Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...
Top Performing

Adda’s One Liner Important Questions on TRB & TNPSC & TNUSRB

தமிழ் மொழியின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB மற்றும் TN TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தமிழ் மொழி குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

தமிழ் மொழி

  • “உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு ‘மலேசியா, அம்முதல் மொழியும் தமிழே” எனக் கூறியவர் ? க.அப்பாத்துரையார்.
  • சொல்லாராய்ச்சியில் பாவணாகும் வியந்த பெருமகனார் ? இரா.இளங்குமரனார்.
  • பாவாணர் நூலகம் அமைத்தவர்? இளங்குமரனார்
  • இரா.இளங்குமரனார் “திருவள்ளுவர் தவச்சாலை” மற்றும் “பாவாணர் நூலகம்” நிறுவிய இடம்? அல்லூர் (திருச்சி).
  • விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது’?இளங்குமரனார்.
  • தேவநேயப் பாவாணரின் சிறப்புப் பெயர் ? மொழி ஞாயிறு.
  • தமிழகத்தின் வடஎல்லை வேங்கட மலை எனவும், தெற்கெல்லை குமரிமலை எனவும் கூறும் நூல்கள்? புறநானூறு, சிலப்பதிகாரம்.
  • மொழிகள் வகை? 3 (தனிமொழி, தொடர்மொழி, பொது மொழி)
  • ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது? தனிமொழி
  • இரண்டுக்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது?தொடர்மொழி.
  • ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து வேறுபொருளையும் தருவது? பொதுமொழி.
  • எட்டு பிரித்து எழுதுக ? எள் + து (எள்ளை உண்).
  • வேங்கை பிரித்தெழுது? வேம் + கை (வேகின்ற கை).
  • ஒரு வினை (அ) செயலைக் குறிக்கும் பெயர்? தொழிற்பெயர்.
  • எண்,இடம்,காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது? தொழிற்பெயர்.
  • தொழிற்பெயருக்கு எ.கா ? ஈதல், நடத்தல்.

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
Adda's One Liner Important Questions on TRB & TNPSC & TNUSRB_4.1