இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இந்திய அரசு அமைப்பு
- இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்? முரண்படும் போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்
- சட்டத்தின் அடிப்படையில் குடிமகன் என்ற உரிமையை நெறிப்படுத்துவது யார்? பாராளுமன்றம்
- எது மத்தியப் பட்டியலில் சேராது? பொது சுகாதாரம்
- மரண தண்டணையை ரத்து செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது? குடியரசுத் தலைவர்
- இந்தியாவின் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு? 1950
- நமது அரசியலமைப்புச் சட்டம் எப்பொழுது அமுலிற்கு வந்தது? 26 ஜனவரி 1950
- அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் இராஜேந்திர பிரசாத்
- இந்தியா ஓர் கூட்டாட்சி நாடு, ஏனெனில் இந்நாட்டில்? அதிகாரப் பங்கீடு உள்ளது
- அரசியலமைப்பு ரீதியாக மைய இந்தியாவின் தலைவர் யார்? குடியரசுத் தலைவர்
- தற்போது எது அடிப்படை உரிமையல்ல? சொத்துரிமை
- இந்தியக் குடியரசுத் தலைவர் இதுவரை நிதி நெருக்கடிக்கான அவசர சட்டத்தை அமுல்படுத்தியது? எப்பொழுதும் இல்லை
- மந்திரிக்குழு பொறுப்பாக இருப்பது? பாராளுமன்றம்
- தற்போது மக்களவையில் அனுமதிக்கப்பட்ட மொத்த உறுப்பினர் எண்ணிக்கை யாது? 545
- பஞ்சாயத்து முறை அரசியலமைப்பின் ஒரு பகுதியானது கீழ்க்கண்ட எந்தத் திருத்தத்தினால் ஆகும்? 73 வது திருத்தம்
- சர்க்காரியா கமிஷன் நியமனம் செய்யப்பட்டது? மத்திய மாநில அரசு உறவு முறையை ஆராய
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil