Tamil govt jobs   »   Study Materials   »   Largest Seaports in India
Top Performing

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய துறைமுகங்கள்

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய துறைமுகங்கள்: இந்திய நாடு நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள ஒரு நாடு. இது உலகின் பெரிய மூவலந்தீவுகளுள் ஒன்று. இந்தியக் கடற்கரையின் நீளம் 7600 கிலோமீட்டர்கள். 2007-ஆம் கணக்கின் படி ஏறத்தாழ 74 சதவீத சரக்கினை பெரிய துறைமுகங்களே கையாண்டன. Largest Seaports in India பற்றி விரிவாக காணலாம்.

 

Fill the Form and Get All The Latest Job Alerts

 

 

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய துறைமுகங்கள்: முன்னோட்டம்

SEAPORTS
SEAPORTS

13 பெரிய துறைமுகங்களும் 187 சிறிய, நடுத்தர துறைமுகங்களும் உள்ளன. சூன் 2010-இல் போர்ட் பிளேர் நாட்டின் பெரிய துறைமுங்களில் 13-ஆவது துறைமுகமாகச் சேர்க்கப்பட்டது. மேலும் 70% பெட்டகப் போக்குவரத்தினை மும்பைத் துறைமுகமும் சவகர்லால் நேரு துறைமுகக் கழகமுமே கையாண்டன.

 

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய துறைமுகங்கள்:

கண்ட்லா துறைமுகம்:

கண்ட்லா துறைமுகம் அல்லது புது கண்ட்லா இந்தியா வின் மேற்குப் பகுதியில் உள்ள குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்த துறைமுக நகரம். கட்ச் வளைகுடாவில் கண்ட்லா துறைமுகம் அமைந்துள்ளது கண்ட்லா துறைமுகம், கப்பல்களில் சரக்குகளை கப்பல்களில் ஏற்றி இறக்குவதில் இந்தியாவில் முதல் இடத்தை வகிக்கிறது. கண்டலா துறைமுகம், தனியார் நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து எண்ணெய் சுத்திரிகரிப்பு ஆலைகளுக்குத் தேவையான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. கண்ட்லா துறைமுகத்திலிருந்து ஒன்பது கி. மீ.. தொலைவில் உள்ள கண்ட்லா சிறப்பு பொருளாதார மண்டலம் 310 ஹெக்டர் பரப்பளவு கொண்டது.

 

 

READ MORE : The Solar System for TNPSC

பாராதீப் துறைமுகம்:

இந்திய மாநிலமான ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள செயற்கைத் துறைமுகம் ஆகும். இந்த துறைமுகம் இந்திய அரசுக்கு சொந்தமானது. நிலக்கரியை தன்னியக்கமாக கையாளும் இயந்திரம் 20 மில்லியன் (2 கோடி) டன் நிலக்கரியை ஆண்டுதோறும் கையாள்கிறது. இந்த துறைமுகத்தில் இரயில் பாதையும் உண்டு. இதன் மூலம் சரக்குகளை நகர்த்திச் செல்ல முடியும். இந்த பாதை இந்திய இரயில்வேயின் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

READ MORE: Respiratory System for TNPSC

மங்களூர்  துறைமுகம்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய நகரமாகும். இது ஒரு துறைமுக நகரமாகும். மேலும் இதுவே தெற்கு கன்னட மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இதன் மேற்கில் அரபிக் கடலும் கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன.

 

மர்மகோவா துறைமுகம்:

மர்மகோவா என்னும் நகரம், இந்திய மாநிலமான கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ளது. இது மர்மகோவா வட்டத்தின் தலைமையகமாகவும் உள்ளது. இந்த நகரம் மர்மகோவா, வாஸ்கோடகாமா, டாபோலிம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

 

ஜவஹர்லால் நேரு துறைமுகம்:

ஜவஹர்லால் நேரு துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகமாகும். நவி மும்பை ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ள, அரேபிய கடலில் உள்ள இந்த துறைமுகம் தானே க்ரீக் வழியாக அணுகப்படுகிறது. இது நவி மும்பையின் ஒரு நோடல் நகரம்.

 

எண்ணூர்  துறைமுகம்:

எண்ணூர் (Ennore) இந்திய மாநகரம் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். சென்னையின் வடக்கே கொறத்தலையார் ஆறு, எண்ணூர் சிறுகுடா மற்றும் வங்காள விரிகுடா கடல் என முப்புறமும் நீர் சூழ்ந்த தீபகற்ப நிலப்பகுதியாக விளங்குகிறது. எண்ணூர் சிறுகுடா எண்ணூரையும் எண்ணூர் துறைமுகத்தையும் பிரிக்கிறது. கிழக்கே கடலும், மேற்கே கடலில் கலக்கும் பக்கிங்காம் கால்வாயும் ஓடுகிறது.

 

 

காரைக்கால்  துறைமுகம்:

இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள காரைக்கால் மாவட்ட தலைநகர் ஆகும். இது காவிரியின் கழிமுகத்தில் அமைந்துள்ளது. காரைக்கால் தமிழகத்தின் கடற்கரை பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் துறைமுக நகரம் ஆகும்.  காரைக்கால், சென்னை மாநகரில் இருந்து 310 கி.மீ. தொலைவில், தமிழகத்தின் கடற்கரை பகுதியின் மத்தியில், வங்கக் கடலோரத்தில் அமைந்த இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதி ஆகும்.

 

 

READ MORE: The most important mountain peaks in India

 

 

கொச்சி துறைமுகம்:

இதனை கொச்சின் (Cochin) என்றும் அழைப்பர்.  தென்னிந்தியாவின் மலபார் பிரதேசத்தில் அமைந்த கேரளா மாநிலத்தின் மலபார் கடற்கரையில் அமைந்த பெரிய துறைமுக நகரம் ஆகும். கிபி 14-ஆம் நூற்றாண்டு முதல் அரேபிய, ஐரோப்பிய நாடுகளுக்கு கொச்சி துறைமுகத்திலிருந்து நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் கொச்சியை அரபுக் கடலின் இராணி என அழைப்பர். இந்தியாவின் பன்னாட்டுத் துறைமுகங்களில் கொச்சி துறைமுகம் ஒன்றாகும்இந்தியக் கடற்படையின் தென்மண்டலக் கட்டளை மையம் மற்றும் தலைமையிடம் கொச்சியில் உள்ளது.

 

 

கொல்கத்தா  துறைமுகம்:

கொல்கத்தா என்பது முன்னாள் இந்தியாவின் தலைநகரும் தற்போதைய இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகர் கிழக்கு இந்தியாவின் கலாச்சாரம், கல்வி மற்றும் வர்த்தக நடுவமாக விளங்குகிறது. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

 

 

சென்னை துறைமுகம்:

தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம், மதராசு பட்டினம், மெட்ராஸ் (Madras) மற்றும் சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது. சென்னைத் துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று.

 

 

தூத்துக்குடி துறைமுகம்:

வ. உ. சிதம்பரனார் துறைமுகம், இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும். இத்துறைமுகத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் நடுநிலக் கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி/இறக்குமதி நடைபெறுகிறது.

 

 

READ MORE: Longest Rivers in India

 

 

மும்பை  துறைமுகம்:

உலகின் சிறந்த இயற்கை துறைமுகங்களில் ஒன்றாக மும்பை விளங்குகிறது. இது நாட்டின் பயணிகள் போக்குவரத்தில் 60 சதவீதத்தையும், இந்திய சரக்கு கையாள்கையில் பெரும்பாகத்தையும் கையாள்கிறது. இது இந்திய கப்பற்படைக்கு ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது, மேலும் மேற்கத்திய கப்பற்படையின் பிரிவின் தலைமையிடமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. படகுகள் மூலமான படகு சவாரி இந்த பகுதிகளில் உள்ள தீவுகளையும், கடல்களையும் அணுக உதவுகிறது.

 

 

விசாகப்பட்டினம் துறைமுகம்:

விசாகப்பட்டினம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இந்நகரம் நன்கு தொழில் வளர்ச்சியடைந்த நகரமாகும். மேலும் இது ஒரு கடலோர நகரமாகும். ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய நகரான இது துறைமுக நகராகும். இந்திய கடற்படையின் கிழக்கு கரையோர தலைமையகம் இங்குள்ளது.

 

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய துறைமுகங்கள்: முடிவுரை

தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை BANK EXAMS, SSC EXAMS, RRB NTPC EXAMS, TNPSC GROUP 2 & 2A, GROUP 1  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.  எப்பொழுதும் இணைந்திருங்கள் உங்கள்  ADDA247 உடன்.

 

 

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: DIWALI(75% OFFER + double validity)

TNPSC GROUP 2 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON sep 20 2021
TNPSC GROUP 2 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON sep 20 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Largest Seaports in India FOR TNPSC_5.1