Tamil govt jobs   »   Study Materials   »   Finance Minister of Tamil Nadu
Top Performing

Finance Minister of Tamil Nadu | தமிழ்நாட்டின் நிதி அமைச்சர்

Finance Minister of Tamil Nadu: நிதி அமைச்சர் என்பவர், அரசின் செயலாக்க அவையைச் சேர்ந்தவர். இவரை பொருளாதாரத் துறை அமைச்சர் என்றும் அழைப்பர். இவரின் பொறுப்புகள், அரசின் நிதியறிக்கையை உருவாக்குதலும், பொருளாதாரத்தை நிர்வகித்தலும் ஆகும். மாநில/மாகாண ஆட்சிகளைக் கொண்ட நாடுகளில் மாநிலத்திற்கு/மாகாணத்திற்கு என நிதி அமைச்சர் நியமிக்கப்படுவார். Finance Minister of Tamil Nadu பற்றிய கூடுதல் தகவல்களை பெற, இந்த கட்டுரையை மேலும் படிக்கவும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Ministry of Finance

நிதி அமைச்சகம் என்பது நாட்டின் நிதி விவகாரங்களைக் கவனிக்கும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கிய அமைச்சகங்களுள் ஒன்று. இதன் தலைவர் நிதியமைச்சர் எனப்படுவார். இந்த அமைச்சகத்தின் பணியானது, வரி, நிதித் துறை சார்ந்த சட்டங்கள், பங்கு சந்தை, வருடாந்திர வரவு-செலவு திட்ட மதிப்பீடு, தேசிய மற்றும் மாநில அரசு நிதி மற்றும் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதாகும்.

நிதியமைச்சகத்தின் நிர்வாகத்தின் கிழேயே குடியியல் பணிகளின் உட்பிரிவுகளான இந்திய வருவாய் பணி (Indian Revenue Service), இந்திய பொருளாதார சேவை (Indian Economic Service), இந்திய செலவு கணக்குகள் சேவை (Indian Cost Accounts Service) மற்றும் இந்தியன் சிவில் கணக்குகள் சேவை (Indian Civil Accounts Service) வருகின்றது.

Read More: List of Chief Ministers of Tamil Nadu | தமிழக முதலமைச்சர்கள்

Finance Minister of India

இந்தியாவின் நிதி அமைச்சர், இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் தலைவர் ஆவார். அமைச்சரவையின் மூத்த அலுவலகம் ஒன்றின் தலைவரான நிதி அமைச்சர், அரசின் நிதிக் கொள்கைக்குப் பொறுப்பானவர் ஆவார். அத்துடன் இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பொது வரவு செலவுத் திட்டங்களின் வரைவாளரும் ஆவார். வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக, பல்வேறு அமைச்சரவைகளுக்கும், அரசு நிறுவனங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகளை இவரே தீர்மானிக்கிறார்.

விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது நிதி அமைச்சராக ஆர். கே. சண்முகம் செட்டியார் இருந்துள்ளார். இவரே இந்தியாவின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். தற்பொழுதைய நிதியமைச்சராக நிர்மலா சீத்தாராமன் பதவியில் உள்ளார்.

READ MORE: Tamil Nadu High Court

Current Finance Minister of Tamil Nadu

Finance Minister of Tamil Nadu | தமிழ்நாட்டின் நிதி அமைச்சர்_3.1
Finance Minister of Tamil Nadu

பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் (பிறப்பு: மார்ச் 7, 1966) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டின் தமிழக சட்டமன்றத் தேர்தலில், மதுரை மத்தி தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மதுரை மத்தி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக நிதி அமைச்சசராக பதவியேற்றார்.

Education

பழனிவேல் தியாகராஜன் 1987ல் திருச்சி NIT கல்லூரியில்(முன்பு மண்டலப் பொறியியல் கல்லூரி என அழைக்கப்பட்டது) பிடெக் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பின், அமெரிக்காவின் பிரபலமான Buffalo பல்கலைக்கழகத்தில் MS மற்றும் Phd பட்டம் பெற்றார். இதன் பின்பே, MIT கல்லூரியில் MBA பட்டம் பெற்றார்.

Professional Background

படிப்பை முடித்த பழனிவேல் தியாகராஜன், லெமேன் பிரதர்ஸ் நிறுவனத்தில் சுமார் 7 வருடம் பணியார் ஆப்ஷோர் கேட்டல் மார்கெட்ஸ் பிரிவின் தலைவராக இருந்தார், இதன் பின்பு ஸ்டாண்டர்ட் சார்ட்டெட் வங்கியின் நிதியியல் சந்தை பிரிவில் பல உயர் பதவிகளில் பணியாற்றியவர் ஆவார்.

Political Life

ஒருப்பக்கம் நிதி துறை குறித்த அனுபவம், நிர்வாகத் திறமை எனப் பழனிவேல் தியாகராஜன் வலிமையாக இருக்கும் இதே வேளையில், மறுபுறம் தமிழக அரசியல் களத்திற்கும், இவரது குடும்பத்திற்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு.

நீதிக்கட்சி சார்பில் தமிழகத்தின் முதல்வராக இருந்த பி.டி. ராஜனின் பேரன் மற்றும் தமிழ்நாட்டின் அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களின் மகன் தான், தமிழ்நாட்டின் தற்போதய நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன்.

20 ஆண்டுகள் சர்வதேச நிதியியல் துறை மற்றும் மனிதவள பிரிவில் பல தலைமை பொறுப்புகளிலிருந்த பழனிவேல் தியாகராஜன், 2014 முதல் தனது பணியிலிருந்து விலகி அரசியலில் ஈடுபடத் துவங்கினார்.

இதுமட்டும் அல்லாமல், திமுக வின் ஐடி விங் பிரிவின் நிறுவன செயலாளராக இருந்தார். தொழில்நுட்பம், நிதியியல் துறை, வெளிநாட்டுச் சந்தைகள், தொழிற்துறை என நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான அனைத்து துறைகளிலும் அனுபவம் உள்ளவராகப் பழனிவேல் தியாகராஜன் இருந்த காரணத்தால், தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள வேலாண்மைத் துறை அமைச்சராகப் பதவியேற்கச் சரியானவர் என நம்பப்பட்டது.

Also Read: Temples in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள்

Indian Finance Ministers from Tamil Nadu

  • ஆர்.கே. சண்முகம் செட்டியார்.–பிறப்பு1892- இறப்பு 1953 – விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சர்.
  • டி.டி. கிருஷ்ணமாச்சாரி.
  • சி. சுப்பிரமணியம் – இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர், 1998 ல் பாரத இரத்தினா பெற்றார்.
  • ஆர். வெங்கட்ராமன் – இந்திய குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
  • ப. சிதம்பரம் (பிறப்பு 16-9-1945 —-) – சிவகங்கை மாவட்டம், காநாடுகாத்தான் ஊரில் பிறந்தார். சட்டம் பயின்றவர். இந்திய தேசிய காங்கிரசின் எம்.பி.
  • நிர்மலா சீத்தாராமன் – தற்போதைய நிதியமைச்சர். இந்திரா காந்திக்குப் பிறகு இவர் இரண்டாவது பெண் நிதித்துறை அமைச்சர் ஆவார். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், மதுரையில் 1959 ஆம் ஆண்டு பிறந்தார். பாஜக மாநிலங்களவை உறுப்பினர்.

READ MORE: Government of Tamil Nadu | தமிழ்நாடு அரசு

Financial Status of Tamil Nadu

2000-01 ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் கடன் அளவு வெறும் 28,685 கோடி ரூபாய் மட்டுமே, 2006 ல் 57,457 கோடி ரூபாய், 2011ல் சுமார் 1 லட்சம் கோடியை தாண்டியது. இப்படி ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வந்த கடன் அளவு 2019 -20ல் 3,97,495 கோடி ரூபாயாக இருந்த கடன், தற்போது கிட்டதட்ட 5 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டின் கடந்த பட்ஜெட் அறிக்கையில், 2020-21 ஆம் நிதியாண்டில், தமிழகத்தின் கடன் அளவு 4,56,660 கோடி ரூபாயாக உயரும் எனக் கணிக்கப்பட்டு இருந்தது.

இதே போல், கடந்த பட்ஜெட் அறிக்கையில், தமிழ்நாட்டு அரசின் வருவாய் 2,19,375 கோடி ரூபாய் எனவும், செலவு 2,41,601 கோடி ரூபாய் எனவும், மொத்தம் பற்றாக்குறை 22,226 கோடி ரூபாய் எனவும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

Read More: National Parks in Tamilnadu | தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்கா

Duties of a Finance Minister

  • நிதி அமைச்சர் ஒரு அரசின் நிதி அமைச்சகத்தின் தலைவர் ஆவார்.
  • மத்திய அல்லது மாநில அமைச்சரவையின் மூத்த அலுவலகங்களில் ஒன்றான நிதி அமைச்சகத்தின் நிதியமைச்சர், அரசாங்கத்தின் நிதிக் கொள்கைக்கு பொறுப்பானவர்.
  • நிதியமைச்சரின் முக்கிய கடமை, ஆண்டுதோறும் மாநில வரவு செலவு கணக்கினை, மாநிலங்களவையில் தாக்கல் செய்வது ஆகும். இது வர இருக்கும் நிதியாண்டில் வரிவிதிப்பு மற்றும் செலவினங்களுக்கான அரசாங்கத்தின் திட்டத்தை விவரிக்கிறது.
  • பட்ஜெட் மூலம், நிதி அமைச்சர் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான ஒதுக்கீடுகளை கோடிட்டுக் காட்டுகிறார்.

*****************************************************

Coupon code- WIN10-10% OFFER

Finance Minister of Tamil Nadu | தமிழ்நாட்டின் நிதி அமைச்சர்_4.1
TNPSC GROUP-4 and VAO Complete Preparation Batch | Tamil Live Classes

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Finance Minister of Tamil Nadu | தமிழ்நாட்டின் நிதி அமைச்சர்_5.1