- பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஜைனம் என்பதை சமணம் என்று குறிப்பிடுகின்றன.
சமணர் மலை:
- மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி கிராமத்தில் இம்மலை அமைந்துள்ளது.
- சமணத் துறவிகளால் உருவாக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் உருவங்கள் இம்மலையில் காணப்படுகின்றன.
- இது இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்படும் நினைவு சின்னமாக உள்ளது.
கலிஞ்சமலை:
- மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி என்ற கிராமத்தில் இம்மலை அமைந்துள்ளது.
- பாண்டவர் படுக்கை என்று அழைக்கப்படும் சமணர் குகை இங்கு அமைந்துள்ளது.
- சமணத் துறவிகளுக்கான கற்படுக்கைகளே பாண்டவர் படுக்கை என அழைக்கப்படுகிறது.
- அறவோர் பள்ளி என்பது சமணத்துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
- கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் சமண பெண் துறவியான கவுந்தியடிகள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
- சமண மடாலயங்கள்:
-
- புகார்,
- உறையூர்,
- மதுரை,
- வஞ்சி (கருவூர்) காஞ்சிபுரம்
- ஜைனக் காஞ்சி காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திக் குன்றம் என்ற கிராமத்தில் இரண்டு பழமையான சமணக் கோவில்கள் உள்ளன. இக்கிராமம் முன்னர் ஜைனக் காஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 Tamil Nadu Home page | Click here |
Official Website = Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube |
Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group
Instagram = Adda247 Tamil