தமிழ் மொழியின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB மற்றும் TN TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தமிழ் மொழி குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
தமிழ் மொழி
1.காசிக்காண்டம் நூலின் ஆசிரியர் ? அதிவீரராம பாண்டியர்.
2.காசி நகரத்தின் பெருமைகளை கூறும் நூல் எது ? காசிக்காண்டம்.
3.துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள் போன்றவைகளை பாடும் நூல் ? காசிக்காண்டம்.
4.விருந்தோம்பும் நெறிகளை வரிசைப்படுத்தும் நூல்? காசிக்காண்டம்
5.அதிவீரராம பாண்டியர் கூறும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்களின் எண்ணிக்கை ? 9.
6.முத்துக் குளிக்கும் ஊர்? கொற்கை
7.கொற்கையின் அரசர் யார் ? அதிவீரராம பாண்டியர்.
8.அதிவீரராம பாண்டியரின் பட்ட பெயர் ? சீவலமாறன்.
9.அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்கள் ? நைடதம், லிங்கபுராணம், திருக்கருவை அந்தாதி, வாயு சம்கிதை, கூர்ம புரணம், வெற்றி வேற்கை.
10.வெற்றி வேற்கையின் வேறு பெயர் ? நறுந்தொகை
11.மலைபடுகடாம்______ நூல்களுள் ஒன்று? பத்துப்பாட்டு
12.மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் ? பெருங்கௌசிகனார்.
13.மலைபடுகடாம் நூலின் மற்றொரு பெயர் ? கூத்தராற்றுப்படை.
14.மலைபடுகடாம் நூலின் அடிகள் ? 583.
15.மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன் ? நன்னன்.
16.மலைபடுகடாமில் ‘மலையை’ எதனுடன் உருவகம் செய்துள்ளார்? யானை.
17.பரிசு பெற வரும் புலவனுக்கு வழிகாட்டுவது போன்று எழுதப்பட்ட நூல் ? ஆற்றுப்படை நூல்கள்
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |