அக்டோபர் 26 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்
இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்
- ஹாமூன் புயல்
- மகிளா சாரதி திட்டம்
- 7வது எதிர்கால முதலீடு மாநாடு
அக்டோபர் 26ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்
1) 2022-23 ஆம் ஆண்டு லிக்னைடை அதிக உற்பத்தி செய்த இந்திய மாநிலம்
a)ராஜஸ்தான்
b)குஜராத்
c)தமிழ்நாடு
d) ஜம்மு காஷ்மீர்
2) இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் நாடு
a)தாய்லாந்து
b)இந்தோனேஷியா
c)இலங்கை
d)மலேஷியா
3) அனுபவ் இணையத்தளம் யாருக்காக மத்திய அரசு தொடங்கியது
a)பெண்கள்
b)குழந்தைகள்
c)ஓய்வு பெற்ற அதிகாரிகள்
d)மாற்றுத்திறனாளிகள்
4) மிகவும் மாசுபட்ட நகரங்களில் இரண்டாம் இடத்தை பிடித்த இந்திய நகரம்
a)டெல்லி
b)நாக்பூர்
c)மும்பை
d)புனே
5) ‘ஹாமூன்’ புயலுக்கு பெயர் வைத்த நாடு
a)வங்கதேசம்
b)ஈரான்
c)ஈராக்
d)ஏமன்
6) மகிளா சாரதி திட்டத்தை தொடங்கிய மாநிலம்
a)ஒடிஷா
b)உத்திரபிரதேசம்
c)ராஜஸ்தான்
d)மகாராஷ்டிரா
7) 7வது எதிர்கால முதலீடு மாநாடு நடைபெறும் இடம்
a)துபாய்
b)ரியாத்
c)அபுதாபி
d)சார்ஜா
8)விடுதலை போராட்ட வீரர்களான மருது சகோதர்கள் நினைவு தினம்
a)அக்டோபர் 18
b)அக்டோபர் 20
c)அக்டோபர் 22
d)அக்டோபர் 24
9) அபுதாபி மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற இந்திய வீராங்கனை
a)உனாட்டி ஹூடா
b)பி.வி .சிந்து
c)சாய்னா நேவால்
d)துளசி தாஸ்
10) மோல் தினம் அனுசரிக்கப்படுவது
a)அக்டோபர் 21
b)அக்டோபர் 22
c)அக்டோபர் 23
d)அக்டோபர் 24
விடைகள்
1)விடை c)தமிழ்நாடு
2022-23 ஆம் ஆண்டில் லிக்னைட் உற்பத்தியில் தமிழகம் 22.480 மில்லியன் டன் உற்பத்தி செய்துள்ளதாக நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலக்கரி அமைச்சகம் தரவுகள் படி உற்பத்தியில் தமிழகம் 49.97% ஆகவும், குஜராத் 26.27% ஆகவும், ராஜஸ்தான் 22.67% ஆகவும் உள்ளது. இந்தியாவில் லிக்னைட் படிவுகள் முதன்மையாக தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் அதிகமாக கிடைக்கின்றன..மேலும் ஒடிசா, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் குறைவாக கிடைக்கின்றன.
2) விடை c)இலங்கை
இந்தியர்களுக்கும் ,சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பான் உட்பட ஆறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் விசா கட்டணங்களை மார்ச் 2024 வரை ரத்து செய்து, மோசமான நிலையில் இருக்கும் சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல்கள், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் 2022 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி போன்றவையால் இலங்கை தனது சுற்றுலாத் துறையில் பல பின்னடைவுகளை சந்தித்து உள்ளது. இலவச சுற்றுலா விசா வழங்கும் முடிவு நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.
3) விடை c)ஓய்வு பெற்ற அதிகாரிகள்
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனுபவ் இணையதளத்தை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலன் துறை அறிமுகப்படுத்தியது. ஓய்வுபெறும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் தாங்கள் செய்த பாராட்டத்தக்க பணிகளைச் சமர்ப்பிக்கவும் காட்சிப்படுத்தவும் இந்த இணையத்தளம் வழங்குகிறது.அரசாங்கத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கவும். இத்துறையின் அனுபவ்இணையதளத்தை 96 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மற்றும் அமைப்புகள் பதிவு செய்து இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.மேலும் புதுடெல்லியில் விஞ்ஞான் பவனில் அனுபவ் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான விருது பெற்றவர்களைக் கௌரவிக்கும் வகையில் மத்திய பணியாளர் பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் விருதுகளை வழங்குகிறது . அனுபவ் விருது பெறுவோருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.10,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
4) விடை c)மும்பை
சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir அறிக்கையின் படி, உலகின் இரண்டாவது அதிக மாசுபட்ட நகரமாக மும்பை உள்ளது. IQAir நிறுவனத்தின் அறிக்கையின்படி, சீனாவின் பெய்ஜிங் நகரம் முதல் இடத்தையும், இந்தியாவின் தலைநகரான டெல்லி ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.
5) விடை b)ஈரான்
ஈரான் நாடு புயலுக்கு ‘ஹாமூன்’ என்று பெயர் சூட்டியுள்ளது. ‘ஹமூன்’ என்பது ஹெல்மண்ட் வடிநிலத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இயற்கையாகவே உருவாகும் தற்காலிக பாலைவன ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களைக் குறிக்கும் ஒரு பாரசீக சொல்.இந்த புயல் வங்கக்கடலில் உருவானது. இது இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையைத் தவிர குறிப்பிடத்தக்க பாதகமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
6)விடை b)உத்திரபிரதேசம்
உத்தரபிரதேச அரசு மகிளா சாரதி திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் பெண்களுக்கு பொது போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதாகும்.இது சக்தி அபியானின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். பல்வேறு திட்டங்களின் மூலம் உத்தரபிரதேசத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு மற்றும் அதிகாரம் அளிப்பதே சக்தி அபியான் திட்டத்தின் நோக்கமாகும்.
7)விடை b)ரியாத்
வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் நலம் ,உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் 7வது எதிர்கால முதலீட்டு மாநாட்டில் (FII) பங்கேற்றார்.எதிர்கால முதலீட்டு முன்முயற்சி நிறுவனம் என்பது சவூதி ஆரேபியா அரசால் தொடங்கப்பட்ட ஒரு உலகளாவிய இலாப நோக்கற்ற அறக்கட்டளையாகும். உலகளாவிய “மனிதசமுதாயத்தின் மீதான தாக்கத்தை” உருவாக்கும் நோக்கத்துடன் முதலீட்டிற்கான புதிய பாதைகளைப் பற்றி விவாதிக்க உலகெங்கிலும் உள்ள அரசு மற்றும் வணிகத் தலைவர்களை ஒன்றுதிரட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோடிக்ஸ், கல்வி, சுகாதாரம் மற்றும் நீடித்த தன்மை ஆகிய நான்கு துறைகளில் கவனம் செலுத்துகிறது.
8)விடை d)அக்டோபர் 24
பெரிய மருது மற்றும் சின்ன மருது சகோதர்களை மருது பாண்டியர் என்று அழைக்கப்படுவர் . அவர்கள் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தென்னிந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக போராடின தமிழர்களில் முக்கியமான நபர்கள் ஆவர். இராமநாதபுரம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் வீரம், தைரியத்திற்கு பெயர் பெற்றவர்கள். ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சியில் இருந்து தங்கள் நிலத்தையும் மக்களையும் காக்க ராணி வேலுநாச்சியாருடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் புரிந்தனர் . பின்பு ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டனர் 1801 ஆம் ஆண்டில் அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர் சகோதரர்கள் தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர். இவர்களின் 221 ஆம் ஆண்டு நினைவு தினத்தை தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது .
9)விடை a)உனாட்டி ஹூடா
16 வயதான உன்னதி ஹூடா 2023 ஆண்டிற்கான அபுதாபி மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்றார். .அவர் சக இந்தியரான சாமியா இமாத் ஃபரூக்கியை 21-16, 22-20 என்ற கணக்கில் தோற்கடித்தார். மேலும் மிகவும் குறைந்த வயதில் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் வென்றவர் என்ற வரலாறு சாதனை படைத்தார்.
10) விடை c)அக்டோபர் 23
மோல் தினம் வேதியியலாளர்களால் ஆண்டுதோறும் அக்டோபர் 23 அன்று காலை 6.02 மணி முதல் மாலை 6.02 மணி வரை கொண்டாடப்படுகிறது. மோல் என்பது அவகாட்ரோவின் எண்ணை (6.022 x 1023) நினைவுபடுத்துகிறது. இது சரியாக 12 கிராம் கார்பன்-12 (ஒரு மோல்) இல் உள்ள அணுக்களின் எண்ணிக்கையாகும்
*************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil