TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB மற்றும் TNFUSRC போன்ற தேர்வுகளுக்கான தினசரி விண்ணப்பங்களின் தொகுப்பை Current Affairs Daily Quiz adda247 வழங்குகிறது. தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு பாடத்திட்டத்தில் தரமான தினசரி வினாடி வினாக்களை தமிழில் வழங்குகிறோம்.
Current Affairs Daily Quiz (நடப்பு நிகழ்வுகள் வினா விடை) TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்குப் பயன்படும் வகையில் தினசரி தொகுப்பாக adda247 உங்களுக்கு வழங்குகிறது. தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புகளுக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் தமிழில் தருகிறோம்.
1)’பாரம்பரிய தளங்களை ஏற்று கொள்ளுதல் திட்டம்’ 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
a) பியூஷ் கோயல்
b) ராஜ்நாத் சிங்
c) கிஷன் ரெட்டி
d) கஜேந்திர சிங் ஷெக்வத்
2)G20 உச்சிமாநாடு 2023 இல் யார் பங்கேற்கவில்லை?
a) இம்மானுவேல் மக்ரோன்
b) ஜோ பைடேன்
c) ஆண்டனி அல்பானீஸ்
d) சீ சின் பிங்
3) எழுத்தறிவு வாரம் எப்போது கடைப்பிடிக்கிறது?
a) செப்டம்பர் 1 முதல் 8 வரை
b) செப்டம்பர் 8 முதல் 15 வரை
c) செப்டம்பர் 16 முதல் 23 வரை
d) செப்டம்பர் 24 முதல் 30 வரை
4)உட்கேலா விமான நிலையம் எங்கு அமைந்துள்ளது ?
a) அசாம்
b) ஒடிசா
c) பீகார்
d) மணிப்பூர்
5) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் எத்தனை செயற்கைக்கோள்களை விண்ணுக்கு செலுத்தியது ?
a)18
b)20
c)22
d)24
6)வனுவாட்டுவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
a) சாடோ கில்மேன்
b)ஜோ நடுமான்
c)எட்வர்ட் நடபேய்
d) செர்ஜ் வோஹோர்
7) தனித்திறன் கொண்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்காக SABAL யோஜனாவை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?
a) ஆந்திரா பிரதேசம்
b) இமாச்சல பிரதேசம்
c)உத்தர பிரதேசம்
d)அருணாச்சல பிரதேசம்
8)NASSCOM தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
a) அனந்த் மகேஸ்வரி
b) ராஜேஷ் நம்பியார்
c)ஆர்.சந்திரசேகர்
d) ராமன் ராய்
9)ISSF உலக சாம்பியன்ஷிப் 2023ல் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றது?
a) 8
b)10
c)12
d)14
10) ISSF உலக சாம்பியன்ஷிப் 2023போட்டியில் இந்தியா _____ இடத்தைப் பிடித்தது ?
a) 1வது
b) 2வது
c)3வது
d)4வது
TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிறத் தேர்வுகள் போன்ற தேர்வுகளில் உங்கள் வெற்றி விகிதத்தை அதிகரிக்கவும்.
தினசரி நடப்பு நிகழ்வுகள் தினசரி வினாடிவினா தீர்வுகள்
1.c)கிஷன் ரெட்டி
பண்பாடு , சுற்றுலா மற்றும் வடகிழக்கு பகுதிகளின் மேம்பாடு துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி ‘பாரம்பரியத்தை தத்தெடுப்பு 2.0’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
2. d) சீ சின் பிங்
செப்டம்பர் 9 மற்றும் 10 ,2023 இல் புது தில்லியில் நடைபெற உள்ள G20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங் பிங் பங்கேற்கவில்லை.
3. a) செப்டம்பர் 1 முதல் 8 வரை
கல்வி அமைச்சகம் செப்டம்பர் 1 முதல் 8 வரை எழுத்தறிவு வாரத்தைக் கடைப்பிடிக்கிறது.
4. b) ஒடிசா
உட்கேலா விமான நிலையம் ஒடிசாவில் அமைந்துள்ளது. இது ஒடிசாவின் ஐந்தாவது விமான நிலையமாகும்.
5. c) 22
ஸ்பேஸ் எக்ஸ் ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனம் 22 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.
6. a) சடோ கில்மன்
சடோ கில்மன் 5வது முறையாக வனுவாட்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
7. b) இமாச்சல பிரதேசம்
இமாச்சலப்பிரதேசம் தனித்திறன் கொண்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்காக SABAL யோஜனாவை அறிமுகப்படுத்தியது.
8. b) ராஜேஷ் நம்பியார்
NASSCOM தலைவராக ராஜேஷ் நம்பியார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ஆனந்த் மகேஸ்வரி தலைவராக இருந்தார்.
9. d) 14
அசர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு உலக சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் இந்தியா 6 தங்கம் மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
10. c) 3வது
ISSF உலக சாம்பியன்ஷிப் 2023ல் இந்தியா 3வது இடத்தைப் பிடித்தது.சீனா 28 பதக்கங்களுடன் (15 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலம்) முதல் இடத்தையும், உக்ரைன் 12 பதக்கங்களுடன் (6 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம்) 2வது இடத்தையும் பிடித்தது.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil