Tamil govt jobs   »   Study Materials   »   general scientific laws

பொது அறிவியல் விதிகள் | General Scientific laws FOR TNEB ASSESSOR, TNPSC EXAMS

Table of Contents

General scientific laws: அறிவியல் விதிகள் என்பது பலவிதமான இயற்கை நிகழ்வுகளை விவரிக்கும் அல்லது முன்னறிவிக்கும் தொடர்ச்சியான சோதனைகள் அல்லது அவதானிப்புகளின் அடிப்படையில் அறிக்கைகள் ஆகும். இயற்கை அறிவியலின் (இயற்பியல், வேதியியல், வானியல், புவி அறிவியல், உயிரியல்) அனைத்துத் துறைகளிலும் பல சந்தர்ப்பங்களில் (தோராயமான, துல்லியமான, பரந்த அல்லது குறுகலான) சட்டம் என்ற சொல் வேறுபட்ட பயன்பாட்டைக் கொண்டுள்ளது. சட்டங்கள் தரவுகளிலிருந்து உருவாக்கப்படுகின்றன, மேலும் கணிதத்தின் மூலம் மேலும் உருவாக்க முடியும்; எல்லா சந்தர்ப்பங்களிலும் அவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அனுபவ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை. உண்மைக்கு அடிப்படையான காரண உறவுகளை வெளிப்படையாக வலியுறுத்தாவிட்டாலும் அவை மறைமுகமாக பிரதிபலிக்கின்றன என்பது பொதுவாக புரிந்து கொள்ளப்படுகிறது.

Fill the Form and Get All The Latest Job Alerts

General  Scientific  laws preview | பொது அறிவியல் சட்டங்களின் முன்னோட்டம்

அறிவியல் சட்டங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டு வரம்பிற்குள் சோதனைகள் அல்லது அவதானிப்புகளின் முடிவுகளை சுருக்கமாகக் கூறுகின்றன. பொதுவாக, ஒரு சட்டத்தின் துல்லியமானது தொடர்புடைய நிகழ்வின் புதிய கோட்பாடு உருவாக்கப்படும்போது மாறாது, மாறாக சட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கணிதம் அல்லது அறிக்கை மாறாததால், சட்டத்தின் பயன்பாட்டின் நோக்கம் மாறாது. ஒரு சட்டம் பொதுவாக ஒன்று அல்லது பல அறிக்கைகள் அல்லது சமன்பாடுகளாக உருவாக்கப்படலாம், இதனால் அது ஒரு பரிசோதனையின் முடிவைக் கணிக்க முடியும். சட்டங்கள் கருதுகோள்கள் மற்றும் போஸ்டுலேட்டுகளிலிருந்து வேறுபடுகின்றன, அவை அறிவியல் செயல்முறையின் போது முன்மொழியப்பட்ட சோதனை மற்றும் கவனிப்பு மூலம் சரிபார்ப்புக்கு முன்னும் பின்னும். கருதுகோள்கள் மற்றும் போஸ்டுலேட்டுகள் சட்டங்கள் அல்ல, ஏனெனில் அவை ஒரே அளவில் சரிபார்க்கப்படவில்லை, இருப்பினும் அவை சட்டங்களை உருவாக்க வழிவகுக்கும். ஒன்று அல்லது பல சட்டங்களை உள்ளடக்கிய அறிவியல் கோட்பாடுகளை விட சட்டங்கள் குறுகியதாக இருக்கும். அறிவியலின் சில விதிகள் சிறு விளக்கத்துடன் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-20″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/25161209/Formatted-TAMILNADU-STATE-GK-PART-20.pdf”]

நியூட்டனின் விதிகள் | Newton’s laws

முதல் விதி | The first rule

ஒய்வு நிலையில் இருக்கும் ஒரு பொருளின் மீது விசை செயல்படாதவரை அது ஒய்வு நிலையிலேயே இருக்கும். இதுபோன்று இயக்கத்திலுள்ள ஒரு பொருள் தொடர்ந்து இயக்க நிலையிலேயே இருக்கும்.

 

இரண்டாம் விதி | The second rule

இயங்குகின்ற ஒரு பொருளின் உந்த மாறுபாட்டு வீதம் அதன் மீது செலுத்தப்படும் விசைக்கும் நேர் விகிதத்தில் இருப்பதுடன் விசை செயல்படும் திசையிலேயே இருக்கும்.

P=MV

 

மூன்றாம் விதி | The third rule

ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.

எ.கா

  • பலூன் காற்றை வெளியேற்றி முன்னோக்கிச் செல்லுதல்
  • நீரில் நீந்துபவர் நீரை பின்னோக்கித் தள்ளி முன்னோக்கிச் செல்லுதல்
  • மனிதன் நடக்கும்போது தரைக்கு எதிராக காலை உந்தி தூக்குதல்
  • நீரில் மிதக்கும் படகில் இருந்து குதிக்கும்போது, படகு நம்மை விட்டு விலகி செல்லுதல்.

READ MORE: Alkaline Earth Metals

நீயூட்டனின் பொது ஈர்ப்பு விதி | Newton’s law of general gravitation

அண்டத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் மற்றொரு பொருளை அவற்றின் நிறைகளின் பெருக்கற் பலனுக்கு நேர்விகிதத்திலும் அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் அமைந்த விசையுடன் ஈர்க்கிறது.

 

நியூட்டனின் குளிர்வு விதி | Newton’s law of cooling

உயர் வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பத்தை இழக்கும் வீதம் அப்பொருளின் சராசரி வெப்பநிலைக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் இடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டிற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.

 

மிதத்தல் விதிகள்(ஆர்க்கிமிடிஸ் விதி) | Floating rules (Archimedes rule)

மிதக்கும் ஒரு பொருளின் எடை, அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமமாக இருக்கும்.

மிதக்கும் ஒரு பொருளின் ஈர்ப்பு மையம், அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் ஈர்ப்பு மையம் இவ்விரண்டும் ஒர் செங்குத்துக் கோட்டில் அமையும்.

மிதக்கும் பொருளின் அடர்த்தி, அது எந்தப் பாய்மத்தில் மிதக்கிறதோ அந்த பாய்மத்தின் அடர்த்தியினைவிட குறைவாக இருக்கும்.

READ MORE: Tughlaq Dynasty for TNPSC

பாஸ்கல் விதி | Pascal’s law

மூடப்பட்ட திரவத்தின் மீது செலுத்தப்படும் வெளி விசையின் அழுத்தம் திரவத்தின் அனைத்துப் பகுதிக்கும் சமமாகக் கடத்தப்படும்.

 

பரப்பு இழுவிசை | Surface tension

ஒரு திரவப் பரப்பு தனது பரப்பை சுருக்கிக்கொள்ள முயலுகையில், அதன் புறப்பரப்பில் தோன்றும் இழுவிசை பரப்பு இழுவிசை எனப்படும். இது எல்லாத் திசையிலும் சமம்.

எ.கா:

* நீரில் எண்ணெய் விட்டால் படலம்போல் படருவது.

*மழை நீர் பாதரசம் குமிழ் வடிவம் பெறுவதற்கு காரணம் பரப்பு இழுவிசையே ஆகும்.

* பூச்சிகள் நீரில் நடப்பதற்கு காரணம் இதுவே.

 

பாகியல் விசை | Partial Force

ஒரு திரவம் மெதுவாகவும், சீராகவும் கிடைத்தளத்தில் செல்லுகையில் கீழ்ப்பரப்பில் உள்ள திரவம் ஓட்டமின்றி நிலைத்திருக்கும். இவ்வாறு பாகுபொருட்களின் வெவ்வேறு படலங்களுக்கு இடையே உருவாகும் சார்பு இயக்கத்திற்கு பாய்பொருட்கள் ஏற்படுத்தும் தடையே பாகியல் விசை எனப்படும்.

[sso_enhancement_lead_form_manual title=”வாராந்திர நடப்பு நிகழ்வுகள் October 2nd Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/18150252/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-2nd-Week-of-October-2021.pdf”]

பாயில் விதி | Boyle Law

மாறாத வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள வாயுவின் கன அளவும் அதன் அழுத்தமும் எதிர்விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன.

PV = மாறிலி

 

சார்லஸ் விதி | Charles law

மாறாத அழுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள வாயுவின் கன அளவு அதன் தனி வெப்பநிலையுடன் நேர்விகிதத்தில் மாறும்.

ஒரு வாயுவின் கன அளவு மாறாது இருக்கும்போது அவ்வாயுவின் அழுத்தம் அதன் தனி வெப்பநிலையுடன் நேர்விகிதத் தொடர்பைப் பெற்றிருக்கும்.

 

வெப்ப விளைவு பற்றிய ஜூல் விதி | Joule’s law of thermal effect

மின்னோட்டத்தினால் ஒரு கடத்தியில் உருவாகும் வெப்பம், செலுத்தப்படும் மின்னோட்டத்தின் வலிமையின் இருமடிக்கு நேர்விகிதத்திலும், கடத்தியின் மின்தடைக்கு நேர்விகித்த்திலும் கடத்தியின் வழியாக மின்சாரம் பாயும் கால அளவுக்கு நேர்விகிதத்திலும் அமையும்.

 

கெப்ளர் விதிகள் | Kepler laws

முதல் விதி | The first law

கோள்கள் சூரியனை, ஒரு குவியமாகக் கொண்ட நீள் வட்டப்பாதைகளில் சுற்றிவருகின்றன.

 

இரண்டாம் விதி | The second law

கோளையும் சூரியனையும் இணைக்கும் ஆரவெக்டர் சமகால அளவுகளில் சம பரப்பளவுகளை அலகிடுகிறது.

 

மூன்றாம் விதி | The third law 

கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடிகள் சூரியனின்றும் அவற்றின் தொலைவுகளின் மும்மடிக்கும் நேர்விகிதத்தில் இருக்கும்.

READ MORE: Scientific facts to know

இராமன் விளைவு | Raman effect

தூசிகளற்ற தூய்மையான ஊடகத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட அலைநீளம் உள்ள ஒளிகற்றையை செலுத்தினால், வெளியாகும் ஒளிக்கற்றைகளில் அதைவிட அதிக அலைநீளம் உள்ள நிறக்கதிர்களும் காணப்படுகின்றன. இவ்விளைவினால் வானம், கடல் ஆகியவை நீலநிறமாக தோன்றுவதன் காரணம் விளக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியே இராமன் விளைவு எனப்படுகிறது

 

பெர்னெளலி தேற்றம் | Bernoulli theorem

வரிச்சீர் ஒட்டத்தில் பாகுநிலையற்ற, அமுக்க இயலாத ஒரு திரவத்தின் ஏதேனும் ஒரு புள்ளியில் செயல்படும் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி, இதுவே பெர்னெளலி தேற்றம்.

 

ஓம் விதி | Ohm’s law

மாறாத வெப்பநிலையில் மின்னோட்டம் மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்விகிதத்திலும், மின்தடைக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும்.

V = மின்னழுத்த வேறுபாடு I= மின்னோட்டம் R= மின்தடை

VαR V=IR (அல்லது) I=V/R (அல்லது) R=V/I

 

ஆம்பியர் விதி | Ampere rule

ஒருவன் மின்னோட்டத் திசையில் காந்த ஊசியைப் பார்த்துக்கொண்டு நீந்துவதாகக் கருதினால் காந்த ஊசியின் வடதுருவம் அவனது இடது கைப்புறம் திரும்பும்.

 

ஃபிளம்மிங்கின் விதிகள் | laws of Flemming

வலக்கை விதி | Right Hand rule

வலது கையின் பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல் மூன்றையும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக வைத்தால், இதில் பெருவிரல் கடத்தி நகரும் திசையையும், ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும் உணர்த்தினால் நடுவிரல் மின்சாரம் தூண்டப்படும் திசையினைக் குறிக்கும்.

 

இடக்கை விதி | Left Hand Rule

இடக்கையின் பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல், மூன்றையும் ஒன்றுக்கொன்று நேர்க்குத்தாக இருக்குமாறு வைத்தால், ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும், நடுவிரல் மின்னோட்டத்தின் திசையையும் காட்டுவதாகக் கொண்டால், பெருவிரல் விசையின் திசையையும் அதன் மூலம் கடத்தியின் நகரும் திசையும் காட்டும்.

 

மின்காந்தத் தூண்டலின் விதிகள் | laws of electromagnetic induction

பொது விதி | General law

ஒரு கடத்திக்கும், ஒரு காந்தப் புலத்திற்கும் இடையே ஒப்புமை இயக்கம் இருக்கும்போது கடத்தியில் மின் இயக்குவிசை தூண்டப்படும். இதுவே மின்காந்தத் தூண்டல் எனப்படும். இந்தத் தூண்டு மின்னியக்கு விசை கடத்தியில் ஒரு மின்னோட்டத்தை உண்டாக்கும்.

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-19″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/18092333/Formatted-TAMILNADU-STATE-GK-PART-19.pdf”]

பாரடே விதி | Faraday law

பாரடே முதல் விதி | Faraday first law

மூடிய சுற்றுடன் தொடர்புடைய காந்தப் பாயம் மாறும்போதெல்லாம் மின்னியக்குவிசையும், மின்னோட்டமும் தூண்டப்படும். காந்தப்பாயம் மாற்றம் நீடிக்கும் வரையில் தூண்டப்படும் மின்னோட்டமும் நீடிக்கும்.

 

பாரடே இரண்டாம் விதி | Faraday Second law

ஒரு மின் சுற்றுடன் சம்பந்தமுடைய காந்தப்பாயம் மாறிக்கொண்டிருக்கும்போது அச்சுற்றில் மின்னியக்குவிசை தூண்டப்படுகிறது. தூண்டப்பட்ட மின் இயக்கு விசையின் அளவு மற்றும் மின்னோட்ட மதிப்புகள் காந்தப்பாயம் மாறும் வீதத்திற்கு நேர் விகிதத்தில் உள்ளது.

 

லென்ஸ் விதி | Lens law

தூண்டப்படும் மின்னியக்கு விசை மற்றும் மின்னோட்டத்தின் திசைகள், அவை உண்டாவதற்கான இயக்கத்தை எதிர்க்கும் வகையில் அமையும்.

 

General  Scientific  laws  Conclusion |  பொது அறிவியல் விதிகள் முடிவுரை

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 1, RRB NTPC  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

Coupon code- NOV75-75% OFFER

TNPSC GROUP 4 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON nov 29 2021
TNPSC GROUP 4 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON nov 29 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

பொது அறிவியல் விதிகள் | General Scientific laws FOR TNEB ASSESSOR, TNPSC EXAMS_4.1