Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்
Top Performing

நடப்பு நிகழ்வு – 05 அக்டோபர் 2023

அக்டோபர் 05 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • வேதியியலுக்கான நோபல் பரிசு
  • சம்ப்ரிதி 2023 ராணுவ பயிற்சி
  • சமத்துவத்தின் சிலை

அக்டோபர் 05ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) 2023 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு

a) இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் டவுட்னா

b) கரோலின் பெர்டோஸி மோர்டன் பி. மெல்டல் மற்றும் கார்ல் பாரி ஷார்ப்லெஸ்

c) மௌங்கி பவேந்தி லூயிஸ் புருஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ்

d)ரெய்னர் வெயிஸ், பாரி பாரிஷ்  மற்றும் கிப் தோர்ன்

2) மக்களவையில் பெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு  சட்டத் திருத்தம்

a)104

b)105

c)106

d)107

3) சம்ப்ரிதி 2023 ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் நாடுகள்

a)இந்தியா மற்றும் ஜப்பான்

b)இந்தியா மற்றும் அமெரிக்கா

c)இந்தியா மற்றும் வங்கதேசம்

d)இந்திய மற்றும் ஆஸ்திரேலியா

4) சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் அமைச்சகம்

a)சுற்றுலா துறை அமைச்சகம்

b)வேளாண்துறை அமைச்சகம்

c)பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம்

d)வனத்துறை அமைச்சகம்

5) இந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது ?

a)5.5%

b)6.3%

c)7.1%

d)7.3%

6) அம்பேத்கரின் சிலை(சமத்துவத்தின் சிலை) எந்த நாட்டில் திறக்கப்படுகிறது?

a) ஆஸ்திரேலியா

b)அமெரிக்கா

c)இங்கிலாந்து

d)தென் ஆப்பிரிக்கா

7) எந்த நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைய உள்ளது?

a)ஆர்மீனியா

b)அமெரிக்கா

c)இந்தியா

d)ரஷ்யா

8) உலக ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுவது

a)அக்டோபர் 5

b)அக்டோபர் 6

c)அக்டோபர் 7

d)அக்டோபர் 8

9) ஆசிய போட்டிகளில் முதல் தங்க பதக்கம் பெற்ற  பெண்மணி

a)அஞ்சு பாபி ஜார்ஜ்

b)பி.டீ. உஷா

c) கமல்ஜீத் சந்து

d)அன்னு ராணி

 10 ) உலகிலேயே மஞ்சள் உற்பத்தி, நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவின் இடம்

a)முதல்

b)இரண்டாம்

c)மூன்றாம்

d)நான்காம்

 

விடைகள்

1) விடை c) மௌங்கி பவேந்தி  லூயிஸ் புருஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ்

2023 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு மௌங்கி பவேந்தி, லூயிஸ் புருஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகியோருக்கு  ‘குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்புக்காக’ அளிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸி எகிமோவ்  ரஷ்யா நாட்டை சார்ந்தவர் ,லூயிஸ் புரூஸ்  அமெரிக்கா நாட்டை சார்ந்தவர் மற்றும் மௌங்கி பவேந்தி பிரான்ஸ் நாட்டில் பிறந்தார் .

2) விடை c)106

“மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான 128வது அரசியலமைப்புத் திருத்த மசோதா இந்தியக் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 106வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாக மாறியது.

வரிசை எண் நாள் ஒப்புதல் அளித்தவர்
1. 20 செப்டம்பர் 2023 மக்களவை
2. 21 செப்டம்பர்  2023 மாநிலங்கவை
3. 29 செப்டம்பர்  2023 குடியரசு தலைவர்

3)  விடை c)இந்தியா மற்றும் வங்கதேசம்

மேகாலயா மாநிலம் உம்ரோயில் இந்தியா- வங்கதேசம்  இடையே 11-ம் ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சியான சம்ப்ரிதி 2023 அக்டோபர் 03-ம் தேதி தொடங்கியது. சுழற்சி அடிப்படையில் இரண்டு நாடுகளும் ஏற்பாடு செய்யும் இந்தப் பயிற்சி அடிப்படையில் வலுவான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை குறிக்கிறது. 2009 ஆம் ஆண்டில் அசாமின் ஜோர்ஹாட்டில் தொடங்கப்பட்ட இந்த பயிற்சி 2022 –ம் ஆண்டு வரை பத்து வெற்றிகரமான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

4) விடை a)சுற்றுலா துறை அமைச்சகம்

திட்டம் சுவதேஷ் தர்ஷன் திட்டம்
ஆண்டு 2015
அமைச்சகம் சுற்றுலா துறை அமைச்சகம்
குறிக்கோள் இந்தியாவில் சுற்றுலாவின் திறனை மேம்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல்.

ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கிருஷ்ணா சுற்றுவட்டத்தின் ஒரு பகுதியாக, ராஜஸ்தானின் நாத்துவாராவில் சுற்றுலா வசதிகளை பிரதமர் திறந்து வைத்தார்.

5) விடை  b)6.3%

உலக வங்கியின் கணிப்பின்படி, இந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும்.

6)விடை b)அமெரிக்கா

இந்தியாவுக்கு வெளியே டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மிகப்பெரிய சிலை அமெரிக்காவில் அக்டோபர் 14-ம் தேதி திறக்கப்படுகிறது. 19 அடி உயர அம்பேத்கரின் சிலைக்கு ‘சமத்துவ சிலை’ என்று பெயரிடப்பட்டு மேரிலாந்தில் திறக்கப்பட உள்ளது.

7)விடை  a)ஆர்மீனியா

சமீபத்தில் ஆர்மீனியாவின் பாராளுமன்றம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைவதற்கு வாக்களித்தது.இது  ஒரு நிரந்தர சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகும்.சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 1998 ரோம் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.2002 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி சட்டம் நடைமுறைக்கு வந்தபோது இது செயல்படத் தொடங்கியது.இதன் தலைமையகம் நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ளது.இதில் இந்தியா உறுப்பினராக இல்லை.

8)விடை   a)அக்டோபர் 5

ஆண்டுதோறும் அக்டோபர் 5 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக ஆசிரியர் தினம் சமூகத்திற்கு ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய அனுசரிப்பு தினமாகும் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்கள் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிப்பதற்கு இந்த நாள் ஒரு வாய்ப்பாகும். உலக ஆசிரியர் தினம் 2023 க்கான கருப்பொருள் “நாம் விரும்பும் கல்விக்காக நமக்குத் தேவையான ஆசிரியர்கள்: ஆசிரியர் பற்றாக்குறையை மாற்றுவதற்கான உலகளாவிய கட்டாயம்”.(“The Teachers We Need for the Education We Want: The Global Imperative to Reverse the Teacher Shortage”)

 9)விடை c) கமல்ஜீத் சந்து

கமல்ஜீத் சந்து 1970 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய முன்னாள் பெண் தடகள வீரர் ஆவார். தூரத்தை 57.3 வினாடிகளில் கடந்தார்.ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.

10) விடை  a)முதல்

உலகிலேயே மஞ்சள் உற்பத்தி, நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவில் 3.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு, 11.61 லட்சம் டன் (உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 75% க்கும் அதிகமானது) உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவில் 30 க்கும் மேற்பட்ட வகையான மஞ்சள் பயிரிடப்படுகிறது, மேலும் இது நாட்டின் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மஞ்சளை அதிகம் உற்பத்தி செய்கின்றன. தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

 

நடப்பு நிகழ்வு – 05 அக்டோபர் 2023_4.1