Tamil govt jobs   »   Study Materials   »   Chemical Bonds for TNPSC
Top Performing

Chemical Bonds for TNPSC | வேதிப் பிணைப்பு

வேதிப் பிணைப்பு அல்லது இரசாயனப் பிணைப்பு என்பது அணுக்கள், மூலக்கூறுகள் போன்றவற்றிற்கு இடையிலான ஈர்ப்பினால் உண்டாகும் தொடர்புகளுக்குக் காரணமான இயற்பியல் செயற்பாடு ஆகும்.  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் பல விசைகளால் பிணைந்து வேதிப்பொருட்கள் உருவாகின்றன. அணுக்களுக்கு இடையிலான இத்தகைய ஈர்ப்பு விசையே வேதிப் பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த கட்டுரையில், Chemical Bonds இன் வகைகள், அவற்றின் பண்புகள், அவற்றின் வலிமை போன்றவற்றை நாம் விரிவாக பார்க்கவுள்ளோம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Chemical Bonds Overview | வேதிப்பிணைப்பு ஒரு கண்ணோட்டம்

Chemical Bonds for TNPSC | வேதிப் பிணைப்பு_3.1
Chemical Bonds
  • வேதிப்பிணைப்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள், மூலக்கூறுகள் அல்லது அயனிகளுக்கு இடையே ஒரு வேதியியல் பிணைப்பை உருவாக்குவதைக் குறிக்கிறது. இந்த வேதிப்பிணைப்புகள்தான் அணுக்களை, உருவாகும் கலவையில் ஒன்றாக வைத்திருக்கின்றன.
  • வேதியியற் பிணைப்பு, ஈரணு அல்லது பல்லணு வேதியியற் சேர்மங்களின் உருவாக்கத்திற்கான உறுதிப்பாட்டை வழங்குகிறது.  எதிர்மின் மற்றும் அணுக்கருக்களுக்கிடையே நிகழும் நிலைமின் ஈர்ப்பு விசையின் காரணமாக அல்லது இருமுனை ஈர்ப்பு விசை காரணமாக இத்தகைய பிணைப்பு உருவாகிறது.
  • இயற்கையாக நம்மைச் சுற்றியுள்ள உலோகங்கள், பளிங்குகள், ஈரணு வாயுக்கள், மூலக்கூறுகள் போன்ற யாவும் வேதியியற் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இப்பிணைப்புகள் பருப்பொருளின் கட்டமைப்பு குறித்த ஒட்டுமொத்த இயல்புகளை நமக்கு விளக்குகின்றன.

Types of Chemical Bonds | வேதிப்பிணைப்பு வகைகள்

Chemical Bonds for TNPSC | வேதிப் பிணைப்பு_4.1
Types of Chemical Bonds

பொருட்கள் இரசாயனப் பிணைப்பில் பங்கேற்கும் போது, அவ்வாறு உருவாகும் சேர்மத்தின் நிலைத்தன்மையை, அவை கொண்டிருக்கும் இரசாயனப் பிணைப்புகளின் வகை மூலம் அளவிட முடியும்.

உருவாகும் இரசாயன பிணைப்புகளின் வகை, வலிமை மற்றும் பண்புகளால் வேறுபடுகிறது. அணுக்களுக்கிடையே நிகழும் வேதிப் பிணைப்புகளில், நான்கு வகையான வேதிப்பிணைப்புகள் உள்ளன. நான்கு வகையான இரசாயன பிணைப்புகள் பின்வருமாறு:

  1. அயனிப் பிணைப்புகள்
  2. சகப் பிணைப்புகள்
  3. முனைவு இணைதிறன் சகப் பிணைப்புகள்
  4. ஹைட்ரஜன் பிணைப்புகள்

இரசாயன பிணைப்பில் இந்த வகையான பிணைப்புகள் இரண்டு அணுக்கள்/மூலக்கூறுகளுக்கு இடையில் எலக்ட்ரான்களின் இழப்பு, ஆதாயம் அல்லது பகிர்வு ஆகியவற்றிலிருந்து உருவாகின்றன.

Also Read : Education System in Tamil Nadu | தமிழ்நாட்டில் கல்வி முறை | Unit.9 Study Material for TNPSC Group 2-Part 2

Ionic Bonds | அயனிப் பிணைப்புகள்

Chemical Bonds for TNPSC | வேதிப் பிணைப்பு_5.1
Ionic Bonds
  • அயனிப் பிணைப்பு மின்வலுப் பிணைப்பு அல்லது மின்மவணுப் பிணைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
    ஒரு அணு மற்றொரு அணுவுக்கு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களைத் தேவைக்கேற்ப வழங்குவதால் உண்டாகும் வேதிப் பிணைப்பாகும். இது இருவேறுவகை எதிரெதிர் மின்சுமையுள்ள அயனிகளுக்கிடையே நிலவும் மின் கவர்ச்சி விசையாகும்.
  • அயனிப் பிணைப்புகள் ஓர் நேர்மின் அயனிக்கும், பொதுவாக ஓர் உலோகம் (மாழை) மற்றும் எதிர்மின் அயனிக்கும், பொதுவாக ஓர் அலோகம் (மாழையிலி) இடையே உருவாவதாகும்.
  • முழுவதுமான அயனிப் பிணைப்பு இருக்க இயலாது, அனைத்து அயனிப் பிணைப்பு சேர்மங்களும், பல்வேறளவுகளில் சகப் பிணைப்பு (பகிர்வுப் பிணைப்பு) கொண்டிருக்கும். எனவே அயனிப்பிணைப்பு என்பது சகப் பிணைப்புத் தன்மையை விட அயனிப்பிணைப்புத் தன்மை கூடுதலாக உள்ளவை என்று கூறலாம். இரு அயனிகளுக்கும் உள்ள மின்னூட்டுக்களின் வேறுபாடு கூடக் கூட, சகப் பிணைப்பை விட அயனிப் பிணைப்புத் தன்மை கூடுகிறது.
  • ஒரு பகுதி அயனிப் பிணைப்பாகவும், மறு பகுதி சகப் பிணைப்பாகவும் உள்ள பிணைப்புகள், முனைவுறு சகப் பிணைப்புகள் (முனைவுறு பகிர்வுப் பிணைப்பு) என அழைக்கப்படுகின்றன.
  • Na + F → Na+ + F− → NaF
    சோடியம் (Na) என்ற உலோகம் 2,8,1 என்ற எண்ணிக்கையில் எலக்ட்ரான்களை முறையே 1,2,3 வட்டப்பாதைகளில் பெற்றுள்ளது. இது தனது 3 ஆவது வட்டப்பாதையிலுள்ள ஒரு எலக்ட்ரானை இழந்து சோடியம் நேர்மின் அயனியாக மாறுகிறது. இவ்வயனி தற்போது 2 ஆவது வட்டப்பாதையை கடைசி வட்டப்பாதையாகக் கொண்டு அதில் எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பதால் நிலைப்புத் தன்மையை அடைகிறது.புளோரின் (F) என்ற அலோகம் 2,7 என்ற எண்ணிக்கையில் எலக்ட்ரான்களை முறையே 1,2, வட்டப்பாதைகளில் பெற்றுள்ளது. சோடியம் வழங்கும் ஓர் எலக்ட்ரானை இரண்டாவது வட்டப்பாதையில் ஏற்று புளோரைடு என்னும் எதிர்மின் சுமையுடைய அயனியாக மாறுகிறது. இந்த அயனி தற்போது 2 ஆவது வட்டப்பாதையை கடைசி வட்டப்பாதையாகக் கொண்டு அதில் எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பதால் நிலைப்புத் தன்மையை அடைகிறது.

    இத்தகைய நிலைப்புத் தன்மையை அடைவதற்காக, சோடியம் அணு எலக்ட்ரான் வழங்கியாகவும் புளோரின் அணு எலக்ட்ரான் ஏற்பியாகவும் செயல்பட்டு முறையே நேர், எதிர் மின் சுமைகொண்ட அயனிகளாக மாற்றம் பெறுகின்றன.

  • திடநிலையில் மின்கடத்தா அயனிச் சேர்மங்கள், உருகிய நிலையில் அல்லது கரைசல்களில் மின்கடத்தியாக விளங்குகின்றன. இவற்றிற்கு பொதுவாக உயர்ந்த உருகுநிலை இருக்கும். பெரும்பாலும் நீரில் இவை கரையும்.

Covalent Bonds | சகப் பிணைப்புகள்

Chemical Bonds for TNPSC | வேதிப் பிணைப்பு_6.1
Covalent Bonds
  • சகப்பிணைப்பு அல்லது பங்கீட்டு வலுப்பிணைப்பு என்பது இரு அணுக்கள் எலக்ட்ரான்களை சமமாக வழங்கி, சமமாகப் பகிர்ந்து கொள்வதால் உருவாகும் ஒருவகை வேதிப்பிணைப்பு ஆகும்.
  • இரண்டு அணுக்கள் எதிரெதிர் சுழற்சி எண் (spin) கொண்ட இணையான எலக்ட்ரான்களைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதால் சகப்பிணைப்பு உண்டாகிறது. இப்பிணைப்பில் பங்குகொள்ளும் இரு அணுக்களுமே எலக்ட்ரான்களை தங்கள் அணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் நேர்மின்விசைகளால் கவர முயலும். இதனால் உருவாகும் நிகர விசை, சகப்பிணைப்பை உண்டாக்குகிறது.
  • Cl + Cl → Cl2

இதில் குளோரின் அணு ஒவ்வொன்றும் 2, 8, 7 என்ற எண்ணிக்கையில் எலக்ட்ரான்களை மூன்று வட்டப்பாதைகளில் முறையே பெற்றுள்ளன. தங்களது கடைசி வட்டப்பாதையில் உள்ள 7 எலக்ட்ரான்களில் ஒன்றை, ஒவ்வொரு குளோரின் அணுவும் வழங்குவதால், அவ்விரு எலக்ட்ரான்களும் இரண்டு குளோரின் அணுக்களால் சமமாகப் பகிர்ந்து கொண்டு எண்ம அமைப்பைப்பெற்று நிலைத்தன்மையை வாய்ந்த குளோரின் மூலக்கூறு, சகப்பிணைப்பால் உருவாகிறது.

  • இவை அறை வெப்பநிலையில் பொதுவாக திண்மம், திரவம், வாயு ரூபத்தில் இருக்கும். இவை பொதுவாக மின்சாரத்தைக் கடத்தாது. இவற்றின் உருகுநிலை, கொதிநிலை மற்றும் நீரில் கரைதிறன், பொதுவாக அயனிச் சேர்மங்களை விடக் குறைவாகும்.

Polar Covalent Bonds | முனைவு இணைதிறன் சகப் பிணைப்புகள்

Chemical Bonds for TNPSC | வேதிப் பிணைப்பு_7.1
Polar Covalent Bonds
  • சகப் பிணைப்புகள் இயற்கையில் துருவம் அல்லது துருவமற்றதாக இருக்கலாம். முனைவு இணைதிறன் பிணைப்பில், எலக்ட்ரான்கள் சமமற்ற முறையில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன, ஏனெனில் அதிக எதிர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள அணு, எலக்ட்ரான் இணையை தனக்கு நெருக்கமாக இழுக்கிறது மற்றும் குறைந்த எதிர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள அணுவிலிருந்து விலக்குகிறது. அத்தகைய துருவ மூலக்கூறுக்கு நீர் ஒரு எடுத்துக்காட்டு.
  • அணுக்களுக்கு இடையில் எலக்ட்ரான்களின் சீரற்ற இடைவெளி காரணமாக அணுவின் வெவ்வேறு பகுதிகளில், மின்னூட்ட வேறுபாடு எழுகிறது. மூலக்கூறின் ஒரு முனை, பகுத்த நேர் மின்னூட்டத்துடனும், மறுமுனை பகுத்த எதிர் மின்னூட்டத்துடனும் இருக்கிறது.

Hydrogen Bonds | ஹைட்ரஜன் பிணைப்புகள்

Chemical Bonds for TNPSC | வேதிப் பிணைப்பு_8.1
Hydrogen Bonds
  • அயனி மற்றும் சகப் பிணைப்புடன் ஒப்பிடும்போது, ஹைட்ரஜன் பிணைப்பு என்பது இரசாயன பிணைப்பின் பலவீனமான வடிவமாகும். இது ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனுக்கு இடையேயான துருவ சகப் பிணைப்பின் வகையாகும், இதில் ஹைட்ரஜன் ஒரு பகுத்த நேர்மின் சுமையை உருவாக்குகிறது. எலக்ட்ரான்கள் அதிக எதிர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள ஆக்ஸிஜன் அணுவிற்கு நெருக்கமாக இழுக்கப்படுகின்றன என்பதை இது குறிக்கிறது.
  • இது ஹைட்ரஜனை எந்த ஒரு அண்டை அணுவின் எதிர்மின் சுமையை நோக்கி ஈர்க்கும் போக்கை உருவாக்குகிறது. இந்த வகை இரசாயன பிணைப்பு ஹைட்ரஜன் பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது தண்ணீரால் வெளிப்படுத்தப்படும் பல பண்புகளுக்கு காரணமாகும்.

Also Read : TNPSC TAMILNADU GENERAL KNOWLEDGE Q&A PART-19 PDF 

Characteristics of Chemical Bonds | வேதிப் பிணைப்பின் பண்புகள்

Bond Length | பிணைப்பின் நீளம்

Chemical Bonds for TNPSC | வேதிப் பிணைப்பு_9.1
Bond Length
  • வேதிப் பிணைப்பின் போது, ​​அணுக்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வரும்போது, ​​அவற்றுக்கிடையே ஈர்ப்பு ஏற்படுகிறது மற்றும் அமைப்பின் நிலையாற்றல், ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறைந்தபட்சமாகும் வரை குறைந்து கொண்டே செல்கிறது. அணுக்கள் இன்னும் நெருக்கமாக வந்தால், எதிர்த்தள்ளல் தொடங்குகிறது மற்றும் மீண்டும் அமைப்பின் நிலையாற்றல் அதிகரிக்கத் தொடங்குகிறது.
  • இரண்டு பிணைக்கப்பட்ட அணுக்களின் கருக்களின் மையங்களுக்கு இடையே உள்ள சமநிலை தூரம், அதன் பிணைப்பு நீளம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்ஸ்ட்ராம் (A0) அல்லது பைகோமீட்டர் (pm) அடிப்படையில் வெளிப்படுத்தப்படுகிறது.

பிணைப்பு நீளத்தை பாதிக்கும் காரணிகள் : 

  1. அணுக்களின் அளவு: அணுவின் அளவு அதிகரிக்கும் போது பிணைப்பு நீளம் அதிகரிக்கிறது. HI > HBr > HCl > HF
  2. பிணைப்பின் பெருக்கம்: பிணைப்பு வரிசையின் அதிகரிப்புடன், பிணைப்பின் நீளம் குறைகிறது.

Also Read : Education System in Tamil Nadu | தமிழ்நாட்டில் கல்வி முறை | Unit.9 Study Material for TNPSC Group 2-Part 1

Bond Enthalpy | பிணைப்பின் அகவெப்பம்

Chemical Bonds for TNPSC | வேதிப் பிணைப்பு_10.1
Bond Enthalpy
  • அணுக்கள் நெருங்கி வரும்போது, அவற்றுக்கிடையேயான இரசாயனப் பிணைப்பினால் ஆற்றல் வெளியிடப்படுகிறது. மூலக்கூறை தனிப்பட்ட வாயு அணுக்களாகப் பிரிக்க, ஒரு வகையிலான பிணைப்புகளின், ஒரு மோலை உடைக்கத் தேவைப்படும் ஆற்றலின் அளவு, பிணைப்பு இணைபிரிவு ஆற்றல் அல்லது பிணைப்பு அகவெப்பம் எனப்படும்.
  • பிணைப்பு அகவெப்பம் பொதுவாக KJ mol-1 இல் வெளிப்படுத்தப்படுகிறது. பிணைப்பு இணைபிரிவு ஆற்றல் பெரியது எனில், பிணைப்பு வலிமை அதிகம் ஆகும்.

Strength of Chemical Bonds | வேதிப்பிணைப்புக்களின் வலிமை

பிணைப்புக்களின் வலிமை பரந்த அளவில் வேறுபட்டு காணப்படுகின்றன. பொதுவாக அயனிப் பிணைப்புக்கள் வலுவானவை. ஐதரசன் பிணைப்புக்களும், வாண்டெர்வால் பிணைப்புக்களும் வலிமை குறைந்தவை. எனினும், வலிமை குறைந்த பிணைப்புகளில் வலிமை கொண்ட பிணைப்புகளும், வலிமை மிகுந்த பிணைப்புகளில் குறைந்த வலிமையுள்ள பிணைப்புக்களும் அமையக் கூடும் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

Apply for : TNCSC Recruitment 2021, Apply 435 TNCSC Tiruvarur Vacancies @ www.tncsc.tn.gov.in

Chemical Bonds Conclusion | வேதிப்பிணைப்பு முடிவுரை 

இயற்கையாக நம்மைச் சுற்றியுள்ள உலோகங்கள், பளிங்குகள், ஈரணு வாயுக்கள், மூலக்கூறுகள் போன்ற யாவும் வேதியியற் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இப்பிணைப்புகள் பருப்பொருளின் கட்டமைப்பு குறித்த ஒட்டுமொத்த இயல்புகளை நமக்கு விளக்குகின்றது.

தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 1  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

*****************************************************

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Read More:

Weekly Current Affairs One-Liners | 18th to 24th of October 2021

Weekly Current Affairs In Tamil 1st Week Of October 2021

Weekly Current Affairs One-Liners | 11th to 17th of October 2021 Weekly Current Affairs in Tamil 2nd Week of October 2021

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் தமிழில் PDF செப்டம்பர் 2021

தமிழ்நாடு மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் தமிழில் PDF செப்டம்பர் 2021

Coupon code- FEST75-75% OFFER

TNPSC GROUP 4, 1, 2, 2A GENERAL TAMIL LIVE CLASS BATCH BY ADDA247 STARTS OCT 14 2021
TNPSC GROUP 4, 1, 2, 2A GENERAL TAMIL LIVE CLASS BATCH BY ADDA247 STARTS OCT 14 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Chemical Bonds for TNPSC | வேதிப் பிணைப்பு_12.1