Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்
Top Performing

நடப்பு நிகழ்வு – 21 அக்டோபர் 2023

அக்டோபர் 21 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • ககன்யான் திட்டம்
  • ஆபரேஷன் சக்ரா- II
  • காவல் கரங்கள் திட்டம்

அக்டோபர் 21ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) ககன்யான் திட்டம் எந்த ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது

a)2024

b)2025

c)2026

d)2028

2) ஆபரேஷன் சக்ரா- II எந்த துறையால் மேற்கொள்ளப்படுகிறது

a)மத்தியப் புலனாய்வு அமைப்பு

b)மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்

c)அமலாக்க துறை

d)வருமான வரி துறை

3) 2023 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பால் சிறந்த சுற்றலா கிராமம்  என்ற விருதை பெற்ற கிராமம்

a)நவன்பிண்ட் சர்தரன்

b)தோர்டோ

c)கோனோமா

d)போச்சம்பள்ளி

4) 2023 ஆம் ஆண்டு கேம்ப்ரியன் இராணுவப் பயிற்சி நடைபெற்ற இடம்

a)வேல்ஸ்

b)லண்டன்

c)பர்மிங்காம்

d)மான்செஸ்டர்

5) காவல் கரங்கள் திட்டம் கொண்டு வரப்பட்ட நாள்

a)ஏப்ரல் 21,2021

b)மே 1,2021

c)அக்டோபர் 21,2022

d)ஜூலை 26,2023

6) 21வது இந்தியா -பிரான்ஸ் ராணுவ துணைக் குழுவின் கூட்டம் எங்கு நடைபெற்றது?

a)மும்பை

b)புது டெல்லி

c)ஹைதெராபாத்

d)அகமதாபாத்

7) 2023 ஆம் ஆண்டுக்கான சாகரவ் பரிசு யாருக்கு வழங்கப்படுகிறது

a)அலெக்சேய் நவால்னி

b)ஜினா மஹ்ஸா அமினி

c)மலாலா யூசப்சையி

d)ஆங் சான் சுகி

8 ) இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி எந்த விளையாட்டு துறை சேர்ந்தவர்?

a)ஹாக்கி

b)சதுரங்கம்

c)படகு போட்டி

d) நீளம் தாண்டுதல்

9) மகாத்மா காந்தி சிலை எந்த நாட்டில் திறக்கப்பட்டது

a)ஹாங்காங்

b)தாய்லாந்து

c)வியட்நாம்

d)பிலிபைன்ஸ்

10) தேசிய காவல்துறை நினைவு நாள்

a)அக்டோபர் 19

b)அக்டோபர் 20

c)அக்டோபர் 21

d)அக்டோபர் 22

விடைகள்

 1)விடை b)2025

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)  தீவிரமாக செயல்பட்டு வருகிறது .விண்ணுக்கு செல்லும் வாகனம்’ என்று பொருள்படும் வகையில், ‘ககன்யான்’ என்று இத்திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 400 கி.மீ. தூரம் கொண்ட சுற்றுவட்ட பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வருவது இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும் . இந்த திட்டம் வரும் 2025-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.இதற்கான  முதல்கட்ட பரிசோதனையாக, டிவி-டி1 ராக்கெட் மூலம் ஆளில்லா மாதிரி விண்கலம் அக்டோபர் 21 ஆம் நாளில் சோதனை செய்ய உள்ளது .

2) விடை a)மத்தியப் புலனாய்வு அமைப்பு

மத்திய புலனாய்வுப் அமைப்பு (சிபிஐ) ஆபரேஷன் சக்ரா-II ஐத் என தேடுதல்  நடவடிக்கை தொடங்கியுள்ளது . சைபர் குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு பெரிய ஒடுக்குமுறையில் இந்தியா முழுவதும் எழுபத்தாறு இடங்களில்  தேடுதல்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . 100 கோடி கிரிப்டோ மோசடி உட்பட நிதி மோசடியின் ஐந்து தனித்தனி வழக்குகளைப் பதிவுசெய்த பிறகு மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் உதவியுடன் சைபர் குற்றவாளிகளைக் கண்டறிய நடத்தப்படுகிறது .

3)  விடை b)தோர்டோ

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ கிராமம், ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) சிறந்த சுற்றுலா கிராமமாக விருது பெற்றது. சுற்றுலாத்துறையில் நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக உலக சுற்றுலாத் துறை சிறந்த சுற்றுலா கிராமங்கள் என்ற முன் முயற்சியில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது .நாகாலாந்தில் உள்ள கோனோமா கிராமம் 2022 ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுலா கிராமமாகவும், தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  உள்ள போச்சம்பள்ளி கிராமம் 2022 ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுலா கிராமமாகவும் ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பினால் விருது பெற்றது. பஞ்சாப் மாநிலம் நவன்பின்ட் சர்தாரனுக்கு சுற்றுலா அமைச்சகத்தின் 2023 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம் விருது வழங்கப்பட்டது.

4) விடை a)வேல்ஸ்

இங்கிலாந்தின் வேல்ஸில் நடைபெற்ற ‘2023 காம்பிரியன் சுற்றுக்காவல் போட்டி’ அல்லது ‘இராணுவ சுற்றுக்காவல் ஒலிம்பிக்’ என்றழைக்கப்படும் போட்டியில் இந்திய ராணுவத்தின் 3/5 கோர்கா ரைஃபிள்ஸ் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள சிறப்புப் படைகள் மற்றும் மதிப்புமிக்க படைப்பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 38 சர்வதேச அணிகள்உட்பட மொத்தம் 111 அணிகளுடன் இந்திய ராணுவ அணி போட்டியிட்டது. 2021 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற அதே போட்டியில் இந்திய ராணுவமும் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது .

5) விடை a)ஏப்ரல் 21,2021

காவல் கரங்கள் திட்டம்  2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் தொடங்கப்பட்டது .இத்திட்டத்தின் நோக்கம் கைவிடப்பட்ட நபர்கள், ஆதரவற்ற முதியோர், பெண்கள், குழந்தைகள், மன நலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றித் திரிபவர்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், குணமடைந்தவர்களை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பது மற்றும்   ஆதரவற்றவர்களை  பாதுகாப்பான காப்பகங்களில் தங்க வைத்து பராமரிப்பது .இந்த திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஸ்காச் விருது வழங்கப்பட்டது .இந்த திட்டம் தற்போது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது .

.6)விடை b)புது டெல்லி

ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இரு நாடுகளின் தற்போதைய பாதுகாப்பு உறுதிப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் 21வது இந்திய-பிரெஞ்சு இராணுவ துணைக்குழு கூட்டம் புதுதில்லியில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெற்றது.

7)விடை  b)ஜினா மஹ்ஸா அமினி

ஐரோப்பிய பாராளுமன்றம் 2023  சகாரோவ் விருதை ஈரானியப் பெண்ணான ஜினா மக்சா அமீனிக்கு அறிவித்தது. ஈரானின் மத காவல்துறையின் காவலில் இருந்த 22 வயதான மக்சா அமீனி 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள் அன்று காலமானார். இஸ்லாமிய குடியரசின் பெண்களுக்கான கடுமையான ஆடைக் குறியீட்டை மீறியதாக அவரது குற்றச்சாட்டு இருந்தது. இவரது திடீர் மரணம், “பெண், வாழ்க்கை, சுதந்திரம்” இயக்கம் ஆரம்பமாவதற்கும் மேலும் இது உலகளாவிய கவனத்தையும் ஆதரவையும் பெருக்கியது .அலெக்ஸி நவல்னி 2022 சாகரோவ் பரிசைப் பெற்றார். மலாலா யூசுப்சாய் 2013 மற்றும் ஆங் சான் சூகி 1990 சாகரோவ் பரிசை வென்றனர். சகாரோவ் பரிசு மனித உரிமைகள் மற்றும் சிந்தனை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கான கெளரவ விருது ஆகும் .

8)விடை  b)சதுரங்கம்

24 வயதான இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் கார்த்திகேயன் முரளி கத்தார் மாஸ்டர்ஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் முரளி இரண்டு முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார் .

9)விடை c)வியட்நாம்

வியட்நாமின் ஹோ சி மின் நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்  இது இந்தியாவுக்கும் வியட்நாமிற்கும் இடையிலான ஆழமான தொடர்புகளையும், உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் குறிக்கிறது..

10) விடை  c)அக்டோபர் 21

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் ஆயுதம் தாங்கிய சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 காவல்துறையினர் வீரமரணம் அடைந்தனர். அதை நினைவு கூரும் வகையில் பணியின் போது உயிரிழந்த அனைத்து காவல்துறையினரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. காவல்துறையினரின் தியாகங்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் பங்கு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்திய பிரதமர் புதுதில்லியில் உள்ள சாணக்கியபுரியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய காவலர் நினைவிடத்தை 2018-ம் ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

 

நடப்பு நிகழ்வு – 21 அக்டோபர் 2023_4.1