இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இந்திய அரசு அமைப்பு
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் எத்தனை மொழிகள் உள்ளன? 22 மொழிகள்
- குடிமைச் சமூகத்தினை, அரசிடமிருந்து பிரித்து முதலில் வேறுபடுத்திய அரசியல் சிந்தனையாளர்? G.W.F. ஹீகல்
- நிதி மசோதாக்கள் மாநில அவையினால் எத்தனை நாட்கள் மட்டும் தாமதப்படுத்தலாம்? 14 நாட்கள்
- சாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை? 10 லட்சம்
- தேர்தல் ஆணையர்கள் இவரால் நியமிக்கப் படுகின்றனர்? இந்தியக் குடியரசுத் தலைவர்
- பாராளுமன்ற நடைமுறையில் பூஜ்ய நேரம் என்பது _____ நாட்டின் கண்டுபிடிப்பு? இந்தியா
- பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தல்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்யும் அரசியலமைப்பு சட்ட ஷரத்து? Art. 243 D
- தலைமை தேர்தல் ஆணையர், யாருக்கு இணையாக அதிகாரம் பெற்றிருப்பவர்? உச்சநீதிமன்ற நீதிபதி
- தமிழ்நாடு சட்டமன்ற மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை? 234
- மாவட்ட ஆட்சியர் ஒரு? பொது தன்மையாளர்
- இந்தியாவின் தலைமை தணிக்கை அதிகாரியை நியமனம் செய்பவர் யார்?ஜனாதிபதி
- தகவல் உரிமைச் சட்டம் 2005 எந்தெந்த அரசியலமைப்பு விதிகளை அடிப்படையாகக் கொண்டது? அரசியலமைப்பு விதிகள் 19 மற்றும் 21
- 92-வது அரசியலமைப்பு திருத்தம் மூலமாக 8-வது அட்டவணையில் எத்தனை மொழிகள் சேர்க்கப் பட்டன? 4 மொழிகள்
- எந்த அரசியல் அமைப்பு திருத்தம் வாக்கு செலுத்துவதற்கான வயதை 21-லிருந்து 18 ஆக குறைத்தது? 61 வது அரசியல் அமைப்பு திருத்தம்
- இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் 1977-ல் எந்த வார்த்தை சேர்க்கப்பட்டது? மதசார்பற்ற
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil