செப்டம்பர் 21 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்
இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்
- இந்தியாவின் முதல் ‘பசுமை ஆற்றல் தொல்லியல் தளம்’.
- பெண்கள் உறுப்பினர்கள் இல்லாத மாநில சட்டமன்றம்.
- சர்வதேச உலக அமைதி நாள்
செப்டம்பர் 21ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்
1) 16வது தமிழக சட்டமன்றத்தில் உள்ள பெண்கள் உறுப்பினர்கள் சதவீதம்
a) 4.7%
b) 4.9%
c) 5.1%
d) 5.3%
2) இந்தியாவின் முதல் ‘பசுமை ஆற்றல் தொல்லியல் தளம்’
a) தஞ்சைப் பெருவுடையார் கோவில்
b) மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
c) மாமல்லபுரம் கடற்கரை கோவில்
d) தஞ்சை ஐராவதேசுவரர் கோவில்
3) உலக அல்சைமர் தினம் அனுசரிக்கப்படுவது
a) செப்டம்பர் 20
b) செப்டம்பர் 21
c) செப்டம்பர் 22
d) செப்டம்பர் 23
4) இஸ்ரேல் நாடு கொண்டு வந்த யோஸ்மா(YOZMA) என்ற நலத்திட்டத்தை ஈர்த்து தமிழக அரசு கொண்டு வந்த திட்டம்
a)கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்
b)தமிழக முதல்வர் காலை உணவு திட்டம்
c)புத்தொழில் தமிழக திட்டம்
d)முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்
5) நுவாகாய் ஜுஹார் பண்டிகையை கொண்டாடும் இந்திய மாநிலம்
a) பீகார்
b) ஒடிஷா
c) மேற்கு வங்கம்
d) பஞ்சாப்
6) 2026 ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்தும் நாடு
a) சீனா
b) ஜப்பான்
c) தென்கொரியா
d) இந்தியா
7) கோசலகுமாரி என்ற நூலை எழுதியவர் யார்?
a) ஜெயகாந்தன்
b) கி . ராஜநாராயணன்
c) தமிழ் ஒளி
d) மு.வரதராசனார்
8) பெண்கள் உறுப்பினர்கள் இல்லாத மாநில சட்டமன்றம்
a) மணிப்பூர்
b) மிசோரம்
c) நாகலாந்து
d) சிக்கிம்
9) வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்ட நாள்
a)ஜனவரி 26,2019
b)பிப்ரவரி 15,2019
c)செப்டம்பர் 17,2019
d)அக்டோபர் 2,2019
10) சர்வதேச உலக அமைதி நாள் அனுசரிக்கப்படுவது
a) செப்டம்பர் 20
b) செப்டம்பர் 21
c) செப்டம்பர் 22
d) செப்டம்பர் 23
விடைகள்
1) விடை b) c) 5.1%
16வது தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர்களில் 12 பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் மொத்த சதவிதத்தில் 5.1% சதவீதம் பெண்கள் உள்ளனர். 15வது தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர்களில் 21 பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் மொத்த சதவிதத்தில் 9 சதவீதம் பெண்கள் உள்ளனர். 2023 ஆம் ஆண்டில் செப்டம்பர் 19 ஆம் நாளில் மக்களவையில் 128வது சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது .இதில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத்தில்பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க உள்ளது .இதன்மூலம் அனைத்து மாநில சட்டமன்றத்திலும் 33% பெண்கள் இடம் பெறுவர் .
2) c) மாமல்லபுரம் கடற்கரை கோவில்
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில், நாட்டின் முதல் ‘பசுமை ஆற்றல் தொல்லியல் தளமாக’ மாறியுள்ளது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா (HiH) நிறுவனத்துடன் இணைந்து ரெனால்ட் நிசான் டெக்னாலஜி மற்றும் பிசினஸ் சென்டர் இந்தியா (Renault Nissan Tech) நிறுவனங்கள் மேற்கொண்ட பசுமை பாரம்பரியத் திட்டத்தின் முடிவில், மூன்று 10 கிலோவாட் சூரிய மின் நிலையங்களால் உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தியை மூலம் இந்த நினைவுச்சின்னம் ஒளிரச் செய்யப்படும்.மேலும் சோலார் ஆலைகள் அமைக்கப்பட்டு எதிர்கால நுகர்வுக்காக உபரி ஆற்றலை வழங்க உள்ளன.
3) விடை b) செப்டம்பர் 21
நரம்பியல் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் தேதி உலக அல்சைமர் தினம் அனுசரிக்கப்படுகிறது.உலக அல்சைமர் தினம் முதன்முதலில் 1994 செப்டம்பர் 21 அன்று எடின்பர்க்கில் ADI ஆண்டு மாநாட்டின் தொடக்கத்தில் அனுசரிக்கப்பட்டது .செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படும் உலக அல்சைமர் தினத்திற்கான இந்த ஆண்டின் கருப்பொருள் “மிக விரைவில், ஒருபோதும் தாமதமாக்க வேண்டாம், ” என்பது நோய்க்கான ஆபத்து காரணிகளை அடையாளம் கண்டு அபாயத்தைக் குறைப்பதற்கும் ஞாபக மறதி நோயின் ஆரம்பத்தைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதிபலிக்கிறது
4) விடை c) புத்தொழில் தமிழக திட்டம்
இஸ்ரேல் நாடு கொண்டு வந்த யோஸ்மா(YOZMA) என்ற நலத்திட்டத்தை ஈர்த்து தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் புத்தொழில் தமிழக திட்டம் (Startup TN) ஆகும் .தமிழ்நாட்டில் புதிய தொழில்களை ஊக்குவிப்பதற்க்கான சூழலை மேம்படுத்த ரூ 100 கோடியில் பெரு நிதியத்தை உருவாக்க தமிழக அரசு புத்தொழில்- புத்தாக்க கொள்கை வெளியிட்டது .தமிழ்நாடு புதிய தொழிலுக்கான அமைப்புகளை கொண்ட இடமாகத் திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புத்தொழில்- புத்தாக்க கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது .மேலும் ரூ 100 கோடியில் பெரு நிதியம் உருவாக்கப்படவுள்ளது .இந்த நிதியத்தின் நோக்கம் வட்டார அளவில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்கள் ,பெண்களால் நடப்படும் நிறுவனங்களுக்கு முதலீடு செய்தல்.
5) விடை b) ஒடிஷா
செப்டம்பர் 20ம் நாள் ஒடிசாவில் உள்ள மக்கள் நுவாகாய் ஜுஹார் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். நுவாகாய் திருவிழா என்பது மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அறுவடை திருவிழாவாகும் இந்த விழா புதிய அரிசி பருவத்தின் வருகையை குறிக்கிறது..
6)விடை b) ஜப்பான்
2026 ஆண்டுக்கான 20வது ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்தும் நாடு ஜப்பான் ஆகும் .இவ்விளையாட்டு போட்டிகள் நகோயா நகரில் நடைபெறவுள்ளது மேலும் 2030 ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் கத்தாரிலும் மற்றும் 2034 ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சவூதி அரேபியாவிலும் நடைபெற உள்ளது..
7)விடை c) தமிழ் ஒளி
கோசலகுமாரி என்ற நூலை எழுதியவர் தமிழ் ஒளி ஆவார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாளில் பிறந்தார்.இவர் கவிஞர் பாரதியரின் சீடரும், கவிஞர் பாரதிதாசனின் மாணவரும் ஆவார். இவரின் மற்ற படைப்புகள் வீராயி ,மே தின ரோசா, கண்ணப்பன் கிளிகள், மாதாவி காவியம் மற்றும் பல . கவிதைகள், கதைகள், இலக்கிய விமர்சனங்கள், நாடகங்கள், சிறுவர் பாடல்கள் ஆகியவற்றின் மூலம் இலக்கியத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கினார்.சமுதாயத்தின் தாழ்ந்த பிரிவினருக்கு நேர்ந்த அநீதிகளை பற்றிய அவரது பாடல்கள் இலக்கிய வட்டாரங்களில் நன்கு அறியப்பட்டன.கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அவரது சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.
8)விடை b) மிசோரம்
பெண்கள் உறுப்பினர்கள் இல்லாத மாநில சட்டமன்றம் மிசோரம் சட்டமன்றம் ஆகும் .2018 ஆம் ஆண்டில் நடந்த மிசோரம் சட்டமன்ற தேர்தலில் ஒரு பெண் உறுப்பினர் கூட தேர்வாகவில்லை . மிசோரம் மாநிலம் மொத்தம் 40 தொகுதிகள் கொண்டது .பெண்கள் உறுப்பினர்கள் அதிகம் உள்ள மாநில சட்டமன்றம் மேற்கு வங்க சட்டமன்றம் ஆகும் அங்கு 294 உறுப்பினர்களில் 40 பெண் உறுப்பினர்கள் உள்ளனர் .மேலும் சதவீதத்தில் திரிபுரா சட்டமன்றம் 15 சதவீதம் கொண்டு நாட்டின் அதிக பெண்கள் கொண்ட சட்டமன்றமாக உள்ளது . மொத்தம் 60 உறுப்பினர்களில் 9 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்
.9)விடை b) பிப்ரவரி 15,2019
வந்தே பாரத் ரயில் 2019 ஆம் ஆண்டின் பிப்ரவரி 15ஆம் நாளில் தொடங்கப்பட்டது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டின் முதல் உள்நாட்டு அதிவேக விரைவு ரயில் உருவாக்கப்பட்டது. இதற்கு மற்றொரு பெயர் தொடருந்து 18(Train 18) ஆகும் . தற்போது வரை மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் வெவ்வேறு வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன .முதல் வந்தே பாரத் ரயில் புது தில்லி முதல் வழியாக கான்பூர் மற்றும் அலகாபாத் வரை சென்று வாரணாசி சென்றுயடையும் .
10) விடை b) செப்டம்பர் 21
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் தேதி சர்வதேச அமைதி தினத்தை கொண்டாட உலகம் ஒன்று சேர்கிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாள் அமைதிக்கான நமது உறுதிப்பாட்டை நினைவூட்டுகிறது. 2023 சர்வதேச அமைதி தினத்திற்கான கருப்பொருள் “அமைதிக்கான நடவடிக்கைகள்: #உலகளாவிய இலக்குகளுக்கான நமது லட்சியம்” என்பதாகும்.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil