Tamil govt jobs   »   Study Materials   »   HUMAN RIGHTS In Tamil

HUMAN RIGHTS in Tamil | தமிழில் மனித உரிமைகள்

HUMAN RIGHTS: Human rights are fundamental rights and freedoms that every human being should have and deserve. These rights are considered to be “certain fundamental, inalienable and inalienable rights that human beings have by virtue of being born human”. Read the article to get information about HUMAN RIGHTS.

Fill the Form and Get All The Latest Job Alerts

HUMAN RIGHTS

மனித உரிமைகள்  பற்றி  ஐ.நா. சபை  பின்வருமாறு வரையறுக்கிறது. மனித உரிமைகள்  என்பது “இன,பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே ஆகும்.  மனித உரிமைகள் ஒவ்வொருவருக்குமான சமத்துவம் மற்றும் நேர்மை பற்றியதாகும். எவர் ஒருவருக்கும் இந்த உரிமையை வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது. Human rights தலைப்பு குறித்து அனைத்து தகவல்களும் இங்கே கிடைக்கும்.

TNPSC Group 1 Notification 2022 | TNPSC குரூப் 1 அறிவிப்பு 2022 

Human Rights : Overview (மனித உரிமைகள் பற்றிய ஒரு பார்வை):

மனித உரிமையின் வரலாற்று வேர்கள், உலகின் பல முக்கிய நிகழ்வுகளில் ஊடுருவி சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றினை நிலை நிறுத்தியுள்ளன. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை சமாளிக்கவும், எதிர்காலத்தில் உலகப்போர் போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டும்,  1945-ல் ஐ.நா. சபை தொடங்கப்பட்டது. மனித உரிமைகளை  நடைமுறைப்படுத்துவதில் உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை  (The Universal Declaration of Human Rights)  பெரும்பங்கு வகிக்கின்றது.

Adda247 Tamil

 

Human Rights : Universal Declaration of Human Rights (UDHR) (உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (UDHR)):

உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை  என்பது  வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கலந்துகொண்டபிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்டது. இது மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.  1948ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட (பொது சபை தீர்மானம் 217A) இந்தப் பேரறிக்கை, அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும். அடிப்படை மனித உரிமைகள் உலகளவில்பாதுகாக்கப்படவேண்டும் எனும் நோக்கம் கொண்ட முதல் பேரறிக்கையான இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் (articles) உள்ளன. அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது. இவ்வுரிமைகள் இனம், பால், தேசியம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பொருந்தும். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சம உரிமையோடும் பிறக்கின்றனர்.

இந்த பேரறிக்கையின் பொது விளக்கமானது சட்டபூர்வமாக பிணைக்கப்பட்ட ஆவணம் அல்ல என்ற போதிலும் அது அரசியல் மற்றும் அறநெறிசார் முக்கியத்துவம் உடையது. மேலும் அதில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மையான உத்திரவாதங்கள் இக்காலத்தில் தரம்மிக்க விதிமுறைகளாக நிலைபெற்று விளங்குகின்றன.

TNPSC Field Surveyor & Draftsman Notification 2022

Human Rights: National Human Rights Commission (இந்திய மனித உரிமைகள் ஆணையம் )

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம். இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இவ்வமைப்பு ஒரு தலைவரையும், சில உறுப்பினர்களையும் கொண்டுள்ளது இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கையில் உத்திரவாதம் தரப்பட்டுள்ள ஒரு தனி மனிதனின் வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பேற்கிறது.

ராணுவ அக்னிவீர் பெண் ஆட்சேர்ப்பு 2022

National Human Rights Commission: Functions (தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள்):

  • மனித உரிமை மீறல் அல்லது அத்தகைய மீறல் குறித்து அரசு ஊழியர் அலட்சியம் காட்டுதல் ஆகியவை மீது விசாரணை நடத்திடுதல்.
  • மனித உரிமை மீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்.
  • மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்.
  • சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல்.
  • மனித உரிமைத் துறையில் பணியாற்றும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் முயற்சிகளை ஊக்குவித்தல்,

IBPS RRB PO தேர்வு தேதி 2022

Human Rights: State Human Rights Commission (மாநில மனித உரிமைகள் ஆணையம்):

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழி செய்யும் வகையுரை ஒன்று பிரிவு 21, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993ல் உள்ளது. மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை இவ்வாணையத்தின் முதன்மை நோக்கமாகும். மேலதிகமாக, எழுத்து மூலமான புகார் பெறாவிட்டாலும்கூட ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் வகையிலும், மாநில மனித உரிமை ஆணையங்களின் செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மையாக்கியது போன்ற ஒழுங்காற்றுவிதிகளை ஆணையம் வகுத்ததன் மூலமாக மாநிலங்களில் ஆணையத்தின் செயல்முறைகள் வலுவாக்கப்பட்டுள்ளது.

TNPSC Recruitment 2022, Notification for VOC and CO Posts

State Human Rights Commission: Functions (மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள்)

  • மாநில பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியனவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்தான மனித உரிமை மீறல்களை விசாரித்தல்.
  • இதன் நோக்கங்களும் பணிகளும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தைப் போன்றே உள்ளன. ஆனால் மாநில எல்லைக்குட்பட்டதாகும். இவ்வாணையத்தில் ஒரு தலைவரும் இரு உறுப்பினர்களும் உள்ளனர்.
  • இவ்வாணையத்திற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் உண்டு. எனவே, தொடுக்கப்படும் வழக்குகள் அல்லது தானாக முன்வந்து தொடுக்கும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கலாம்.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க பரிந்துரைகளும் செய்யலாம்.

 

Human Rights Organisations (மனித உரிமை நிறுவனங்கள்)

உலகெங்கிலும் பல நிறுவனங்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் முயற்சிகளை எடுத்துள்ளன. இந்த அரசுசாரா நிறுவனங்கள் அரசாங்கங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன் மனித உரிமைக் கொள்கைகளின்படி செயல்படுமாறு வலியுறுத்துகின்றன. அவைகளுள் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் (Amnesty International), குழந்தைகள் பாதுகாப்பு நிதியம் (Chidren’s Defence fund), மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) ஆகியனவாகும்.

Read More: TNUSRB SI Exam Marks, Check Your Exam Result and Marks at www.tnusrb.tn.gov.in

Human Rights : values (மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள்)

  • Dignity (கண்ணியம்): வாழ்வதற்கான உரிமை, ஒருமைப்பாட்டிற்கான உரிமை, கட்டாய தொழிலாளர் முறை,அடிமை முறை, இழிவான தண்டனை ஆகியவற்றிற்கான தடை.
  • Justice (நீதி): நேர்மையான விசாரணைக்கான உரிமை, குற்றத்திற்கு ஏற்றாற்போல் தண்டனை, ஒரே குற்றத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை விசாரணைக்குட்படுத்தாத உரிமை.
  • Equality (சமத்துவம்): சட்டத்தின் முன் அனைவரும் சமம், இனம், மதம், பாலினம், வயது, திறமை மற்றும் இயலாமை ஆகியவற்றில் பாகுபாடின்மை

Read More: IBPS RRB PO தேர்வு தேதி 2022 வெளியீடு, புதிய தேர்வு அட்டவணை

Human Rights:Basic Characteristics (மனித உரிமையின் அடிப்படைப் பண்புகள்)

  • Inherent (இயல்பானவை): அவை எந்தவொரு நபராலும் அதிகாரத்தாலும் வழங்கப்படுவதில்லை.
  • Fundamental (அடிப்படையானவை): இந்த அடிப்படை உரிமைகள் இல்லையென்றால் மனிதனின் வாழ்க்கையும், கண்ணியமும் அர்த்தமற்றதாகிவிடும்.
  • Inalienable (மாற்ற முடியாதவை): இவைகள் தனிநபரிடம் இருந்து பறிக்க முடியாதவைகள் ஆகும்.
  • Indivisible (பிரிக்க முடியாதவை): மற்ற உரிமைகளை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருந்தாலும் கூட இந்த அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது.
  • Universal (உலகளாவியவை): இந்த உலகளாவிய உரிமைகள் ஒருவரின் தோற்றம் அல்லது நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும். இந்த உரிமைகள் தேசிய எல்லையைத் தாண்டி அனைத்து நாடுகளிலும் அமல்படுத்தப்படுகின்றன.
  • Interdependent (சார்புடையவை): இவைகள் ஒன்றுக்கொன்று சார்புடையவைகள் ஆகும். ஏனென்றால் ஒரு உரிமையைப் பயன்படுத்தும் போது மற்றொன்றை உணராமல் இருக்க முடியாது.

 

Human Rights: Conclusion  (மனித உரிமைகளின் முடிவுரை)

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் உலக மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகளை உலக அளவில் அறிவித்த பெருமை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையையே சாரும். மனித உரிமைகள் ஒவ்வொருவருக்குமான சமத்துவம் மற்றும் நேர்மை பற்றியதாகும். மேலும் இது அனைவரையும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்கிறது. மனித உரிமையைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். மனித உரிமைகளுக்கான புரிதலும் மரியாதையையும் நமது சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான அடித்தளத்தை வழங்குகிறது. இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 4  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 3 அல்லது 4 வினாக்கள் கேட்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது.

 

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: AUG15 (15% off on all)

HUMAN RIGHTS in Tamil_4.1
Supreme Court of India JCA 2022 Tamil Video Course By Adda247

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in

Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

HUMAN RIGHTS in Tamil_5.1