சிந்துவெளி நாகரிகத்துக்கும், பிற சமகால நாகரிகங்களுக்கும் உள்ள தொடர்பை
அறிந்துகொள்ள நீங்கள் Adda247 தமிழை செயலியை பதிவிறக்கம் செய்யவும்
ஹரப்பா – புதையுண்ட நகரம்
ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் சார்லஸ் மேசன் என்ற ஆங்கிலேயர் தமது நூலில் விவரித்தார்.
“அந்தப் பாழடைந்த செங்கற்கோட்டைஉயரமானசுவர்களுடனும்,கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது” சார்லஸ் மேசன் குறிப்பிட்டார். |
இதுதான் ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்றுச் சான்று ஆகும் .
TNPSC Group 4 Test Series 2023
கி.பி (பொ.ஆ) 1920இல் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்ச- தாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்தனர்.
1924இல் இந்தியத் ஆய்வுத்துறையின் தொல்பொருள் இயக்குநர் ஜான் மார்ஷல் ஹரப்பாவிற்கும், மொகஞ்ச-தாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.
கால வரையறை:
- புவி எல்லை – தெற்கு ஆசியா
- காலப்பகுதி – வெண்கலக்காலம்
- காலம் – கி.மு (பொ.ஆ.மு) 3300-1900 (கதிரியக்க கார்பன் வயதுக் கணிப்பு முறை மூலம் முடிவு செய்யப்பட்டது)
- பரப்பு – 13 லட்சம் சதுர கி.மீ
- நகரங்கள் – 6 பெரிய நகரங்கள்
- கிராமங்கள் – 200க்கும் மேற்பட்டவை
வெண்கலக் காலம் என்பது, மக்கள் வெண்கலத்தாலான பொருள்களைப் பயன்படுத்திய காலம் ஆகும்.
இந்தியத் தொல்லியல் துறை – ASI (Archaeological Survey of India):
- 1861 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற நிலஅளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது.இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது.
இந்திய எல்லைகளில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்:
நகர நாகரிகம்:
ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம். அதற்கான காரணங்கள் :
- சிறப்பான நகரத் திட்டமிடல்.
- சிறப்பான கட்டிடக்கலை வேலைப்பாடு.
- தூய்மைக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை.
- தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள்.
- விவசாய மற்றும் கைவினைத் தொழில்களுக்கானத் திடமான அடித்தளம்.
ஹரப்பா நாகரிகத்தின் தனித் தன்மை:
சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பம்சமே திட்டமிட்ட நகர அமைப்பு ஆகும். நகரம் திட்டமிடப்பட்ட இரண்டு பகுதிகளாக இருந்தது.
அவை:
மேல்நகர அமைப்பு –
- நகரத்தின் மேற்கு பகுதி சற்று உயரமானது. அது கோட்டை எனப்பட்டது.
- நகர நிர்வாகிகள் இதைப் பயன்படுத்தினர்.
- பெருங்குளமும் தானியக் களஞ்சியங்களும் இருந்தன.
கீழ் நகர அமைப்பு –
- நகரத்தின் கிழக்குப்பகுதி சற்று தாழ்ந்த உயரமுடையது.
- அதிக பரப்புக் கொண்டது.அது பொதுமக்கள் வசிக்கும் இடமாக இருந்தது.
மெஹர்கர் – சிந்து வெளி நாகரிகத்துக்கு முன்னோடி:
- மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் ஆகும்.
- இது பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
- இது தொடக்க கால மனிதர்கள் வாழ்ந்ததாகக் கண்டறியப்பட்ட இடங்களுள் ஒன்று.
- மக்கள் வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டதற்கான சான்று இங்கு கிடைத்துள்ளது.
- கி.மு(பொ.ஆ.மு) 7000-ஐ ஒட்டிய காலத்திலேயே மெஹெர்கரில் நாகரிகத்துக்கு முந்தைய வாழ்க்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது பகுதி 1 மற்றும் அடுத்த பகுதிக்கு adda247 செயலியை பதிவிறக்கம் செய்யவும். TNPSC, TNUSRB, TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற இது உதவும்.
***************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group
Instagram = Adda247 Tamil