இயற்பியலின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இயற்பியல் முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இயற்பியல் குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இயற்பியல்
- மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்? 20 kHz
- ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது ______ ஆகும். அதிர்வுகள்
- மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக? நாய், வெளவால், டால்பின்
- செவியுணர் ஒலி அலைகள் எ.கா? குரல் நாண்கள், இழுத்துக் கட்டப்பட்ட கம்பி.
- குற்றொலி அலைகளின் அதிர்வெண்? 20 Hz ஐ விடக் குறைவான அதிர்வெண்.
- குற்றொலி அலைகள் எ.கா? கடல் அலைகள், திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலி.
- மீயொலி அலைகளின் அதிர்வெண்? 20,000 Hzக்கும் அதிகமான அதிர்வெண்.
- மனிதர்களால் கேட்க இயலாத ஒலி? குற்றொலி, மீயொலி.
- மீயொலி அலைகள் எழுப்பும் உயிரினம் எ.கா? வௌவால்
- ஒலி அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவையா? தேவை.
- ஒலி அலைகள் ஒரு? நெட்டலைகள்
- ஒலி அலைகள் அலைநீளம்? 1.65 செ.மீ முதல் 1.65 மீ.
- ஒலி அலைகள் திசைவேகம்? 340 மீவி-1
- ஒளி அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவையா? தேவையில்லை.
- ஒளி அலைகள் ஒரு? குறுக்கலைகள்
- ஒளி அலைகள் அலைநீளம்? 4X10-7 முதல் 7X10-7 மீ.
- ஒளி அலைகள் திசைவேகம்? 3 X 108 மீவி-1
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil