Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 23 அக்டோபர் 2023

அக்டோபர் 23 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • 4வது விவசாய செயல் திட்டம்
  • ISO சான்றிதழ் பெற்ற நாட்டின் முதல் பெண் காவல் நிலையம்
  • மத்ஸய சம்பதா ஜாக்ருக்தா அபியான் திட்டம்

அக்டோபர் 23ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) இந்திய குடியரசு தலைவர் எந்த மாநிலத்தில் 4வது விவசாய செயல் திட்டத்தை தொடங்கினார்

a)பீகார்

b)ஒடிஷா

c)பஞ்சாப்

d)ஹரியானா

2) 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வனஉயிர் புகைப்பட கலைஞர் விருதை   வென்றவர்

a)ஸ்ரீராம் முரளி

b)ஜென்ஸ் குல்மேன்

c)லாரன்ட் பாலேஸ்டா

d)ரதிகா ராமசுவாமி

3) ISO சான்றிதழ் பெற்ற நாட்டின் முதல் பெண் காவல் நிலையம்  அமைந்துள்ள மாநிலம்

a)உத்தரபிரதேசம்

b)மத்திய பிரதேசம்

c) தமிழ்நாடு

d)ஹிமாச்சல பிரதேசம்

4) இந்தியாவில் DigiKavach  என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம்

a)மைக்ரோசாப்ட்

b)ஆப்பிள்

c)கூகுள்

d)ஜியோ

5) கஸ்தூரி காட்டன் பாரத் என்ற திட்டத்தை துவங்கிய அமைச்சகம்

a)சுற்றுச்சூழல் அமைச்சகம்

b)ஜவுளித்துறை அமைச்சகம்

c)வேளாண்துறை அமைச்சகம்

d)வர்த்தகதுறை அமைச்சகம்

6) மத்ஸய சம்பதா ஜாக்ருக்தா அபியான் திட்டம் தொடங்கப்பட்ட நாள்

a)10 ஜூன் 2023

b)15 ஆகஸ்ட் 2023

c)15 செப்டம்பர் 2023

d)20 அக்டோபர் 2023

7) தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு

a)1961

b)1965

c)1970

d)1972

8 ) எந்த ஆண்டிற்குள் காசநோய் முற்றிலுமாக அழிக்க இந்திய இலக்கு வைத்துள்ளது

a)2020

b)2025

c)2030

d)2035

9) அரபிக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு தேஜ் என்ற பெயர் வைத்த நாடு

a)இலங்கை

b)தாய்லாந்து

c) இந்தியா

d)வங்கதேசம்

10) உலக போலியோ தினம்

a) அக்டோபர் 22

b) அக்டோபர் 23

c) அக்டோபர் 24

d) அக்டோபர் 25

 

விடைகள்

1)விடை a)பீகார்

குடியரசுத் தலைவர் திருமதி . திரௌபதி முர்மு, பீகார் மாநிலம் பாபு சபாகரில் 5 (2023-28) ஆண்டு  காலத்துக்கு நான்காவது விவசாய செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கான முதலீடு  1.62 லட்சம் கோடி ரூபாய் ஆகும். வேளாண் உற்பத்தியில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

2) விடை a)ஸ்ரீராம் முரளி

2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வனஉயிர் புகைப்பட கலைஞர் விருதை  ஸ்ரீராம் முரளி வென்றார் . இவர் தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடிக்கணக்கான மின்மினி பூச்சிகளின் ஒளிர்வை படம் பிடித்தற்காக இந்த விருது வழங்கப்பட்டது .

3)  விடை b)மத்திய பிரதேசம்

போபால் நகரில் அமைந்துள்ள போபால் மகிளா  தானா மகளிர் காவல் நிலையம் அதன் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பில் உயர் தரங்களை பராமரிப்பதற்காக ISO சான்றிதழைப் பெற்றது. ISO சான்றிதழைப் பெற்ற இரண்டாவது காவல் நிலையம் இதுவாகும். மத்தியப் பிரதேசத்தில் உள்ள மிஸ்ரோட் காவல் நிலையம் ISO சான்றிதழைப் பெற்ற முதல் காவல் நிலையமாகும்.

4) விடை c)கூகுள்

இந்தியாவில் ஆன்லைன் நிதி மோசடிகளை எதிர்த்துப்  கூகுள் DigiKavach திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. கூகுளின் DigiKavach ஆன்லைன் மூலம் பண மோசடி செய்பவர்கள் கையாளும் உத்திகளைப் புரிந்துகொண்டு எதிர் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் இந்த மோசடி நடவடிக்கைகளை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

5) விடை b)ஜவுளித்துறை அமைச்சகம்

கஸ்தூரி காட்டன் பாரத் என்பது ஜவுளி அமைச்சகம், இந்திய பருத்தி கார்ப்பரேஷன், வர்த்தக அமைப்புகள் மற்றும் தொழில்துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இது உலகளாவிய சந்தையில் அதன் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் நிலையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் இந்திய பருத்தியின் கண்டுபிடிப்பு மற்றும் சான்றிதழின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் சுய ஒழுங்குமுறை கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது. கஸ்தூரி காட்டன் பாரத் https://kasturicotton.texprocil.org என்ற இணையதளத்தை ஜவுளித்துறை அமைச்சகம் துவங்கி வைத்தது . கஸ்தூரி காட்டன் பாரத்  முத்திரையிடப்பட்ட இந்திய பருத்தியை தனித்துவமாக்கும் அதன் செயல்முறைகளை முன்னிலைப்படுத்துகிறது. இந்த முன்முயற்சிகள் குறித்த தேவையான தகவல்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு ஒரு டிஜிட்டல் தளத்தையும் இந்த இணையதளம் வழங்குகிறது

6)விடை c)15 செப்டம்பர் 2023

பிரதம மந்திரி மத்ஸய சம்பதா திட்டம் (PMMSY) செயல்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு  மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம்  மத்ஸய சம்பதா ஜாக்ருக்தா அபியான் என்ற தனித்துவமான திட்டத்தைத் தொடங்கி வைத்தது . இந்தியா முழுவதும் பரவலை மேம்படுத்துவதற்கும் ‘கடைசி மைல் இணைப்பை’ உறுதி செய்வதற்கும் ஜாக்ருக்தா அபியான் செப்டம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை 6 மாதங்களுக்கு இயங்கும். மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்த தகவல்களையும், அறிவையும் பரப்புதல், பயனாளிகளின் வெற்றிக் கதைகளை எடுத்துரைத்தல், 2.8 கோடி மீன் விவசாயிகள் மற்றும் 3477 கடலோர கிராமங்களை சென்றடைதல் ஆகியவை மத்ஸய சம்பதா ஜாக்ருக்தா திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.பிரதம மந்திரி மத்ஸய சம்பதா யோஜனா (PMMSY) என்பது இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறையின் முதன்மை திட்டமாகும், இது 10 செப்டம்பர் 2020 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது. பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூல மீன்வளத் துறைக்கு உத்வேகம் அளிப்பதே இதன் நோக்கம்.

7)விடை  a)1961

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 1961 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதன் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் குறைகளைத் தீர்க்க, நில நிர்வாக ஆணையர் (C.L.A) தலைமையில் ஐந்து பேர் கொண்ட சிறப்புக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

8)விடை  b)2025

2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.  2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் பணியை புதுப்பிக்க பிரதமர் காசநோய்த் தடுப்பு இந்தியா திட்டம் துவங்கப்பட்டது .நீடித்த வளர்ச்சியின் கீழ்  2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து நாடுகளும் காசநோயை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை இலக்கு நிர்ணயித்தது. ஆனால் மத்திய அரசின் சிறந்த செயல்பாடுகளினால் வரும் 2025 ஆண்டிற்குள் காசநோய் முற்றிலுமாக அகற்றப்படும் என இந்திய அரசு குறிக்கோள் வைத்துள்ளது .

9)விடை c) இந்தியா 

அரபிக்கடலில் உருவான புயலுக்கு இந்தியா ‘தேஜ்’ என்று பெயரிட்டுள்ளது .  ‘தேஜ்’ புயல் மும்பை, புனே மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதி மற்றும் கொங்கன் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

10) விடை  c)அக்டோபர் 24

உலகெங்கிலும் உள்ள மக்களிடையே போலியோ தடுப்பூசி மற்றும் போலியோ ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 ஆம் நாள்   உலக போலியோ தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக போலியோ தினம் 1985 ஆம் ஆண்டில் ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனத்தால், போலியோவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கிய குழுவின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சியாளரான ஜோனஸ் சால்கின் பிறந்த நாளை நினைவுகூருவதற்காக நிறுவப்பட்டது. 1955 ஆம் ஆண்டில் முதன்முதலில் பயன்பாட்டிற்கு வந்த போலியோ வைரஸ் தடுப்பூசியை அவர் உருவாக்கியுள்ளார்.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

 

நடப்பு நிகழ்வு – 23 அக்டோபர் 2023_4.1