Table of Contents
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் என்பது, இரு கூறுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று மாநிலங்களின் பரப்பளவு, மற்றொன்று அவற்றில் வசித்து வரும் மக்களின் தொகையின் அடிப்படையிலாகும். இந்தியாவில் தற்போது 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. நிலப்பரப்பின் அடிப்படையில் இந்தியா உலகின் 7 வது பெரிய நாடாகவும், மக்கள் தொகையின் அடிப்படையில் 2 வது பெரிய நாடாகவும் உள்ளது. இந்த கட்டுரை பரப்பளவு மற்றும் மக்கள் தொகையின் அடிப்படையில், Largest State of India பற்றிய தகவல்களை விரிவாக விவரிக்கிறது.
Fill the Form and Get All The Latest Job Alerts
Largest State of India Overview (இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் பற்றிய முன்னோட்டம்)
இந்தியாவில் 28 மாநிலங்களும், தேசிய தலைநகரப் பகுதியான டெல்லி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. இந்த இந்திய மாநிலங்கள் அனைத்தும், அவற்றின் பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள் தொகையின் அடிப்படையிலும் பட்டியலிடப்படுகின்றன. இந்த இரு பட்டியல்களிலும் முதலாவதாக இடம்பெறும் மாநிலம், முறையே பரப்பளவின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் மற்றும் மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் என்று அழைக்கப்படுகிறது.
Largest State of India based on Area (பரப்பளவின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்)
- பரப்பளவின் அடிப்படையில் பார்க்கும்போது, ராஜஸ்தான் மாநிலம் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் ஆகும். இந்திய நாட்டில் ராஜஸ்தான் ஆக்கிரமித்துள்ள பரப்பளவு 342,239 கிமீ2 ஆகும். ராஜஸ்தான் பல கலாச்சார மற்றும் தார்மீக நெறிமுறைகளைக் கொண்ட ஒரு அழகான மாநிலம் ஆகும்.
- ராஜஸ்தானிற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசமும், மகாராஷ்டிராவும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
- மேலும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ராஜஸ்தானின் மொத்த மக்கள் தொகை 68548437 ஆகும்.
Check also: SBI PO Apply Online 2021, Online Application Form Link
Largest State of India based on Area, a Brief Description (பரப்பளவின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் பற்றிய சிறு குறிப்பு)
- ராஜஸ்தானின் தலைநகரம் ஜெய்ப்பூர் ஆகும்.
- இது இந்தியாவின் மேற்கில் பாகிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ளது.
- 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ராஜஸ்தானின் மொத்த மக்கள் தொகை 68,548,437 ஆகும்.
- ராஜஸ்தானின் கல்வியறிவு விகிதம் 66.11 % ஆக உள்ளது.
- ராஜஸ்தானில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆகும்.
- ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் மக்களவை இடங்கள் 25 ஆகும்.
- இந்தியாவின் பிரபலமான தார் பாலைவனம், இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது.
- ஜெய்சால்மர், தார் பாலைவனத்தின் மையத்தில் அமைந்துள்ளது.
- ராஜஸ்தானில் பயிரிடப்படும் முக்கிய பயிர்கள் பார்லி, கடுகு, முத்து தினை, கொத்தமல்லி, வெந்தயம் மற்றும் கோந்து ஆகும்.
Largest State of India based on Population (மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்)
- மக்கள் தொகையின் அடிப்படையில் பார்க்கும்போது, உத்தரபிரதேசம் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உத்தரபிரதேசத்தின் மொத்த மக்கள் தொகை 199,812,341 ஆகும்.
- இந்திய நாட்டில் உத்தரபிரதேசம் ஆக்கிரமித்துள்ள பரப்பளவு 240,928 கிமீ2 ஆகும்.
- உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மற்றும் பீகார் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
Check Also : NIACL AO அட்மிட் கார்டு 2021 வெளியானது
Largest State of India based on Population, a Brief Description (மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் பற்றிய சிறு குறிப்பு)
- உத்தரபிரதேசம் நம் நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும்.
- உத்தரபிரதேசம் 75 மாவட்டங்களை உள்ளடக்கிய, 18 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் தலைநகரம் லக்னோ ஆகும்.
- மாநிலத்தின் பரப்பளவு 240,928 கிமீ 2 (93,023 சதுர மைல்), இது நமது நாட்டின் மொத்த பரப்பளவில் 7.34% ஆகும்.
- பரப்பளவில் இது நான்காவது பெரிய இந்திய மாநிலமாகும். உத்தரபிரதேசம் அதன் எல்லைகளை, கிழக்கே பீகார், தெற்கே மத்தியப் பிரதேசம், தென்கிழக்கே ஜார்கண்ட் மற்றும் சட்டீஸ்கர், மேற்கே ராஜஸ்தான், வடமேற்கே ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி, வடக்கே உத்தரகண்ட் மற்றும் நேபாளுடன் சர்வதேச எல்லையை கொண்டுள்ளது.
- உத்தரபிரதேசம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட அதிக எண்ணிக்கையிலான பெருநகரங்களைக் கொண்டுள்ளது.
- இந்தியாவின் மிகப்பெரிய கரும்பு உற்பத்தி செய்யும் மாநிலம் உத்தர பிரதேசம் ஆகும். 2013-14 ஆம் ஆண்டின் படி, இந்தியாவின் ஒட்டுமொத்த கரும்பு உற்பத்தியில், இது 38.61% பங்கை கொண்டுள்ளது.
- நம் நாட்டில் மிகப்பெரிய கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலம் உத்தர பிரதேசம்.
- உத்திர பிரதேசம் அதன் பொருளாதாரத்திற்கு, விவசாயத்தில் முக்கியமாக கோதுமை மற்றும் கரும்பை உற்பத்தி செய்வதன் மூலம் பங்களிக்கிறது.
Read Also : இந்தியாவில் உள்ள மிகப்பெரிய துறைமுகங்கள்
Largest State of India and the List of other States by Area and Population (இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் மற்றும் பரப்பளவு மற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில் பிற மாநிலங்களின் பட்டியல்)
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் மற்றும் பரப்பளவு மற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில் பிற மாநிலங்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், ஒவ்வொரு இந்திய மாநிலத்தின் பரப்பளவு, அதன் மக்கள் தொகை மற்றும் அது இந்திய நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தது என்பதை காணலாம்.
வரிசை எண் | மாநிலங்கள் | பகுதி | பரப்பளவு (Km2) | மக்கள் தொகை |
1. | Andhra Pradesh | Southern | 160,205 | 49,577,103 |
2. | Assam | Northeastern | 78,438 | 31,205,576 |
3. | Arunachal Pradesh | Northeastern | 83,743 | 1,383,727 |
4. | Bihar | Eastern | 94,163 | 104,099,452 |
5. | Chhattisgarh | Central | 135,191 | 25,545,198 |
6. | Goa | Western | 3,702 | 1,458,545 |
7. | Gujarat | Western | 196,024 | 60,439,692 |
8. | Haryana | Northern | 44,212 | 25,351,462 |
9. | Himachal Pradesh | Northern | 55,673 | 6,864,602 |
10. | Jharkhand | Eastern | 79,714 | 32,988,134 |
11. | Karnataka | Southern | 191,791 | 61,095,297 |
12. | Kerala | Southern | 38,863 | 33,406,061 |
13. | Madhya Pradesh | Central | 308,252 | 72,626,809 |
14. | Maharashtra | Western | 307,713 | 112,374,333 |
15. | Manipur | Northeastern | 22,327 | 2,570,390 |
16. | Meghalaya | Northeastern | 22,429 | 2,966,889 |
17. | Mizoram | Northeastern | 21,081 | 1,097,206 |
18. | Nagaland | Northeastern | 16,579 | 1,978,502 |
19. | Odisha | Eastern | 155,707 | 41,974,219 |
20. | Punjab | Northern | 50,362 | 27,743,338 |
21. | Rajasthan | Northern | 342,239 | 68,548,437 |
22. | Sikkim | Northeastern | 7,096 | 610,577 |
23. | Tamil Nadu | Southern | 130,058 | 72,147,030 |
24. | Telangana | Southern | 112,077 | 35,003,674 |
25. | Tripura | Northeastern | 10,486 | 3,673,917 |
26. | Uttarakhand | Northern | 53,483 | 10,086,292 |
27. | Uttar Pradesh | Northern | 240,928 | 199,812,341 |
28. | West Bengal | Eastern | 88,752 | 91,276,115 |
Largest State of India Conclusion (இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் முடிவுரை)
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொண்டோம். தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 1 க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
*****************************************************
Coupon code- FEST75-75% OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group