Table of Contents
செய்யுளின் அடிகள் 3 வகையான அமைப்பை கொண்டிருக்கும். அவை மோனை, எதுகை, இயைபு ஆகும். இவை செய்யுளை வகை படுத்த உதவுகிறது. செய்யுளின் அடிகளின் அமைப்பை பற்றி அறிந்து கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்.
மோனை :
- ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.
- மோனை இரண்டு வகைப்படும். அவை
- அடிமோனை
- சீர்மோனை
I. அடிமோனை:
(எ.கா):
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்
II. சீர்மோனை:
(எ.கா):
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு
- இணை (1,2)
- பொழிப்பு (1,3)
- ஒரூஉ (1.4)
- கூழை (1,2,3)
- கீழ்க்கதுவாய் (1,2,4)
- மேற்கதுவாய் (1,3,4)
- முற்று (1,2,3,4)
1. இணை மோனை : (1,2)
- ஒரு அடியின் முதல் இரு சீர்களிலும் வருகிற மோனை, இணை மோனை.
- (எ.கா):
- இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
2 . பொழிப்பு மோனை: (1,3)
- ஒரு அடியின் முதல், மூன்றாம் சீர்களில் வருகிற மோனை பொழிப்பு மோனை
- (எ.கா):
- அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீறடி”
3. ஒரூஉ மோனை (1.4)
- ஒரு அடியின் முதல், நான்காம் சீர்களில் ஒன்றாக வந்தால் ஒருஉ மோனை
- (எ.கா)
- அம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர்
- அகற்றி
4. கூழை மோனை (1,2,3)
- ஒரு அடியின் முதல் மூன்று சீர்களிலும் வருகிற மோனை, கூழை மோனை
- (எ.கா):
- ‘அகன்ற அல்குல்’ அந்நுண் மருங்குதல்
5. கீழ்க்கதுவாய் மோனை (1,2,4)
- ஒரு அடியின் முதல், இரண்டு மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது கீழ்க்கதுவாய் மோனை
- (எ.கா):
- இருள்சேர் இருவினையும்
- சேர இறைவன்
6. மேற்கதுவாய் மோனை{1,3,4)
- ஒரு அடியின் முதல், மூன்று மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது மேற்கதுவாய் மோனை
- (எ.கா):
- அரும்பிய கொங்கை அவ்வளை
- அமைத்தோள்
7.முற்று மோனை (1,2,3,4)
- ஒரு அடியின் முதல் நான்கு சீர்களிலும் வருகிற மோனை முற்று மோனை
- (எ.கா):
- கற்க கசடற கற்பவை கற்றபின்
எதுகை :
- அடி எதுகை
- சீர் எதுகை
I.அடி எதுகை
- அடிதோறும் 2 ம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை
- (எ.கா):
பகவன் முதற்றே உலகு
II.சீர் எதுகை
- சீர் தோறும் 2 ம் எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை. சீர்எதுகை ஏழு வகைப்படும்
அவை
- இணை (1,2)
- பொழிப்பு (1,3)
- ஒரூஉ (1.4)
- கூழை (1,2,3)
- கீழ்க்கதுவாய் (1,2,4)
- மேற்கதுவாய் {1,3,4)
- முற்று (1,2,3,4)
1. இணை எதுகை (1,2):
- ஒரு அடியின் முதல் இரு சீர்களிலும் வருகிற எதுகை இணை எதுகை
- (எ.கா):
- ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியே
2. பொழிப்பு எதுகை (1.3) :
- ஒரு அடியின் முதல், மூன்றாம் சீர்களில் வருகிற எதுகை பொழிப்பு எதுகை
- (எ.கா):
- தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
3. ஒரூஉ எதுகை (1.4) :
- ஒரு அடியின் முதல், நான்காம் சீர்களில் ஒன்றாக வந்தால் ஒருஉ எதுகை
- (எ.கா):
- ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
4. கூழை எதுகை (1,2,3) :
- ஒரு அடியின் முதல் மூன்று சீர்களிலும் வருகிற எதுகை, கூழை எதுகை
- (எ.கா):
- பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
5. கீழ்க்கதுவாய் எதுகை (1,2,4) :
- ஒரு அடியின் முதல், இரண்டு மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது கீழ்க்கதுவாய் எதுகை
- (எ.கா):
- ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
6. மேற்க்கதுவாய் எதுகை (1,3,4) :
- ஒரு அடியின் முதல், மூன்று மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது மேற்கதுவாய் எதுகை
- (எ.கா) :
- கற்க கடசற கற்பவை கற்றபின்
7. முற்று எதுகை :
- ஒரு அடியின் முதல் நான்கு சீர்களிலும் வருகிற எதுகை முற்று எதுகை
- (எ.கா) :
- துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு
இயைபு :
ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ அடியிறுதியில் ஓரெழுத்தோ, பல எழுத்துகளோ ஒன்றிவருவது இயைபு.
(எ.கா) :
நந்தவ னத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!
இதில் ”ண்டி” என்ற எழுத்துகள் ஒன்றி வருகின்றன.
இயைபு இரண்டு வகைப்படும்
அவை
- அடி இயைபு
- சீர் இயைபு
I. அடி இயைபு :
- அடிதோறும் இறுதி எழுத்து, அசை, சொல் ஆகியன ஒன்றிவருவது அடி இயைபு
- (எ-கா)
- கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும்
II.சீர்இயைபு:
- ஓரடியுள் இருக்கும் சீர்களின் இறுதி எழுத்து முதலாயின ஒன்றி இயைய வருமாறு தொடுப்பது சீர் இயைபு.
- சீர்இயைபு ஏழு வகைப்படும். அவை
- இணை (1,2)
- பொழிப்பு (1,3)
- ஒரூஉ (1.4)
- கூழை (1,2,3)
- கீழ்க்கதுவாய் (1,2,4)
- மேற்கதுவாய் (1,3,4)
- முற்று (1,2,3,4)
1. இணை இயைபு (1,2)
- ஒரு அடியின் 1,2 ஆம் சீர்களின் ஈற்றெழுத்து ஒன்றி வருவது இணை இயைபு
- (எ-கா) :
- மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே
2.பொழிப்பு இயைபு (1,3)
- ஒரு அடியின் ஒன்றாம் சீரிலும் மூன்றாம் சீரிலும் இறுதி எழுத்து ஒன்றி வருவது பொழிப்பு இயைபு .
- (எ-கா) :
- ‘அயலே முத்துறழ் மணலே’
3. ஒரூஉ இயைபு(1.4)
- ஒரு அடியின் ஒன்றாம் நான்காம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது ஒரூஉ இயைபு.
- (எ-கா) :
- நிழலே இனியதன் அயலது கடலே
4.கூழை இயைபு (1,2,3)
- ஒரு அடியின் ஒன்றாம் இரண்டாம் மூன்றாம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது கூழை இயைபு.
- (எ-கா) :
- நகிலே வல்லே இயலே
5. கீழ்க்கதுவாய் இயைபு (1,2,4)
- ஒரு அடியின் ஒன்றாம் இரண்டாம் நான்காம் சீர்களின் இறுதி எழுத்து ஒன்றி வருவது கீழ்க்கதுவாய் இயைபு.
- (எ-கா) :
- வில்லே நுதலே வேற்கண் கயலே
6. மேற்கதுவாய் இயைபு (1,3,4)
- ஒரு அடியின் ஒன்றாம் மூன்றாம் நான்காம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது மேற்கதுவாய் இயைபு
- (எ-கா) :
- பல்லே தவளம் பாலே சொல்லே
7. முற்று இயைபு (1,2,3,4 )
- ஒரு அடியின் நான்கு சீர்களிலும் ஈற்றெழுத்து ஒன்றி வருவது முற்று இயைபு
- (எ-கா) :
- புயலே குழலே மயிலே இயலே
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை
பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Home page | Adda 247 Tamil |
Latest Notification | TNUSRB Recruitment 2023 |
Official Website | Adda247 |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil