Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TNPSC & TNUSRB

இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

இந்திய அரசு அமைப்பு

  • அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் எடுக்கப்பட்டது? அயர்லாந்து அரசியலமைப்பு
  • இந்தியக் குடியரசுத் தலைவர் மேல் அவைக்கு நியமனம் செய்யும் அங்கத்தினர்களின் எண்ணிக்கை? 12
  • கட்டளைப் பேராணை என்பது? செயல்படுத்தும் ஏவல் ஆணை
  • திட்டக்குழு என்பது? அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அமைப்பு
  • பன்மை செயற்குழுவிற்கு சிறந்த உதாரணம்? சுவிட்சர்லாந்து
  •  பஞ்சாயத்து அரசுமுறை இந்தியாவில் தோன்றிய ஆண்டு? 1959
  • இந்திய அரசு திட்டக்குழுவை நிறுவிய ஆண்டு? 1950
  • மத்தியில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர?  திரு.மொரார்ஜிதேசாய்
  • இந்தியாவில் அரசியல் அதிகாரத்தின் பிரதானமூலம் எது?  மக்கள்
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிப்பது? ஒற்றைக்குடியுரிமை
  • இந்திய பாராளுமன்ற உள்ளடக்கம்? குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை
  • பாராளுமன்ற இருகூட்டத் தொடர்களுக்கிடையே அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இடைவெளி காலம் என்ன? ஆறு மாதங்கள்
  • தி.மு.க. எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1949
  • மக்களவையின் முதல் சபாநாயகர் யார்? கணேஷ் வாசுதேவர் மாவலங்கர்
  • சுதந்திரக் கட்சியை 1959ல் நிறுவியவர் யார்? சி. ராஜகோபாலாச்சாரி
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ளது? 22 மொழிகள்
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எப்பகுதி அடிப்படை உரிமைகளை உள்ளடக்கியது?  பகுதி III

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here