Tamil govt jobs   »   Study Materials   »   Constitution of India
Top Performing

Constitution of India | இந்திய அரசியலமைப்பு | TNPSC | RRB NTPC

இந்திய அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும். இந்திய அரசியலமைப்பு  ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சாணி ஆகும். குறிப்பாக அரசின் நிறுவனக் கட்டமைப்பு பல்வேறு துறைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளிடையே அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் கட்டமைப்புடன் இந்திய அரசியலமைப்பு சம்மந்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (U.S.A) தோன்றியது.  Constitution of India பற்றி கீழ்கண்ட கட்டுரையில் காணலாம்.

 

Constitution of India
Constitution of India

Need for a constitution(இந்திய அரசியலமைப்பின் அவசியம்):

இந்திய அரசியலமைப்பின் அனைத்து மக்களாட்சி நாடுகளும் தங்களை நிர்வகித்துக் கொள்ள ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை பெற்றுள்ளன. ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ விரும்பும் வகையில் சில அடிப்படைக் கொள்கைகளை அரசியலமைப்பு வகுத்து கொடுக்கிறது. நமது சமூகத்தின் அடிப்படை தன்மையை அரசியலமைப்பு நமக்கு தெரிவிக்கிறது.

பொதுவாக ஒரு நாடு பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டுள்ள பல்வேறு இன மக்களைக் கொண்டிருக்கும். எனவே அரசியலமைப்பானது அவ்வாறான குடிமக்களின் நம்பிக்கைகளை நிறைவு செய்ய உதவி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.

 

 

Constitution of India: Formation (இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்):

1946ஆம் ஆண்டு, அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இச்சபையில் 292 மாகாணப் பிரதிநிதிகள், 93 சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள், பலுச்சிஸ்தானின் சார்பில் ஒருவர் (1) மற்றும் மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் மூவர் (3) என மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர். அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம், 1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் நடைபெற்றது. இச்சபையின் தற்காலிக தலைவராக மூத்த உறுப்பினர் Dr. சச்சிதானந்த சின்கா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியலமைப்பை உருவாக்க கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் போதே அவர் இறந்ததைத் தொடர்ந்து, Dr. இராஜேந்திரபிரசாத் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராகவும், H.C. முகர்ஜி மற்றும் V.T. கிருஷ்ணமாச்சாரி இருவரும் துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத் தொடர் 11 அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது 2473 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் சில ஏற்கப்பட்டன. அரசியல் நிர்ணய சபை பல்வேறு குழுக்களின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டது. இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுத் தலைவர் Dr. B.R. அம்பேத்கர் தலைமையின் கீழ் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. எனவே அவர் “இந்திய அரசியலமைப்பின் தந்தை” என அறியப்படுகிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்ட பின்னர், பொதுமக்கள், பத்திரிக்கைகள், மாகாணசட்டமன்றங்கள்மற்றும் பலரால் விவாதிக்கப்பட்டது. இறுதியாக முகவுரை, 22 பாகங்கள், 395 சட்டப்பிரிவுகள்  மற்றும் 8 அட்டவணைகளைக் கொண்ட இந்திய அரசியலமைப்பு, 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த நாளே ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 

READ MORE: Tamil Nadu’s 69% Reservation despite the 50% Cap

 

Constitution of India: Features (இந்திய அரசியலமைப்புச்  சட்டத்தின் சிறப்பம்சங்கள் ):

  • உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.
  • இதன் பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை.
  • இது நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
  • கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.
  • மத்தியில் மட்டுமல்லாமல் மாநிலங்களிலும் நாடாளுமன்ற முறையைத் தோற்றுவிக்கிறது.
  • இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது. சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
  • உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.
  • ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.
  • சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு சிறப்பு விதிகள் மூலம் சலுகைகள் வழங்க வகை செய்கிறது.

READ MORE : HUMAN RIGHTS

 

Constitution of India: Preamble (இந்திய அரசியலமைப்பு முகவுரை):

Preamble of Indian Constitution
Preamble of Indian Constitution

முகவுரை’ (Preamble) என்ற சொல் அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதைக் குறிக்கிறது. இது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களை உள்ளடக்கியது. இது அரசியலமைப்பின் சுருக்கம் அல்லது சாராம்சத்தைக் கொண்டது. இது பெரும் மதிப்புடன் “அரசியலமைப்பின் “திறவுகோல்” என குறிப்பிடப்படுகிறது.

1947ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜவகர்லால் நேருவின் ‘குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை அமைந்துள்ளது. முகவுரையானது 1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி திருத்தப்பட்டது.அதன்படி,சமதர்மம்,சமயச்சார்பின்மை, ஒருமைப்பாடு, என்ற மூன்று புதிய சொற்கள் சேர்க்கப்பட்டன. ‘இந்திய மக்களாகிய நாம்’ என்ற சொற்களுடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது. இது இந்திய அரசியலமைப்புத் தனது அதிகாரத்தை மக்களிடமிருந்து பெறப்பட்டதைத் தெளிவுபடுத்துகிறது. இதிலிருந்து, இந்திய மக்களே இந்திய அரசியலமைப்பின் ஆதாரம் என நாம் கூறமுடியும்.

 

Constitution of India : NOTES (இந்திய அரசியலமைப்பு குறிப்புகள்):

இந்திய அரசியலமைப்பு

முதல் கூட்டம் 9 டிசம்பர்  1946
இந்திய அரசியலமைப்பு  ஒப்புதல் வழங்கிய நாள் 26 நவம்பர் 1949
நடைமுறைப்படுத்திய தேதி 26 ஜனவரி 1950
அட்டவணைகள் 8
பாகங்கள் 22
சட்டப்பிரிவுகள் 395
இருக்கைகள் 389
தற்காலிக தலைவர் சச்சிதானந்த சின்ஹா
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர் Dr. இராஜேந்திரபிரசாத்
வரைவு குழுவின் தலைவர் Dr. B.R. அம்பேத்கர்
அரசியலமைப்பு ஆலோசகர் B. N. ராவ்
இந்திய அரசியலமைப்பின் தந்தை Dr. B.R. அம்பேத்கர்

 

Constitution of India: Conclusion  (இந்திய அரசியலமைப்பு முடிவுரை):

இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு என நமது அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி என அனைத்திலும் பாதுகாப்பு வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திரமாகச் சிந்தித்தல், உணர்வுகளை வெளிப்படுத்துதல், நம்பிக்கை, சமய வழிபாடு ஆகியவற்றில் சுதந்திரமாக செயல்பட இந்திய அரசியலமைப்பு உத்திரவாதம் அளிக்கிறது.  இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 4  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 3 அல்லது 4 வினாக்கள் கேட்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது.

 

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: HAPPY(75% OFFER)

TNPSC GROUP 4 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON SEP 13 2021
TNPSC GROUP 4 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON SEP 13 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

இந்திய அரசியலமைப்பு | Constitution of India_6.1