TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.
2021 ஆம் ஆண்டிற்கான பிராண்ட் ஃபைனான்ஸ் இன்சூரன்ஸ் 100 அறிக்கையில் (Brand Finance Insurance 100 report for 2021), அரசுக்கு சொந்தமான ‘லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC)’ காப்பீட்டு நிறுவனம் உலகளவில் மூன்றாவது வலுவான மற்றும் பத்தாவது மதிப்புமிக்க காப்பீட்டு பிராண்டாக உருவெடுத்துள்ளது. உலகளவில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் வலுவான காப்பீட்டு பிராண்டுகளை அடையாளம் காண லண்டனை தளமாகக் கொண்ட பிராண்ட் மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான பிராண்ட் பைனான்ஸ் ஆண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி:
- மிகவும் மதிப்புமிக்க இந்திய காப்பீட்டு பிராண்ட் -LIC (10 வது)
- மிகவும் வலுவான இந்திய காப்பீட்டு பிராண்ட் – LIC (3 வது)
- மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய காப்பீட்டு பிராண்ட் – பிங் ஆன் காப்பீடு (Ping An Insurance), சீனா
- மிகவும் வலுவான உலகளாவிய காப்பீட்டு பிராண்ட் – போஸ்ட் இத்தாலியன் (Poste Italiane), இத்தாலி
அறிக்கையின் சுருக்கம்:
- LIC யின் பிராண்ட் மதிப்பு 2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 7 சதவீதம் அதிகரித்து 65 பில்லியன் டாலராக இருந்தது
- முந்தைய ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் பிராண்ட் மதிப்பில் 26 சதவீதம் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தாலும், சீன நிறுவனமான ‘பிங் ஆன் இன்சூரன்ஸ்’ (Ping An Insurance) உலகின் மிக மதிப்புமிக்க காப்பீட்டு பிராண்டாக உருவெடுத்தது
- வலுவான காப்பீட்டு பிராண்டுகள் பிரிவில் இத்தாலியின் போஸ்ட் இத்தாலியன் (Poste Italiane) முதலிடத்திலும் இரண்டாவது அமெரிக்காவின் மேப்ஃப்ரே (Mapfre ) மற்றும்அதை தொடர்ந்து இந்தியாவின் LIC மூன்றாம் இடத்திலும் உள்ளது.
- இருப்பினும் உலகின் முதல் 100 மிக மதிப்புமிக்க காப்பீட்டு பிராண்டுகளின் மொத்த பிராண்ட் மதிப்பு 2020 ஆம் ஆண்டில் $462.4 பில்லியன் டாலர்களிலிருந்து 6 சதவீதம் குறைந்து 2021 ஆம் ஆண்டில் $433.0 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
Coupon code- KRI01– 77% OFFER
**TAMILNADU state exam online coaching and test series
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials
**WHOLE TAMILNADU LIVE CLASS LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit