Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 18 அக்டோபர் 2023

அக்டோபர் 18 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • பசுமை கடன் திட்டம்
  • 2+2 பேச்சுவார்த்தை
  • ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு

அக்டோபர் 18ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) பசுமை கடன் திட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சகம்

a)சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

b)வேளாண்துறை அமைச்சகம்

c)மின்துறை அமைச்சகம்

d)இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

2) தேர்தல் பத்திரங்கள்  திட்டம் நடைமுறை வந்த ஆண்டு

a)2016

b)2018

c)2019

d)2020

3) நிலையற்ற தொழிலாளர்களை குறைந்தபட்ச ஊதிய வரம்பிற்குள் சேர்க்க நடவடிக்கை எடுத்த இந்தியாவின் முதல் மாநிலம்

a) தமிழ்நாடு

b)ஜார்க்கண்ட்

c)சட்டிஸ்கர்

d)பஞ்சாப்

4) இரசபாலி இனிப்பிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது .இது எந்த மாநிலத்தை சார்ந்தது ?

a)பீகார்

b)ஒடிசா

c)ராஜஸ்தான்

d)மேற்கு வங்கம்

5) “மேரா யுவ பாரத்” அமைப்பின் பயனாளிகள் யார்

a)மாற்று திறனாளிகள்

b)இளைஞர்கள்

c)பெண்கள்

d)வயது முதிர்ந்தோர்

6) எந்த ஆண்டிற்குள்  விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையம் அமைக்க வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்திய பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்

a)2030

b)2035

c)2040

d)2045

7) பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்(IUCN) இருவாச்சி பறவைகளின்  நிலை  என்ன

a)மிக அருகிய நிலை

b)அருகிய நிலை

c)பாதிக்கப்படக்கூடியவை

d)மதிப்பிடப்படாதவை

8 )முதலீட்டை ஊக்குவிப்பதில் சிறந்து விளங்கியதற்காக ஐ.நா. விருது பெற்ற இந்திய மாநிலம்

a)மகாராஷ்டிரா

b)குஜராத்

c)தமிழ்நாடு

d)மேற்கு வங்கம்

9) 2+2 பேச்சுவார்த்தை எந்த இரு நாடுகள் இடையே நடைபெற்றது

a)இந்தியா மற்றும் அமெரிக்கா

b)இந்தியா மற்றும் இங்கிலாந்து

c)இந்தியா மற்றும் ஜப்பான்

d)இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா

10) ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு எது ?

a)டென்மார்க்

b)நெதர்லாந்து

c)இத்தாலி

d)பின்லாந்து

 

விடைகள்

1) விடை a)சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் பசுமை கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பசுமைக் கடன் என்பது சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் குறிப்பிட்ட செயல்களுக்காக வழங்கப்படும் ஒரு ஊக்கத்தொகையாகும். பசுமைக் கடன் திட்டம் கீழ்கண்ட நடவடிக்கைகளை உள்ளடக்கும் அவை:

  1. மரக்கன்றுகள் நடுதல்
  2. நீர் மேலாண்மை
  3. நிலையான விவசாயம்
  4. கழிவு மேலாண்மை,
  5. காற்று மாசுபாட்டைக் குறைத்தல்,
  6. சதுப்புநில பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்தல்.

2) விடை b)2018

2017 ஆம்  ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் பின்பு 2018 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தின .அரசியல் கட்சிகளுக்கு பெயர் அறியப்படாத நபர்கள் மூலம் நிதி நன்கொடை அளிக்கப் பயன்படுத்தப்படும் வட்டி இல்லாத வங்கிப் பத்திரங்களாகும். அரசியல் கட்சிகளுக்கு யார் வேண்டுமானாலும் பணத்தை நன்கொடையாக வழங்கக்கூடிய ஒரு கருவி ஆகும் .பாரத ஸ்டேட் வங்கியின்(SBI)  தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து எந்தவொரு இந்திய குடிமகனும் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட நிறுவனமும் வாங்கக்கூடிய ஒரு பத்திரம் போன்றது.

3)  விடை b)ஜார்க்கண்ட்

ஸ்விக்கி, ஜொமாடோ, ஓலா, உபெர் மற்றும் ரேபிடோ பணியாளர்கள் போன்ற  நிலையற்ற தொழிலாளர்களை குறைந்தபட்ச ஊதியத்தின் கீழ் சேர்க்க நடவடிக்கை எடுத்த இந்தியாவின் முதல் மாநிலம்   ஜார்கண்ட் ஆகும் . இந்த முயற்சி நிலையற்ற பொருளாதாரத்தில் உள்ளவர்களுக்கு நியாயமான இழப்பீட்டை உறுதி செய்வதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

4) விடை b)ஒடிசா

இரசபாலி என்பது இந்தியாவின் ஒடிசா மாநில இனிப்பு உணவாகும். இது பூரி ஜெகன்நாதர் கோவிலின் வழங்கப்படும் பிரசாதங்களில் ஒன்றாகும்.இதற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி உள்ளது .

5) விடை b)இளைஞர்கள்

இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கும், தேசிய வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் “மேரா யுவ பாரத்” க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முன்முயற்சி தேசிய இளைஞர் கொள்கையுடன் ஒத்துப்போகிறது மற்றும் 15-29 வயதுடைய நபர்களைகவனம் செலுத்துகிறது .மேரா யுவ பாரத் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  31 நாள் அன்று தேசிய ஒற்றுமை நாளில் தொடங்கப்படும்.

6)விடை b)2035

சமீபத்திய சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா எல் 1 திட்டங்கள் உட்பட இந்திய விண்வெளி முன்முயற்சிகளின் வெற்றியைத் தொடர்ந்து 2035-க்குள்  இந்திய விண்வெளி நிலையம் அமைப்பது மற்றும் 2040-க்குள் சந்திரனுக்கு முதல் இந்தியரை அனுப்புவது உள்ளிட்ட புதிய மற்றும் லட்சிய இலக்குகளை இந்தியா இப்போது இலக்காகக் கொள்ள வேண்டும் என்று இந்திய பிரதமர் அறிவுறுத்தினார்.இந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, விண்வெளித் துறை நிலவை ஆய்வு செய்வதற்கான வழித்திட்டத்தை உருவாக்கும். சந்திரயான் திட்டங்கள், அடுத்த தலைமுறை ஏவுகணை (NGLV) உருவாக்கம், புதிய ஏவுதளம் அமைத்தல், மனிதனை மையமாகக் கொண்ட ஆய்வகங்கள் அமைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் இதில் அடங்கும்.வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் மற்றும் மார்ஸ் லேண்டர் உள்ளிட்ட கிரகங்களுக்கு இடையேயான பயணத்திட்டங்களை மனதில் கொண்டு பணியாற்றுமாறு இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்

7)விடை  c)பாதிக்கப்படக்கூடியவை

“தமிழகத்தில் அழிந்து வரும் இருவாச்சி இனத்தை காக்க வேண்டும் என தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளது .உலகில் அறியப்பட்ட 54 இருவாச்சி பறவை இனங்களில் 9 இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன .அதில் 4 இனங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன .இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் அட்டவணை -1 ல் இருவாச்சி பறவை இனம் அழிந்து வரும் இனமாக பட்டியிலிடபட்டுள்ளது . மேலும்  பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்(IUCN) இருவாச்சி பறவைகள் பாதிக்கப்படக்கூடியவை(Vulnerable) நிலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

8)விடை   c)தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் முதலீட்டு ஊக்குவிப்புக்கான ஒருங்கிணைப்பு நிறுவனமான வழிகாட்டி(Guidance)  ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் நடைபெற்ற 8வது உலக முதலீட்டு மன்றத்தில் எரிசக்தி மாற்றம் குறித்த முதலீடுகளை அதிகரிப்பதில் சிறந்து விளங்கியதற்காக, மதிப்புமிக்க ஐக்கிய நாடுகள் சபையின் ஊக்குவிப்பு விருது 2023 ஐப் பெற்றுள்ளது.

9)விடை b)இந்தியா மற்றும் இங்கிலாந்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ‘2+2’ வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு பேச்சுவார்த்தை  புது டெல்லியில் நடைபெற்றது.இது இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் அடைய ஒரு முன் முயற்சி ஆகும் . வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, முக்கியமான தொழில்நுட்பங்கள், பொது  விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் எரிசக்தி போன்ற பல்வேறு முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே  இந்த பேச்சுவார்த்தை நோக்கம் ஆகும்.

10) விடை  b)நெதர்லாந்து

ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு நெதர்லாந்து ஆகும் .2001 ஆம் ஆண்டு ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியது .உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான முறையீட்டை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசுட்  உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது .2018 ஆம் ஆண்டில் ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது .

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

 

 

 

நடப்பு நிகழ்வு – 18 அக்டோபர் 2023_4.1