Tamil govt jobs   »   Indus Valley Civilization in Adda247 Tamil...   »   Indus Valley Civilization in Adda247 Tamil...
Top Performing

Indus Valley Civilization in Adda247 Tamil Part 2 | Adda247 தமிழில் சிந்து சமவெளி நாகரிகம் பகுதி – 2

சிந்துவெளி நாகரிகத்துக்கும், பிற சமகால நாகரிகங்களுக்கும் உள்ள தொடர்பை
அறிந்துகொள்ள பகுதி – 2 ண்டை இங்கு படியுங்கள்.

Indus Valley Civilization Part 1

தெருக்களும் வீடுகளும்:

  • தெருக்கள் சட்டக வடிவமைப்பைக் கொண்டிருந்தன.தெருக்கள் நேராக அமைக்கப்பட்டிருந்தன.அவை வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன.
  • வீடுகள், தெருக்களின் இரு ஓரங்களிலும் சீராக அமைக்கப்பட்டிருந்தன. வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடி அடுக்குகளை உடையனவாகக் காணப்படுகின்றன.
  • ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையும், இருந்திருக்கின்றன.
  • வீடுகள் சுட்ட சுண்ணாம்புக் குளியலறையும் செங்கற்களாலும் கலவையாலும் கட்டப்பட்டிருந்தன.
  • சூரிய வெப்பத்தில் உலர வைக்கப்பட்ட செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன.
  • அரண்மனைகளோ, வழிபாட்டுத்தலங்களோ இருந்ததைத் தீர்மானிக்கக் கூடிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

கட்டடங்கள் கட்டுவதற்கு ஏன் சுட்ட செங்கற்கள் பயன் படுத்தப்படுகின்றன?ஏனென்றால், அவை வலுவானவை, கடினமானவை, நிலைத்து நிற்கக்கூடியவை, நெருப்பைக் கூடத் தாங்குபவை. மேலும், அவை நீரினால் கரைவதில்லை.

Indus Valley Civilization in Adda247 Tamil Part 2_3.1

கழிவு நீர் அமைப்பு:

  • ஏறத்தாழ எல்லா நகரங்களிலும் மூடப்பட்ட கழிவு நீர் வடிகால் அமைப்பு இருந்தது .
  • வடிகால்கள் செங்கற்களைக் கொண்டும் கல்தட்டைகளைக் கொண்டும் மூடப்பட்டிருந்தன.
  • ஒவ்வொரு வீட்டிலும் திடக் கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன.

பெருங்குளம் – மொகஞ்ச-தாரோ:

  • இந்த பெருங்குளமானது நன்கு அகன்று, செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும். இது நகரின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இக்குளத்தின்சுவர்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, நீர் கசியாமல்  இருப்-பதற்காக சுவரிலும், தளத்திலும் பல அடுக்குகள் இயற்கைத் தார் பூசப்பட்டிருந்தன.
  • வடபுறத்திலிருந்தும்,கொண்டு தென்புறத்திலிருந்தும்குளத்திற்குச் செல்லபடிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • குளத்தின் பக்கவாட்டில் மூன்று புறமும் அறைகள் உள்ளன.

Indus Valley Civilization in Adda247 Tamil Part 2_4.1

தானியக் களஞ்சியம் – ஹரப்பா:

  • தானியக் களஞ்சியம் செங்கற்களால் அடித்தளமிடப்பட்ட, பெரிய, உறுதியான கட்டட அமைப்பு.
  • தள வெடிப்புகளில் கோதுமை, பார்லி, தினைவகைகள், எள் மற்றும் பருப்பு வகைகளின் மிச்சங்கள் சிதறிக் காணப்பட்டன.

செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்- -பட்டுள்ளது.இது முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது.

மாபெரும் கட்டடங்கள்:

  • மொகஞ்ச-தாரோவில் இருந்த இன்னொரு மிகப்பெரும் பொதுக் கட்டடம், கூட்ட அரங்கு ஆகும்.
  • இது 20 தூண்கள் 4 வரிசைகளை கொண்டு பரந்து விரிந்த கூடம் ஆகும்.

வணிகம் மற்றும் போக்குவரத்து:

  • தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவைகள் பயன்படுத்தப்பட்டன.
  • அவர்களால் பொருட்களின் நீளத்தை அளவிட, அளவுகள் குறிக்கப்பட்ட குச்சிகளைப் பயன்படுத்தினர்.
  • அவர்கள் சக்கர வண்டிகளைப் பயன்படுத்தினர். ஆரக்கால் இல்லாத திடமான சக்கரங்களைப் பயன்படுத்தினர்.
  • மெசபடோமியாவுடன் விரிவான கடல் வணிகம் நடைபெற்றிருக்கிறது. சிந்துவெளி முத்திரைகள் தற்கால ஈராக், குவைத் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளைக் குறிக்கும்பண்டைய மெசபடோமியாவில் உள்ள சுமேர் பகுதிகளில் கிடைத்துள்ளமை இதை உறுதிப்படுத்துகிறது.
  • சுமேரியாவின் அக்காடியப் பேரரசிற்குட்பட்ட அரசன் நாரம் – சின் என்பவர் சிந்து வெளிப்பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாக நாரம்சின் குறித்த காவியத்தில் கூறப்பட்டுள்ளது.
  • போக்குவரத்திற்குக் காளைகளைப் பயன்படுத்தினர். 
  • பாரசீக வளைகுடா மற்றும் மெசபடோமியாவில் கண்டுபிடிக்கப் பட்டதைப் போன்று உருளை வடிவ முத்திரைகள் சிந்து வெளிப்- -பகுதியிலும் காணப்படுகின்றன .

கப்பல் கட்டும் தளம் – லோத்தல்:

  • தற்கால குஜராத்திலுள்ள லோத்தலில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
  • லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் சபர்மதி ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

மொகஞ்ச-தாரோ-தலைவர்:

  • அமர்ந்த நிலையில் உள்ள ஓர் ஆண் சிலை மொகஞ்ச-தாரோவில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
  • அது நெற்றியில் ஒரு தலைப்பட்டையுடனும்  வலது கை மேல்பகுதியில் ஒரு சிறிய அணிகலனுடனும் காணப்படுகிறது. 
  • இடதுதோள் பூக்கள் மற்றும் வளையங்களின் வடிவமைப்பில் அலங்கரிக் -கப்பட்ட ஒரு மேலங்கியால் மூடப்பட்டுள்ளது.

Indus Valley Civilization in Adda247 Tamil Part 2_5.1

தொழில் நுட்பம்:

  • குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தலில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்தினாலான அளவுகோல் 1704 மி.மீ. வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது. (அதன் சமகாலத்திய நாகரிகங்களில் கண்டுபிடிக்க -ப்பட்ட அளவுகோல்களில் இது தான் மிகச் சிறிய பிரிவு ஆகும்).

“மனிதர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட  உலோகம் – செம்பு”.

இது பகுதி 2 மற்றும் அடுத்த பகுதிக்கு adda247 செயலியை பதிவிறக்கம் செய்யவும். TNPSC, TNUSRB, TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற இது உதவும்.

 

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group

Instagram = Adda247 Tamil

Indus Valley Civilization in Adda247 Tamil Part 2_6.1