Table of Contents
Jnanpith Award: If you are a candidate preparing for TNPSC Exams and looking for TNPSC Study Materials, you will get all the information regarding the topic Jnanpith Award, Jnanpith Award First Selection Committee Members, List of Jnanpith Award Winners, Jnanpith Award Rules and Selection Procedures, etc. on this page.
Jnanpith Award: ஞான பீட விருது (Jnanpith Award ) என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு சைனக் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. Jnanpith Award தொடர்பான அனைத்து விவரங்களும், இந்த கட்டுரையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
Fill the Form and Get All The Latest Job Alerts
Jnanpith Award Overview
ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. 1954 -ல் இதைத் தோற்றுவித்தவர் சாந்திபிரசாத் ஜெயின் என்பவர். இந்தியாவின் முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான டாக்டர். இராஜேந்திரபிரசாத் இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுவழங்கி பெருமைப்படுத்த ஒரு அமைப்பு வேண்டும் என்று பல தொழில் முனைவோரிடம் கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக உருவானதே பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக்கழகம்.
இந்த விருது, இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன சரசுவதி சிலையை உள்ளடக்கியது. 1961ல் இந்த விருது நிறுவப்பட்டது. 1965ல் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ. சங்கர குருப்பிற்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார். 1982 வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பைப் பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அதிகபட்சமாக, இந்தி மொழி எழுத்தாளர்கள் பதினொரு முறையு இந்த விருதைப் பெற்றுள்ளார்கள்.
2015 ஆம் ஆண்டில் பரிசுத் தொகையானது இந்திய மதிப்பில் 11 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மொத்தமுள்ள அங்கீகரிக்கப்பட்ட இருபத்தைந்து மொழிகளில் இதுவரை மொத்தம் பதினைந்து மொழிகளுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தி மொழிகளில் இதுவரை பதினொரு விருதுகளும், கன்னடம் மொழிகளில் எட்டு விருதுகளும், வங்காள மொழியில் இதுவரை 6 விருதுகளும், மலையாளத்தில் 6 விருதுகளும், குஜராத்தி , மராத்திய மொழி, ஒடியா மொழி, உருது போன்ற மொழிகளில் தலா நான்கு விருதுகளும், தெலுங்கு மூன்று விருதுகளும், அசாமிய மொழி, பஞ்சாபி மொழி, மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் இரண்டு விருதுகளும், காஷ்மீரி மொழிகளில், கொங்கணி மொழி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒரு முறையும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரையில் ஐம்பத்தி ஏழு நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஏழு நபர்கள் பெண்கள் ஆவர். ஆஷா பூர்ணாதேவி இந்த விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆவார். 1965 ஆம் ஆண்டில் முதல்சத்தியம் எனும் வங்காள புதினத்திற்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.
Read More: TNPSC Re-included Subject in Group 2 Syllabus – Check Latest Updates!!!
Jnanpith Award Background
பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று நிறுவனம் எனும் நிறுவனத்தை 1944 இல் சகு சாந்தி பிரசாத் ஜெயின் என்ற சகு சைனக் குடும்பத்தைச் சேர்ந்தவரால் தோற்றுவிக்கப்பட்டது. மே 1961 இல் இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து சிறந்த நூலிற்கான விருது வழங்க வேண்டும் என நினைத்தனர். பின் நவம்பர் மாத இறுதியில் ரமா ஜெயின் , (பாரதிய ஞானபீடத்தைத் தோற்றுவித்தவர் ) சில இலக்கிய வல்லுநர்களை அழைத்து இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார். அவர்களில் சிலர் காகா காலேல்கர், ஹரிவன்சராய் பச்சன்,ராம்தாரி சிங் திங்கர் , ஜெய்னெந்திர குமார், ஜெகதீசு சந்திர மார்தூர், பிரபாகர் மாசே, அக்சய குமார் ஜெயின் மற்றும் லட்சுமி சந்திரா ஜெயின். மேலும் இது பற்றி 1962 இல் அனைத்திந்திய குஜராத்திம் சாகித்திய பரிசத் மற்றும் பாரதிய பாஷா பரிசத்தின் ஆண்டுக் அமர்வில் விவாதிக்கப்பட்டது.
ஏப்ரல் 2, 1962 இல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சுமார் 300 எழுத்தளர்களை புதுதில்லிக்கு அழைத்து அவர்களை இரு அமர்வுகளாக தரம்வீர் பாரதி அவர்கள் பரிசோதித்து பின் அந்த முன்வரைவினை பிரசாத்திடம் வழங்கினார். முதல் தேர்வுக்குழுக் கூட்டமானது மார்ச் 16, 1963 இல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிரசாத் அவர்கள் பெப்ரவரி 28, 1963 இல் இறந்தார். எனவே காகா காலேல்கர் மற்றும் சம்பூர்ணநந்தர் ஆகியேரை தற்காலிக நிறுவனர்களாக குழு நிர்ணயம் செய்தது.
Read More: TNPSC Group 2/2A Syllabus
Jnanpith Award First Selection Committee Members
முதல் தேர்வுக்குழு உறுப்பினர்களாக நிரஞ்சன் ராய், கரண் சிங், ஆர். ஆர். திவாகர், வி.ராகவன், பி. கோபால் ரெட்டி, ஹரேகிருஷ்ணா மஹாதப், ரமா ஜெயின், மற்றும் லட்சுமி சந்திரா ஜெயின் ஆகியோர் இருந்தனர். சம்பூர்ணாநந்தர் தலைவராக செயல்பட்டார். 1921 முதல் 1951 ஆம் ஆண்டுகள் வரையிலான காலங்களில் எழுதப்பட்ட நூல்களை முதல் விருதுக்கான பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டனர்.
Jnanpith Award Rules and Selection Procedures
விருதிற்காக பல இலக்கிய வல்லுநர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகங்கள், பல மொழிகளைச் சேர்ந்த சங்கங்கள், விமர்சகர்கள். போன்றவர்களிடமிருந்து பரிந்துரைகள் பெறப்படுகின்றன. தற்சமயம் விருது பெற்ற ஒருவரின் நூல்களை அடுத்த இரண்டு வருடத்திற்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. தேர்வுக்குழுவானது சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற மற்றும் நேர்மையான ஏழு முதல் பதினொரு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு உறுப்பினர்களும் மூன்று ஆண்டுகள் தேர்வுக் குழு உறுப்பினர்களாக செயல்படுவர்.தேவையேற்படின் அந்தக் காலத்தை மேலும் இரு ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு செய்யலாம். பரிந்துரைக்கு ஏற்கப்பட்ட நூல்கள் பகுதி அல்லது முழுவதுமாக இந்தி அல்லது ஆங்கிலம்மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பின்னரே அதனை ஆலோசனைக் குழுக்கள் மதிப்பீடு செய்வர். ஒரு குறிப்பிட்ட ஆண்டிக்கான தேர்வு பெற்றவர் பற்றிய அறிவிப்பை தேர்வுக் குழு வெளியிடும். இதற்கான முழு அதிகாரமும் தேர்வுக் குழுவிற்கே உள்ளது.
Read More: How to crack TNPSC group 2 in first attempt
List of Jnanpith Award Winners
- 1965 – ஜி சங்கர குருப் – ஓடக்குழல் (புல்லாங்குழல்) – மலையாளம்
- 1966 – தாராசங்கர் பந்தோபாத்தியாய் – கணதேவ்தா – வங்காள மொழி
- 1967 – குவெம்பு (முனைவர் கே.வி. புட்டப்பா) – ஸ்ரீ இராமயண தரிசனம் – கன்னடம்
- 1967 – உமா ஷங்கர் ஜோஷி – நிஷிதா – குஜராத்தி
- 1968 – சுமித்ரானந்தன் பந்த் – சிதம்பரா – ஹிந்தி
- 1969 – பிராக் கோரக்புரி – குல்-இ-நக்மா – உருது
- 1970 – விஸ்வநாத சத்யநாராயணா – இராமயண கல்பவ்ரிக்ஷமு – தெலுங்கு
- 1971 – விஷ்ணு டே – ஸ்ம்ருதி சட்டா பவிஷ்யத் – வங்காள மொழி
- 1972 – இராம்தாரி சிங் தினகர் – ஊர்வசி – ஹிந்தி
- 1973 – தத்தாத்ரேய ராமச்சந்திரன் பிந்த்ரே – நகுதந்தி – கன்னடம்
- 1973 – கோபிநாத் மொஹந்தி – மட்டிமடல் – ஒரியா
- 1974 – விஷ்ணு சகரம் காண்டேகர் – யயாதி – மராத்தி
- 1975 – அகிலன் – சித்திரப்பாவை – தமிழ்
- 1976 – ஆஷாபூர்ணா தேவி – ப்ரதம் ப்ரதிஸ்ருதி – வங்காள மொழி
- 1977 – க. சிவராம் கரந்த் – முக்கஜ்ஜிய கனசுகலு (ஆயாவின் கனவுகள்) – கன்னடம்
- 1978 – ச.ஹ.வ. அஜ்னேயா – கித்னி நாவோம் மே கித்னி பார் (எத்தனை முறை எத்தனை படகுகள் – [ஹிந்தி
- 1979 – பிரேந்த்ர குமார் பட்டாச்சார்யா – ம்ருத்யுஞ்சய் (சாகாவரம்) – அஸ்ஸாமி
- 1980 – ச.க.பொட்டிக்கட் – ஒரு தேசத்திண்டே கதா (ஒரு நாட்டின் கதை) – மலையாளம்
- 1981 – அம்ரிதா பிரீதம் – காகஜ் தே கான்வாஸ் – பஞ்சாபி மொழி
- 1982 – மஹாதேவி வர்மா – ஹிந்தி
- 1983 – மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் – சிக்கவீர ராஜேந்திரா – கன்னடம்
- 1984 – தகழி சிவசங்கரப் பிள்ளை – மலையாளம்
- 1985 – பன்னாலால் படேல் – குஜராத்தி
- 1986 – சச்சிதானந்த் ரௌத் ராய் – ஒரியா
- 1987 – விஷ்ணு வாமன் ஷிர்வாத்கர் – (குசுமக்ராஜ்) – மராத்தி
- 1988 – முனைவர். சி. நாராயண ரெட்டி – தெலுங்கு
- 1989 – குர்ராடுலென் ஹைதர் – உருது
- 1990 – வி. கே. கோகாக் – பாரத சிந்து ரஷ்மி – கன்னடம்
- 1991 – சுபாஷ் முகோபாத்யாய் – வங்காள மொழி
- 1992 – நரேஷ் மேத்தா – ஹிந்தி
- 1993 – சீதாகாந்த் மஹாபாத்ரா – ஒரியா
- 1994 – உ. இரா. அனந்தமூர்த்தி – கன்னடம்
- 1995 – எம். டி. வாசுதேவன் நாயர் – மலையாளம்
- 1996 – மகாசுவேதா தேவி – வங்காள மொழி
- 1997 – அலி சர்தார் ஜாஃப்ரி – உருது
- 1998 – கிரிஷ் கர்னாட் – கன்னடம்
- 1999 – நிர்மல் வர்மா – ஹிந்தி
- 1999 – குர்தியால் சிங் – பஞ்சாபி
- 2000 – இந்திரா கோஸ்வாமி – அஸ்ஸாமி
- 2001 – ராஜேந்திர கேஷவ்லால் ஷா – குஜராத்தி
- 2002 – ஜெயகாந்தன் – தமிழ்
- 2003 – விந்தா கரண்டிகர்’ – மராத்தி மொழி
- 2004 – ரகுமான் ராகி சுப்துக் சோடா, கலாமி ராகி மற்றும் சியா ரோட் ஜாரேன் மான்சு – காஷ்மீரி மொழி
- 2005 – கன்வர் நாராயண் இந்தி மொழி
- 2006 – ரவீந்திர கேல்கர் கொங்கணி
- 2006 – சத்திய விரத் சாஸ்திரி சமசுகிருதம்
- 2007 – ஓ. என். வி. குரூப் மலையாளம்
- 2009 – அமர் காந்த் – இந்தி & ஸ்ரீ லால் சுக்லா – இந்தி
- 2010- சந்திர சேகர கம்பரா – கன்னடம்
- 2011- பிரதிபா ரே யஜனசெனி – ஒரியா
- 2012 – ரவுரி பாரத்வாச பாகுடுரல்லு – தெலுங்கு
- 2013 – கேதார்நாத் சிங் – இந்தி
- 2014 – பாலச்சந்திர நெமதே – மராத்தி
- 2015 – ரகுவீர் சவுத்ரி – குஜராத்தி
- 2017 – கிருஷ்ணா சோப்தி- இந்தி
Jnanpith Award Conclusion
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 4, GROUP 2 & 2A, GROUP 1 க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
Coupon code- PREP15-15% OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group