அக்டோபர் 28 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்
இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்
- ஆரோக்கிய நடை பயண திட்டம்
- 7வது இந்திய மொபைல் மாநாடு
- 37வது தேசிய விளையாட்டு போட்டிகள்
அக்டோபர் 28ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்
1)ஆசியாவிலேயே 2ஆம் மிக பெரிய பொருளாதார நாடாக இந்தியா எந்த ஆண்டிற்குள் மாறும்
a)2028
b)2030
c)2035
d)2040
2)இந்திய நாட்டின் முதல் நானோ யூரியா ஆலை திறக்கப்பட இடம்
a)அகமதாபாத்
b)கலோல்
c)சூரத்
d)வதோதரா
3) அனைத்து மாவட்டங்களிலும் அடையாள முத்திரை(Hallmark) மையங்களைக் கொண்ட முதல் மாநிலம்
a)குஜராத்
b)தமிழ்நாடு
c)கேரளா
d)மகாராஷ்டிரா
4) ஆரோக்கிய நடை பயணம் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ள மாநிலம்
a)கேரளா
b)தமிழ்நாடு
c)கர்நாடகா
d)மேற்குவங்கம்
5) இந்தியாவின் பாதுகாப்பான மெட்ரோ நகரங்களில் முதலிடத்தில் உள்ள நகரம்
a)புது டெல்லி
b)மும்பை
c)சென்னை
d)பெங்களூரு
6) “Breaking the Mould : Reimagining India’s Economic Future” என்ற புத்தகத்தை எழுதியவர்
a)சக்திகாந்த தாஸ்
b)அமர்த்திய சென்
c)ரகுராம் ராஜன்
d)அபிஜித் விநாயக் பானர்ஜி
7) ஆசியாவின் சர்வதேச பயண கண்காட்சிகள் நடைபெற உள்ள இடம்
a)இந்தியா
b)சிங்கப்பூர்
c)மலேஷியா
d)இலங்கை
8) 7வது இந்திய மொபைல் மாநாடு நடைபெற உள்ள இடம்
a)புது டெல்லி
b)சென்னை
c)மும்பை
d)ஹைதெராபாத்
9) 37வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள இடம்
a)அகமதாபாத்
b)தேராதூன்
c)பனாஜி
d)புவனேசுவர்
10) காலாட்படை அனுசரிக்கப்படும் தினம்
a)அக்டோபர் 25
b)அக்டோபர் 26
c)அக்டோபர் 27
d)அக்டோபர் 28
விடைகள்
1)விடை b)2030
எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையின் படி இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் 7.3 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டும் என்றும் 2030-ம் ஆண்டில் ஜப்பானை முந்திக்கொண்டு ஆசியாவின் 2-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜெர்மனியை விட அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருந்தது. தற்போது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகவும் மற்றும் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது.
2) விடை b)கலோல்
உணவு உற்பத்தி மற்றும் உரங்களில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்ட குஜராத்தின் காந்திநகரில் உள்ள கலோலில் உள்ள இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தின்(IFFCO) நானோ டி.ஏ.பி (திரவம் ) ஆலையை உள்துறை அமைச்சகம் திறந்து வைத்தது. நானோ டிஏபி (திரவம் ) என்பது 8 சதவீத நைட்ரஜன் மற்றும் 16 சதவீத பாஸ்பரஸ் கொண்ட ஒரு புத்தாக்க தயாரிப்பு ஆகும். விவசாயிகளுக்கு தற்போது 1,350 ரூபாய் விலையில் வழங்கப்படும் பாரம்பரியமான 50 கிலோ எடையுள்ள டிஏபி பையை இந்த புத்தாக்க திரவ உரத்தால் மாற்ற முடியும். விவசாய நிலங்களில் மண்புழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விவசாய உற்பத்தி அதிகரிக்கவும் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இயற்கையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கிறது.
3) விடை c)கேரளா
14 மாவட்டங்களிலும் அடையாள முத்திரை மையங்களைக்(Hallmark centres) கொண்ட முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அடையாள முத்திரை மையங்களைத் திறப்பது கேரளாவை தங்க வணிகத்தின் மையமாக மாற்றுவதோடு தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு நாட்டின் மிகவும் நம்பகமான சந்தையாக உருமாற உள்ளது.
4) விடை b)தமிழ்நாடு
ஆரோக்கிய நடை பயணம் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ள மாநிலம் தமிழ்நாடு ஆகும் . பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக 38 மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் தூர நடைபாதை அமைக்கப்படும். நடைபயிற்சி நடைபாதைகளின் நோக்கம் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதும் மற்றும் குடிமக்களிடையே காலை நடைப்பயிற்சிகளை ஊக்குவிப்பதும் ஆகும். தமிழக முதல்வர் நவம்பர் 4-ம் தேதி “சுகாதார நடைபாதைகளை” தொடங்கி வைக்கிறார்.
5) விடை c)சென்னை
Numbeo இன் ஆன்லைன் தரவுத்தளத்தின்படி சென்னை இந்தியாவின் பாதுகாப்பான மெட்ரோ நகரமாகும்.உலகளவில் Numbeo தரவுத்தளத்தில் பாதுகாப்பிற்காக சென்னை 127வது இடத்தில் உள்ளது.
இந்த ஆய்வில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பிற காரணிகள் மதிப்பீடு செய்யப்பட்டன.மற்ற இந்திய பெருநகரங்களான மும்பை (161), கொல்கத்தா (174), மற்றும் புது டெல்லி (263) ஆகியவை பாதுகாப்பில் பின்தங்கி உள்ளன.Avtar இன் முந்தைய ஆய்வில், ஐந்து அளவீடுகளின் அடிப்படையில், இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரமாக சென்னையை மதிப்பிட்டுள்ளது.
6)விடை c)ரகுராம் ராஜன்
“Breaking the Mould : Reimagining India’s Economic Future” என்ற புத்தகத்தை எழுதியவர் ரகுராம் ராஜன் மற்றும் ரோஹித் லும்பா ஆவர். மேலும் இது 2023 டிசம்பரில் வெளியாக உள்ளது. இந்தப் புத்தகம் இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தைப் பற்றிய யோசனைகளைத் தருகிறது.
7)விடை b)சிங்கப்பூர்
ஆசிய பசிபிக் பிராந்தியம் உட்பட உலகளவில் இந்தியாவின் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்துடன் சிங்கப்பூரில் நடைபெறும் முக்கியமான சர்வதேச பயணக் கண்காட்சிகளில் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் பங்குக்கேற்க உள்ளது .. இது உலகெங்கிலும் உள்ள பயண வர்த்தக வணிகம் மற்றும் பங்குதாரர்களை ஈர்க்கிறது மற்றும் குறிப்பாக ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் இருந்து பல்வேறு சுற்றுலா தயாரிப்புகள் மற்றும் இந்தியாவிற்கு பயணிப்பவர்களுக்கு அனுபவங்களை காட்சிப்படுத்துகிறது. இந்தியாவின் இந்த கண்காட்சியின் கருப்பொருள் ‘வியத்தகு இந்தியா! 2023 ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தாருங்கள்’ ஆகும் . மேலும் இது சர்வதேச சந்தைகளில் இந்தியாவை ஒரு விருப்பமான இடமாக நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக இந்த ஆண்டு “2023 இந்தியாவிற்கு வருக ” ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8)விடை a)புது டெல்லி
2023 ஆம் ஆண்டுக்கான 7 வது இந்திய மொபைல் மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது .இந்த மாநாட்டில் 100 5ஜி ஆய்வுகங்கள் அமைக்க உள்ளன . 100 ‘5 ஜி ஆய்வகங்கள் முன்முயற்சி’, இந்தியாவின் தனித்துவமான தேவைகள், உலகளாவிய தேவைகள் ஆகிய இரண்டையும் பூர்த்தி செய்யும் 5 ஜி பயன்பாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் 5ஜி தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய வாய்ப்புகளை அடைவதற்கான ஒரு முயற்சியாகும். இந்த தனித்துவமான முயற்சி கல்வி, வேளாண்மை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து போன்ற பல்வேறு சமூக பொருளாதாரத் துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கும் மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் நாட்டை முன்னணியில் கொண்டு செல்லும்.நாட்டில் 6 ஜி-யில் கல்வி மற்றும் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் இந்த முன்முயற்சி ஒரு முக்கிய படியாகும். மிக முக்கியமாக, இந்த முன்முயற்சி தேசிய பாதுகாப்புக்கு முக்கியமான உள்நாட்டு தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஒரு படியாகும்.இந்தியா மொபைல் மாநாடு ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்ப அமைப்பாகும். இது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறும். தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் சிறப்பான முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்தவும், குறிப்பிடத்தக்க அறிவிப்புகளைக் கொண்டு வரவும், புத்தொழில்கள் தங்கள் புதுமையான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளைக் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கவும் இந்த நிகழ்வு ஒரு தளமாக செயல்படும்.
‘உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு’ என்ற கருப்பொருளுடன், இந்திய மொபைல் மாநாடு 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாட்டாளர், உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக நாட்டின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மூன்று நாள் மாநாடு 5 ஜி, 6 ஜி, செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பங்களை முன்னிலைப்படுத்தும், செமிகண்டக்டர் தொழில்துறை, பசுமை தொழில்நுட்பம், இணையதள பாதுகாப்பு போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கும்.
9)விடை c)பனாஜி
37வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் முதல் முறையாக கோவாவில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 26ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 10,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். ஆரம்பத்தில் இது இந்திய ஒலிம்பிக் போட்டிகள் என்று அழைக்கப்பட்டது. 1940 ஆம் ஆண்டுக்குப் பிறகு இது தேசிய விளையாட்டு போட்டிகள் என்று மறுபெயரிடப்பட்டது. முதல் தேசிய விளையாட்டு போட்டிகள் 1924 ஆம் ஆண்டில் சுதந்திரத்திற்கு முன்னர் லாகூரில் நடத்தப்பட்டது. 5 வது (1932), 14 வது (1952) மற்றும் 23 வது (1968) பதிப்புகள் மெட்ராஸில் நடத்தப்பட்டன.
10) விடை c)அக்டோபர் 27
பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பாகிஸ்தான் கபாலி ரெய்டர்களின் மோசமான திட்டங்களிலிருந்து ஜம்மு-காஷ்மீர் மக்களைப் பாதுகாக்க அக்டோபர் 27, 1947 அன்று சீக்கியர் படைப்பிரிவின் முதல் படைப்பிரிவு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த துணிச்சலான நடவடிக்கை ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமிக்கும் பாகிஸ்தானின் திட்டங்களை முறியடித்தது. காலாட்படை “போரின் ராணி” என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் அதன் வரலாறு முதல் மனிதப் போரைப் போலவே பழமையானது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில்காலாட்படையினர் இராணுவத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். 1962ம் ஆண்டு சீனாவுடனான போராக இருந்தாலும், 1947-48ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போராக இருந்தாலும், 1965, 71ம் ஆண்டு கார்கில் போராக இருந்தாலும் சரி. இந்த வரலாற்றுப் போர்களில் வெற்றிபெற்றதில் காலாட்படையின் பங்களிப்பு இணையற்றது. இந்த போர்களைத் தவிர, வடக்கு மற்றும் வடகிழக்கில் கிளர்ச்சி எதிர்ப்பு / பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், பஞ்சாபில் ப்ளூ ஸ்டார் மற்றும் ராக்ஷாக் நடவடிக்கைகள், இலங்கையில் பவன் நடவடிக்கை மற்றும் சமீபத்தில் கிழக்கு லடாக் பகுதியில் பனிச்சிறுத்தை நடவடிக்கை ஆகியவை காலாட்படையினரின் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் தொடர்ச்சியான சாட்சியாக இருந்தன.
*************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil