம்சங்கள்):

Chennai (சென்னை):

சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம், மதராசு பட்டினம், மெட்ராஸ் (Madras) மற்றும் சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

 

Coimbatore (கோயம்புத்தூர்):

கோயம்புத்தூர் (Coimbatore, சுருக்கமாக கோவை) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமும் தென்னிந்தியாவின் சென்னை, ஹைதராபாத், பெங்களூருக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகரம் ஆகும். இது இந்திய மாநகரங்களின் பட்டியலில் தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஓர் மாநகரம் ஆகும். இது இந்தியாவின் பதினாறாவது பெரிய மாநகரம் ஆகும்.

 

Tiruchirappalli  (திருச்சிராப்பள்ளி):

திருச்சிராப்பள்ளி (Tiruchirappalli), இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் நடு மைய பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த நகரமாகும். இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இது தமிழ்நாட்டின் பெருநகரங்களுள் ஒன்றாகும். இந்நகரம் தமிழ்நாட்டின் பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும்.

 

Madurai (மதுரை):

மதுரை (Madurai), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். இது, மதுரை மாவட்டத்தின் தலைநகர் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில், இதுவும் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளிக்கு அடுத்த நகர்புற பரப்பளவு அடிப்படையில், நான்காவது பெரிய நகரமும் ஆகும்.

 

Salem (சேலம்):

சேலம் (Salem) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டில் அமைந்துள்ள இவ்வூர், மாம்பழத்திற்கு பெயர் பெற்றது.

 

Tirunelveli (திருநெல்வேலி):

திருநெல்வேலி அல்லது நெல்லை (Tirunelveli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். திருநெல்வேலி மாநகரம், தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகச் சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் – காந்திமதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

 

Tiruppur (திருப்பூர்):

திருப்பூர் (Tiruppur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, கொங்கு நாட்டில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இம்மாநகரம் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது.

 

Erode (ஈரோடு):

ஈரோடு (Erode) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கும் மாநகராட்சி ஆகும். இதன் இரட்டை நகரமான பள்ளிபாளையமானது, காவிரி நதியின் கிழக்கு கரையில் நாமக்கல் மாவட்ட அதிகாரத்தின் கீழ் அமைந்துள்ளது.

 

Vellore (வேலூர்):

வேலூர் (Vellore) (வெல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநகரமும், வேலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய சுற்றுலா இடமாக வேலூர்க் கோட்டை விளங்குகிறது.

 

Thoothukudi or Tuticorin (தூத்துக்குடி):

தூத்துக்குடி (Thoothukudi அல்லது Tuticorin) தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநகரமும், தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக (தூத்துக்குடி மாநகராட்சி), ஆகஸ்ட் 5, 2008இல் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இம்மாவட்டத்திற்கு ‘முத்து நகர்’ என்ற பெயரும் உண்டு. தூத்துக்குடியில், அனல் மின் நிலையமும், ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன

 

Thanjavur or Tanjore (தஞ்சாவூர்):

தஞ்சாவூர் (Thanjavur அல்லது Tanjore) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தமிழ் பாரம்பரிய மிக்க தொன்மையான நகரமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும். இதை சுருக்கமாக தஞ்சை என்றும் அழைக்கப்படுகிறது. சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த தஞ்சாவூர் நகராட்சி 10 ஏப்ரல் 2014 அன்று தமிழ்நாட்டின் 12-வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

 

Dindigul (திண்டுக்கல்):

திண்டுக்கல் (Dindigul) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இது மாநிலத்தின் 11வது மாநகராட்சியாக, 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள் தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 48 மன்ற உறுப்பினர்களைக் கொண்டது. ஐதர் அலி காலத்தில் திண்டுக்கல் கோட்டை முதன்மையான இடமாக இருந்து வந்தது.

 

Nagercoil (நாகர்கோவில்):

நாகர்கோவில் (Nagercoil), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நாகர்கோயில் மாநகராட்சி ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமும் நாகர்கோவில் ஆகும். இம்மாநகருக்கு நாஞ்சில்நாடு என்ற பெயரும் உண்டு.

 

Hosur(ஓசூர்):

ஓசூர் (Hosur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஓசூர் வட்டம், ஓசூர் மாநகராட்சி மற்றும் ஒசூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.இந்த நகரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ளது. இந்நகரம் பெருகி வரும் தொழிற்சாலைகளாலும், குளிர்ந்த தட்பவெப்பநிலையாலும் அறியப்படுகிறது.

 

Avadi (ஆவடி):

ஆவடி (Avadi), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னை மாநகரில் வடமேற்கில் அமைந்துள்ளது மற்றும் இது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சியாகும்.ஆவடியில் உள்ள ஏரி பாலேரிபட்டு என்று அழைக்கப்பட்டது, இது இப்போது மிகவும் பழைய நில ஆவணங்களில் மட்டுமே காணப்படுகிறது.

 

Read more: Social Welfare Schemes of the Government of Tamil Nadu PART 1

 

Reason to changing into corporations (மாநகராட்சிகளாக மாற்ற காரணம்):

மாநகராட்சி (municipal corporation) ஒரு மாநகரம் அல்லது பெருநகர் பகுதியினை உள்ளாட்சி அமைப்பாகும். இந்தியாவில் பத்து இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் மாநகராட்சி தகுதி பெறுகின்றன. இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கின்றன.

 

Names of new corporations (புதிய மாநகராட்சிகளின் பெயர்கள்):

தமிழ்நாட்டில் புதிதாக  6 மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அவை

தாம்பரம், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், கடலூர், சிவகாசி  ஆகும்.

 

Corporations in Tamil Nadu Conclusion (தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் முடிவுரை):

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளும், 121 நகராட்சி மன்றங்களும், 528 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும் மற்றும் 12,618 ஊராட்சி மன்றங்களும் உள்ளன. இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 4  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 வினாக்கள் கேட்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது.

 

[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 2nd Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/16131958/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-August-2nd-week-2021.pdf”]

 

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: DREAM(75% OFFER)

TNPSC GROUP 4 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON AUG 30 2021
TNPSC GROUP 4 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON AUG 30 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Corporations in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள்_4.1