Table of Contents
TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, UPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.
கட்டுரை என்பது, ஒரு பொருளைப் பற்றி, ஒரு கட்டுக்கோப்புடன், அனைவரையும் ஈர்க்கும் முறையில் அமைக்கப்பட்ட ஒன்றாகும்.
கட்டுரை அமைப்பு
எந்தப் பொருளைப் பற்றிக் கட்டுரை எழுதினாலும், அது, முன்னுரை – பொருளுரை – முடிவுரை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். முன்னுரையும், முடிவுரையும், ஒவ்வொரு பத்திக்குள் அமைய வேண்டும்.
ஒரு கட்டுரையின் முன்னுரை, எழுதப் போகும் கருத்தை வகுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும். அதே சமயம், முடிவுரையானது சொல்லப்பட்ட கருத்துகளைத் தொகுத்துக் கூறுவதாக அமைய வேண்டும். முன்னுரையையும், முடிவுரையையும் படித்தாலே, ஒரு கட்டுரையின் சிறப்புத் தன்மை வெளிப்பட வேண்டும்.
பொருளுரையானது, கொடுக்கப்பட்ட கருத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததை, நீங்கள் அறிந்த வழிகளில் விளக்கிக் கூறும் பகுதி ஆகும். ஆகையால், அதைப் பல பத்திகளாகப் பிரித்து எழுத வேண்டும். உங்கள் பொருளுரை, எடுத்துக்கொள்ளும் பொருளுக்கு ஏற்ற, உள் தலைப்புகளை கொண்டிருக்க வேண்டும். அதன் ஒவ்வொரு வாக்கியமும், ஒரு புதிய செய்தியை கொடுக்க வேண்டும்.
கருத்தில்கொள்ள வேண்டியவை:
- கொடுக்கப்பட்ட தலைப்பு தொடர்பாக, நீங்கள் அறிந்ததை திரட்டி அதை முறைப்படுத்தவேண்டும்.
- நீங்கள் அறிந்த மேற்கோள்கள், பழமொழிகள், தரவுகள் மற்றும் புள்ளி விவரங்களை பயன்படுத்துங்கள்.
- நிறுத்தற் குறிகளை பயன்படுத்துவது, சாலச் சிறந்தது.
- முடிந்த அளவிற்கு, நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்துவுது சிறந்தது.
தவிர்க்க வேண்டியவை:
கூறியதை திரும்ப கூறுவது, முரணாக கூறுவது, கொடுக்கப்பட்ட கருத்திலிருந்து திசை மாறுவதை தவிர்க்கவேண்டும்.
ஒரு கருத்தினைக் கொண்டு நீங்கள் வரையறுக்கும் கட்டுரையானது, படிப்போருக்கு அக்கருத்தை நன்மொழியில், சுருக்கமாக விளக்குவது போன்று இருக்கவேண்டும்.
***************************************************
Use Coupon code: JUNE77 (77% offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil telegram group | Adda247 Tamil Youtube