நவம்பர் 25 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்
இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்
- மாநில மீனாக “கருந்திட்டு கத்தாளை” அறிவித்த மாநிலம்
- அரிய உலோகமான ‘டான்டலம்’ கண்டுபிடித்த இந்திய தொழில்நுட்ப கழகம்
- சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான தினம்
நவம்பர் 25ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்
1) போதைப் பொருள் இல்லாத இந்தியா (Nasha Mukt Bharat Abhiyaan) திட்டத்தின் அமைச்சகம்
a)பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
b)இளைஞர் நல மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம்
c)சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
d)பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2) PARAKH என்னும் அமைப்பை தொடங்கிய அமைப்பு
a)தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
b)மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
c)மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
d)மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம்
3) ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இணைந்து நடத்தும்”AusHIND” ராணுவ பயிற்சி நடைபெறும் இடம்
a)மெல்போர்ன்
b)பெர்த்
c)சிட்னி
d)அடிலெய்டு
4) தமிழக முதல் பெண் ஆளுநர் பாத்திமா பீவி ஆளுநராக இருந்த காலம்
a)1992-1997
b)1997-2001
c)2002-2005
d)2005-2008
5) மாநில மீனாக “கருந்திட்டு கத்தாளை” (Ghol) அறிவித்த மாநிலம்
a)கோவா
b)தமிழ்நாடு
c)குஜராத்
d)கேரளா
6) வங்கக்கடலில் உருவாக உள்ள சூறாவளிக்கு மைச்சாங் என்று பெயர் வாய்த்த நாடு
a)தாய்லாந்து
b)இந்தியா
c)மியான்மர்
d)இலங்கை
7) நீர் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக ‘வாட்டர் ஸ்மார்ட் கிட் பிரச்சாரம்’ தொடங்கிய மாநிலம்
a)மேகாலயா
b)அசாம்
c)திரிபுரா
d)கேரளா
8) அரிய உலோகமான ‘டான்டலம்’ கண்டுபிடித்த இந்திய தொழில்நுட்ப கழகம்
a)ஐஐடி சென்னை
b)ஐஐடி ரோபார்
c)ஐஐடி மும்பை
d)ஐஐடி ஹைதெராபாத்
9 ) விஜய் ஹசாரே கோப்பை எந்த விளையாட்டு உடன் தொடர்புடையது
a)கால்பந்து
b)ஹாக்கி
c)கிரிக்கெட்
d)டென்னிஸ்
10) சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான தினம்
a)நவம்பர் 21
b)நவம்பர் 23
c)நவம்பர் 25
d)நவம்பர் 27
விடைகள்
1) விடை c)சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப் பொருள் இல்லாத இந்தியா (Nasha Mukt Bharat Abhiyaan) திட்டத்தின் அமைச்சகம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஆகும் . சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் போதைப்பொருள் தேவை குறைப்புக்கான தேசிய செயல் (NAPDDR) திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளின் ஈடுபாட்டுடன் போதைப் பொருள் இல்லாத இந்தியா திட்டம் ((Nasha Mukt Bharat Abhiyaan) செயல்படுகிறது.
2) விடை a)தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
முழுமையான மேம்பாடுத்திற்கான அறிவின் செயல்திறன் மதிப்பீடு, மதிப்பாய்வு மற்றும் அறிவுசார் பகுப்பாய்வு (PARAKH)தொடங்கிய அமைப்பு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகும் . தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஐ செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக PARAKH தொடங்கப்பட்டுள்ளது. புதிய மதிப்பீட்டு முறைகள் மற்றும் சமீபத்திய ஆராய்ச்சி குறித்து பள்ளி வாரியங்களுக்கு ஆலோசனை வழங்கவும்,அவற்றுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒரு தர நிர்ணய அமைப்பை இது உருவாக்கியுள்ளது. மாநில கல்வி இயக்குநரகங்கள், மாநில, கல்வி வாரியங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் PARAKH பணியாற்றும், மற்றும் மதிப்பீட்டுத் துறையிலும் பணியாற்றும். தேசிய சாதனை கணக்கெடுப்பு (NAS) உள்ளிட்ட பெரிய அளவிலான மதிப்பீடுகளை நடத்துவதற்கு PARAKH பொறுப்பாகும்.
3) விடை b)பெர்த்
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இந்திய ராணுவமும், ஆஸ்திரேலிய ராணுவமும் இணைந்து 2-வது கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்தவுள்ளன. இந்த கூட்டு இராணுவப் பயிற்சியின் முதன்மை நோக்கம் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ஆயுதப் படைகளுக்கு இடையிலான பரஸ்பர செயல்பாட்டை ஊக்குவிப்பதாகும். இந்த ராணுவ பயிற்சி ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கை நெறிமுறையுடன் ஒத்துப்போகிறது மேலும் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த ராணுவ பயிற்சி முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
4) விடை b)1997-2001
1989 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட பாத்திமா பீவி இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆவார் . தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும், பின்னர் 1997 முதல் 2001 வரை இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆளுநராகவும் பணியாற்றினார்.
5) விடை c)குஜராத்
குஜராத் மாநிலத்தின் வளமான நீர்வாழ் பல்லுயிர் பெருக்கத்தை அங்கீகரித்து மேம்படுத்துவதற்காக “கருந்திட்டு கத்தாளை” மீன் அதிகாரப்பூர்வமாக மாநில மீனாக அறிவிக்கப்பட்டுள்ளது
6)விடை c)மியான்மர்
வங்கக்கடலில் ‘மைச்சாங்’ என்ற புயல் உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது உருவானால், இந்த ஆண்டு வங்காள விரிகுடாவில் நான்காவது மற்றும் இந்திய கடற்பரப்பில் ஆறாவது முறையாக இருக்கும். இந்த சூறாவளிக்கு மைச்சாங் என மியான்மர் நாடு பெயரிட்டுள்ளது .
7)விடை a)மேகாலயா
மேகாலயாவில் இளைஞர் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக ‘வாட்டர் ஸ்மார்ட் கிட் பிரச்சாரம்’ தொடங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் (JJM) கீழ் செயல்படும் இந்த முயற்சி நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
8)விடை b)ஐஐடி ரோபார்
பஞ்சாபில் உள்ள சட்லஜ் ஆற்றின் மணலில் டான்டலம் என்ற அரிய உலோகம் இருப்பதை ரோபரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. அணு எண் 73 கொண்ட டான்டாலம் ஒரு அரிய மற்றும் குறிப்பிடத்தக்க உலோகமாகும். உலோகம் அதன் தூய வடிவத்தில் வளைந்து, உடையாமல் மெல்லிய கம்பிகளாக நீட்ட அனுமதிக்கிறது. மேலும் டான்டலம் மிக உயர்ந்த உருகுநிலையைக் கொண்டுள்ளது.
9)விடை c)கிரிக்கெட்
விஜய் அசாரே கோப்பை ரஞ்சிக் கோப்பை ஒருநாள் போட்டி என்றும் அழைக்கப்படுகிறது . இந்த கிரிக்கெட் தொடரானது குறைந்த பட்ச ஓவர்களைக் கொண்டு விளையாடப்படும் ஒரு உள்ளூர்ப் போட்டித் தொடர் ஆகும் .இதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் அணிகள் இந்த கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. இது 2002- 2003 ஆம் ஆண்டு முதலாக விளையாடப்பட்டு வருகிறது.
10) விடை c)நவம்பர் 25
நவம்பர் 25 பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச நாளாகும், இது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய வன்முறை பிரச்சினையை தீர்க்கவும் ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட ஒரு முக்கிய நாளாகும். 2023-ம் ஆண்டுக்கான கருப்பொருள் “ஒன்றுபடுங்கள்! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க முதலீடு செய்யுங்கள்” இந்த கருப்பொருள் பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பதற்கான ஒரு செயலூக்கமான அணுகுமுறையை வலியுறுத்துகிறது.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |