Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்
Top Performing

நடப்பு நிகழ்வு –27 நவம்பர் 2023

நவம்பர் 27 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • மக்களின் குறைகளை கேட்டறிய தமிழக அரசு தொடங்க உள்ள திட்டம்
  • தேசிய கோபால் ரத்னா விருதுகள் வழங்கும் அமைச்சகம்
  • தேசிய அரசியலமைப்பு தினம்

நவம்பர் 27ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) மக்களின் குறைகளை கேட்டறிய தமிழக அரசு தொடங்க உள்ள திட்டம்

a)வேர்களை தேடி திட்டம்

b)உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

c)நான் முதல்வன் திட்டம்

d)இன்னுயிர் காப்போம் திட்டம்

2) புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் இந்திய குடியரசு தலைவர் எங்கு தொடங்கினார்

a)ஜார்கண்ட்

b)சத்திஸ்கர்

c)ஒடிசா

d)பீகார்

3) ஆசியான் -இந்திய சிறுதானிய திருவிழா எந்த நாட்டில் நடைபெற்றது

a)வங்கதேசம்

b)இந்தியா

c)இந்தோனேசியா

d)தாய்லாந்து

4) தேசிய கோபால் ரத்னா விருதுகள் வழங்கும் அமைச்சகம்

a)சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

b)பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

c)இளைஞர் நலம்  மற்றும் விளையாட்டு அமைச்சகம்

d)மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம்

5) தேசிய பால் தினம்

a)நவம்பர் 25

b)நவம்பர் 26

c)நவம்பர் 27

d)நவம்பர் 28

6) “சூரிய கிரண்” ராணுவ பயிற்சி எந்த இரு நாடுகள் இடையே நடைபெற்றது

a)இந்தியா மற்றும் இந்தோனேஷியா

b)இந்தியா மற்றும் வங்கதேசம்

c)இந்தியா மற்றும் நேபாளம்

d)இந்தியா மற்றும் தாய்லாந்து

7) 9வது தேசிய அளவிலான மாசு தடுப்பு பயிற்சி நடைபெற்ற இடம்((NATPOLREX-IX)

a)விசாகப்பட்டினம்

b)வாடினார்

c)மும்பை

d)குவாலியர்

8) உலகின் மிகப்பெரிய ஒற்றை-தள சூரிய மின் நிலையம் தொடங்கிய நாடு

a)ஐக்கிய அரபு அமீரகம்

b)சவூதி அரேபியா

c)கத்தார்

d)குவைத்

9 ) இந்திய ஆவணக்காப்பக வரைபடம்  (Mapping of Archieves In India) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்

a)அமிதவ் கோஷ்

b)ரமேஷ் சந்திர கவுர்

c)விக்ரம் சேத்

d)கிரண் தேசாய்

10) தேசிய அரசியலமைப்பு தினம்

a)நவம்பர் 25

b)நவம்பர் 26

c)நவம்பர் 27

d)நவம்பர் 28

 

விடைகள்

1)விடை b)உங்களைத் தேடி உங்கள் ஊரில்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “உங்களை தேடி உங்கள் ஊரில்”  என்னும் திட்டத்தை  துவக்க உள்ளார். இந்த திட்டமானது ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தாலுகாக்களுக்கு மாவட்ட ஆட்சியர் செல்ல வேண்டும் என்பதாகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு வட்டத்தில் மாதத்தில் ஒரு நாள் தங்க வேண்டும்.இந்த புதிய திட்டம் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.இந்த திட்டம் களத்தில் முதல்வர் திட்டத்தின் அடுத்த கட்டமாக கருதப்படுகிறது.

2) விடை c)ஒடிசா

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் பிரம்மா குமாரிகள் நடத்திய ‘புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி’ பிரச்சாரத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.மாணவர்களிடையே ஒழுக்க மதிப்புகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த இயக்கம்  சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கு பங்களிக்கிறது. “புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி” என்ற இயக்கத்தின் துவக்கம் கல்வி முறையில் தார்மீக விழுமியங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு இந்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது..

3)  விடை  c)இந்தோனேசியா

2023 ஆம் ஆண்டின் ஆசியான்-இந்தியா சிறுதானிய திருவிழா இந்தோனேசியாவில்  நடைபெற்றது .இது சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கவும் ஒரு தளமாக செயல்படுகிறது. இந்த சிறுதானிய திருவிழா  ஆசியான் நாட்டிற்கான இந்திய தூதரகம் மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமையல் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும், நிலையான விவசாயத்தை வளர்க்கவும் இந்த விழா ஒரு தளமாக செயல்படுகிறது.

4) விடை d)மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம்

தேசிய கோபால் ரத்னா விருதுகள் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றன. உற்பத்தித்திறன் மேம்பாடு, உள்நாட்டு இனங்களைப் பாதுகாத்தல் மற்றும் பால்பண்ணை கூட்டுறவுகளை திறம்பட நிர்வகித்தல் ஆகியவற்றுக்காக புதுமையான புதிய தொழில்நுட்ப நடைமுறைகளைப் பின்பற்றும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை ஊக்குவிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகளுக்கு பொருத்தமான நபர்கள் மற்றும் அமைப்பு களுக்கு  பின்வரும் பிரிவுகளில் அடையாளம் காணும்:

  1. நாட்டு மாடுகள் / எருமை இனங்களை வளர்க்கும் சிறந்த பால் பண்ணையாளர்,
  2. சிறந்த பால் கூட்டுறவு / பால் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பால் பண்ணையாளர் உற்பத்தியாளர் அமைப்பு
  3. சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் (Artifical Insemination Techiniue ).

தேசிய கோபால் ரத்னா விருது தகுதிச் சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் முதல் இரண்டு பிரிவில் மட்டும்  பரிசை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  1. ரூ.5,00,000/- (ரூ.5 லட்சம் மட்டுமே) -1-வது இடம்
  2. ரூ.3,00,000/- (ரூ.3 லட்சம் மட்டுமே)- 2-வது இடம்
  3. ரூ.2,00,000/- (ரூ.2 லட்சம் மட்டுமே) -3-வது இடம்

சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் (AIT) பிரிவில், தேசிய கோபால் ரத்னா விருது தகுதி சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு மட்டுமே வழங்கப்படும் . செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் (AIT) பிரிவில் ரொக்கப் பரிசு வழங்கப்படாது.

5) விடை b)நவம்பர் 26

பால்பண்ணை துறையில் புரட்சியை ஏற்படுத்திய  டாக்டர் வர்கீஸ் குரியனின்(வெண்மை புரட்சியின் தந்தை) பங்களிப்பிற்காக அவரது பிறந்த தினத்தில்  நவம்பர் 26 தேசிய பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

6)விடை c)இந்தியா மற்றும் நேபாளம்

17-வது இந்திய – நேபாள கூட்டு ராணுவப் பயிற்சி சூரிய கிரண் பித்தோராகரில் நடைபெற்று வருகிறது . காடுகளில் போர், மலைப்பிரதேசங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கீழ் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் ஆகியவற்றில் ஒருவருக்கொருவர் உதவிசெய்வதை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும். சூரிய கிரண் பயிற்சி என்பது இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே நிலவும் நட்பு,நம்பிக்கை, பொதுவான கலாச்சார இணைப்புகளின் வலுவான பிணைப்பைக் குறிக்கிறது. இது பரந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை நோக்கி இரு நாடுகளின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இரு நட்பு நாடுகளுக்குஇடையே பகிரப்பட்ட பாதுகாப்பு நோக்கங்களை அடைவதையும் இருதரப்பு உறவுகளை வளர்ப்பதையும் இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

7)விடை b)வாடினார்

இந்திய கடலோரக் காவல்படையால் குஜராத்தின் வாடினாரில் 9வது தேசிய அளவிலான மாசு தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. தேசிய எண்ணெய் கசிவு பேரழிவு தற்செயல் திட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி கடலில் எண்ணெய் கசிவைச் சமாளிக்க பல்வேறு வள முகமைகளுக்கு இடையிலான தயார்நிலை மற்றும் ஒருங்கிணைப்பின் அளவைச் சோதிக்கும்  நோக்கத்திற்காக இந்த பயிற்சி நடைபெற்றது .

8)விடை  a)ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உலகின் மிகப்பெரிய ஒற்றை தள சூரிய மின் உற்பத்தி நிலையமான 2 ஜிகாவாட்(GW) அல் தஃப்ரா  சோலார் ஃபோட்டோவோல்டைக் (PV) சுயாதீன மின் திட்டத்தை (IPP) திறந்து வைத்துள்ளது.

9)விடை  b)ரமேஷ் சந்திர கவுர்

இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் ((IGNCA) கலாநிதி பிரிவின் இயக்குநர் ரமேஷ் சந்திர கவுர் எழுதிய இந்திய ஆவணக்காப்பக வரைபடம்(Mapping of Archieves In India). இந்த புத்தகம் இந்தியா முழுவதும் செயலில் உள்ள காப்பகங்கள் மற்றும் அவற்றின் சேகரிப்புகளின்  கலைக்களஞ்சியமாக  வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

10) விடை  b)நவம்பர் 26

நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு தினத்தைக் குறிக்கிறது. இது ‘சம்விதான் திவாஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாள் இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகிறது. இந்த முக்கியமான நாள் 1949 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பை அரசியலமைப்பு சபை ஏற்றுக்கொண்டதை நினைவூட்டுகிறது,.இது ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைக்கு வந்தது.

 

 

**************************************************************************

நடப்பு நிகழ்வு –27 நவம்பர் 2023_3.1

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

 

 

 

 

நடப்பு நிகழ்வு –27 நவம்பர் 2023_4.1