Table of Contents
வணக்கம் நண்பர்களே..
நேற்று (21.6.2021) தமிழக அரசின் 16 ஆம் சட்டமன்றம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது பேசிய ஆளுநர் தன்னுடைய உரையில் நிறைய விஷயங்கள் குறித்து கூறினார். அதில் TNPSC தேர்வுகள் குறித்து கூறிய விஷயங்கள் இந்த கட்டுரையில் பார்ப்போம் .
அரசு வேலைவாய்ப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை:
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அரசு பணிகளில் முக்கியத்துவம் வழங்கப்படும் என கூறினார். இது குறித்த அரசாணை விரைவில் எதிர்பார்க்கலாம்.
தமிழ் மொழியில் பயின்றோருக்கு முன்னுரிமை:(PSTM)
ஒரு நபர் 1 முதல் 12 வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தமிழில் முடித்தோருக்கு 20% முன்னுரிமை.
குரூப் 4 – 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பயின்றிருக்க வேண்டும்
குரூப் 2A- 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பயின்றிருக்க வேண்டும்
குரூப் 2 மற்றும் குரூப் 1- 1 முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் மொழியில் பயின்றிருக்க வேண்டும்
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய வங்கிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை:
தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலக பணியிடங்கள் மற்றும் அரசு வங்கி பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இது குறித்த அரசாணை விரைவில் வெளியாகும்.
SC/ST மற்றும் பிற்படுத்தப்பட்டோர் கான விடுபட்ட அல்லது நிரப்படாத இடங்கள் விரைவில் நிரப்பப்படும்:
விரைவில் இந்த விடுபட்ட இடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகி அவை நிரப்பப்படும். OBC (creamy layer) பிரிவினருக்கான வருமான வரம்பை 8 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என அறிவித்தார்.
இது போன்ற தேர்வுகள் குறித்த சுவாரசியமான செய்திகளுக்கு ADDA247 தமிழ் செயலியில் எங்களுடன் இணைந்திருங்கள்.
Download the app now, Click here
Use Coupon code: JUNE77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App