தமிழ் மொழியின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB மற்றும் TN TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தமிழ் மொழி குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
தமிழ் மொழி
- இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் யார்? மன்னன்.
- இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்? இறைவன்.
- இங்கு நகரப் பேருந்து நிற்குமா என்று வழிப்போக்கர் கேட்டது எவ்வகையான வினா? அறியாவினா.
- இங்கு நகரப் பேருந்து நிற்குமா என்று வழிப்போக்கர் கேட்டும் கேள்விக்கு, ‘அதோ, அங்கே நிற்கும் என்று மற்றொருவர் கூறியது எவ்வகையான விடை? சுட்டு விடை.
- “ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர்”. இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடராக எழுதுக? ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
- கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன? அங்கு வறுமை இல்லாததால்..
- “கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்”. இத்தொடருக்கான வினா வாக்கியம் என்ன? கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
- குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்? குறிஞ்சி, மருதம்,நெய்தல் நிலங்கள்
- ‘மதிநுட்பம்’ சொல்லின் பொருள்? நுண்ணறிவு.
- பொருள்ளல்லவரைப் பொருளாகச் செய்வது? செல்வம்.
- இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது? சொற்பொருள் பின்வரு நிலையணி.
- தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதிய நூல்? சிலப்பதிகாரம்
- சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க? உழவு, ஏர், மண், மாடு
- ‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்” என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்? நெறியோடு நின்று காவல் காப்பவர்.
- மாலவன் குன்றம் பொருள்? திருப்பதி மலை
- வேலவன் குன்றம் பொருள்? திருத்தணி மலை.
- இரு நாட்டு அரசர்களும் தும்பைச் ஆடிப் போரிடுவதன் காரணம்? வலிமையை நிலைநாட்டல்.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |