Tamil govt jobs   »   Study Materials   »   List of Universities in Tamil Nadu
Top Performing

List of Universities in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்

List of Universities in Tamil Nadu: If you are a candidate preparing for TNPSC Exams and looking for TNPSC Study Materials, you will get all the information regarding the topic List of Universities in Tamil Nadu, Central Universities in Tamil Nadu, State Universities in Tamil Nadu, Deemed Universities in Tamil Nadu, etc. on this page.

List of Universities in Tamil Nadu: ஒரு நாட்டின் உயர்கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றுபவை பல்கலைக்கழகங்கள். பல துறைகளிலும் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளைக் கொண்டிருப்பதுடன், அவற்றுக்கான முழுமையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருப்பது பல்கலைக்கழகத்தின் இலக்கணமாகும். இப்போது காலத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், உலகின் சவால்களை வெல்லக் கூடிய மாணவர்களை உருவாக்க வேண்டுமானால், அவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். எண்ணிக்கை மட்டுமல்லாது அவற்றின் கல்வித் தரமும், ஆராய்ச்சித் திறனும் மேம்படுத்தப்பட வேண்டும். List of Universities in Tamil Nadu பற்றி விரிவாக படிக்க கட்டுரையை மேலும் பார்க்கவும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

List of Universities in Tamil Nadu

இந்திய நாடு செல்வத்திலும், கல்வியிலும் சிறப்புற்று விளங்கிய காலகட்டத்தில், இங்கிருந்த நாளந்தா பல்கலைக்கழகமும், தட்சசீலப் பல்கலைக்கழகமும் உலக மாணவர்களை ஈர்த்தன என்பதை வரலாற்றில் காணலாம். தமிழ்நாடு இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் இருப்பிடமாகும். தமிழகத்தின் காஞ்சிபுரம், பல்கலைக்கழக நகரமாகவே விளங்கியது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Read More: TNPSC Group 2/2A Syllabus

Central Universities in Tamil Nadu

1. மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்

2. கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை

State Universities in Tamil Nadu

1. அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி

2. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

3.அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்

4. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி

5. பாரதியார் பல்கலைக்கழகம், கோவை

6. சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை

7. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை

8. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி

9. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்

10. பெரியார் பல்கலைக்கழகம், சேலம்

11. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை

12. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை

13. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை

14. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை

15. தமிழ்நாடு உடற்கல்வி, விளையாட்டுப் பல்கலைக்கழகம், சென்னை

16. தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை

17. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

18. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை.

19. திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர்

20. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்

21. தமிழ்நாடு இசை, கவின்கலை பல்கலைக்கழகம், சென்னை

22. தமிழ்நாடு சட்டப்பள்ளி, திருச்சி

Apply Now: Tamil Nadu Warehousing Corporation Recruitment Notification 2022

Deemed Universities in Tamil Nadu

1. ஏஎம்இடி, சென்னை

2. அமிர்த விஸ்வவித்யாபீடம், கோவை

3. அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் பல்கலைக்கழகம், கோவை

4. பாரத் பல்கலைக்கழகம், சென்னை

5. பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம், வண்டலூர்

6. சென்னை கணித இன்ஸ்டிட்யூட், சென்னை

7. செட்டிநாடு கல்வி, ஆராய்ச்சி அகாதெமி (கேர்), காஞ்சிபுரம்.

8. ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம், சென்னை

9. கலசலிங்கம் பல்கலைக்கழகம், விருதுநகர்

10. காருண்யா பல்கலைக்கழகம், கோவை

11. எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி இன்ஸ்டிட்யூட், சென்னை

12. மீனாட்சி உயர்கல்வி, ஆராய்ச்சி அகாதெமி, சென்னை

13. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம்

14. பிரிஸ்ட் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

15. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், சென்னை

16. சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை

17. சவீதா பல்கலைக்கழகம், சென்னை

18. சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

19. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா, காஞ்சிபுரம்.

20. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை

21. புனித பீட்டர் பல்கலைக்கழகம், சென்னை

22. வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை

23. வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர்

24. விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகம், சேலம்

25. நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம், தக்கலை

26. ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம், ஸ்ரீபெரும்புதூர்

27. வேல்டெக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை

28. கற்பகம் பல்கலைக்கழகம், கோவை

Read More: TNPSC Upcoming Vacancies:2022-23 | TNPSC வரவிருக்கும் காலியிடங்கள்:2022-23

Date of Establishment of some Popular Universities

1. அழகப்பா பல்கலைக்கழகம்
தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் அழகப்பா பால்கலைக்கழகமும் ஒன்றாகும். இது 1985 ஆம் ஆண்டு, மே 9 ம் தேதி தொடங்கப்பட்டது. இது சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் அமைந்துள்ளது. 1947 ல் தொடங்கப்பட்ட அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி, அழகப்பா செட்டியாரின் கல்வி அறக்கட்டளையில், 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1956 இல் தொடங்கபட்ட உடற்பயிற்சி கல்லூரி ஆகியனவே இந்த பல்கலைக்கழகத்தின் அடிப்படை ஆகும்.

2. அண்ணா பல்கலைக்கழகம்
இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் அண்ணா பல்கலைக்கழகம் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு இந்த பல்கலை கழகம் சென்னையில் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகளை வழங்குவதுடன் ஆராய்ச்சி பணிகளையும் மேற்கொள்கிறது.

3. அண்ணாமலை பல்கலைக்கழகம்
அண்ணாமலை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது ஜூலை 1929 ல், ராஜா அண்ணாமலை செட்டியாரால் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டு, சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது.

Apply Now: ESIC Chennai Recruitment 2021-22 For 385 UDC, Steno & MTS Posts

4. பாரதியார் பல்கலைக்கழகம்
தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுள் பாரதியார் பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இது கோயம்புத்தூரில் 1982ல் உருவானது. சென்னை பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் முதுநிலை மையமே பாரதியார் பல்கலைக்கழகமாக உருமாறியது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 112 தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் செயல்படுகின்றன.

5. பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982 ல் ஏப்ரல் 30 ஆம் நாள் புரட்சிக்கவி பாரதிதாசன் பெயரால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோளாக புதியதோர் உலகம் செய்வொம் என்னும் பாரதிதாசன் பொன்மொழிகளை ஏற்று செயற்பட்டு வருகிறது. 2006-2007 ஆம் ஆண்டு தனது வெள்ளி விழாவை கொண்டாடியது. பெங்களூரு, தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக்கழகத்தினால் இப்பல்கலைக்கழகத்திற்கு “ஏ” கிரேடு வழங்கப்பட்டுள்ளது.

6. மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இந்தியாவின் தென் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில், மதுரை காமராசர் பல்கலை கழகம் அமைந்துள்ளது. இது 1966 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் 72 திணைக் கழகங்களையும், 18 பாடசாலைகளையும் கொண்டுள்ளது. இந்த பல்கலைக்கழகமானது, 109 இணைக்கப்பட்ட கல்லூரிகளையும் (9 தனித்தியங்கும்) உடன் அனுமதிபெற்ற 7 மாலை கல்லூரிகளையும் கொண்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் தொடக்கத்தில் மதுரை பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது. 1978ல் மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் காமராசர் நினைவாக இந்த பல்கலை கலகமானது மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டது.

7. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இந்த பல்கலைக்கழகமானது 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி திருநெல்வேலி நகரில் கொக்கிரகுளம் பகுதியில் இருந்த மாவட்ட ஆட்சியக வளாகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று தெற்கு மாவட்டங்களில் உள்ள மக்களின் நீண்ட கால கல்வியின் தேவைகளை பூர்த்தி செய்ய தொடங்கப்பட்டது. கஜேந்திர காட்கர் கமிஷன் பரிந்துரைக்க மைய மதுரை காமராசர் பல்கலைக்கழக தென்பகுதி கல்லூரிகள் பிரிக்கப்பட்டு இப்பல்கலைக்கழகம் உருவானது. இப்பல்கலைக்கழகத்திற்கு தமிழ் பேராசிரியரான மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு கலை, மொழி, அறிவியல், பொறியியல், மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 24 துறைகள் உள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் உள்ள 102 கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

Adda247 Tamil

8. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
தமிழ் நாட்டு பல்கலைக்கழகங்களுள் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் கல்வி வழி பெண்களை முன்னேற்றுவதை தம் இலக்காக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனம் ஆகும். இது 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சரி நிகர் சமானம் என்ற பாரதியின் மொழியை இலக்காக கொண்டு அவரது நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது. அத்தருணத்தில் தனது மகத்தான சேவைக்காக நோபல் விருதை பெற்ற அன்னை தெரசாவை அங்கீகரிக்கும் வகையில் அவரது பெயரைப் பல்கலைக்கழகத்துக்கு சூட்டியதுடன், அவரது கரங்களால் கொடைக்கானலில் அடிக்கல் நாட்ட செய்து துவக்கப்பட்டது. இது தொடக்கத்தில் கொடைக்கானலில் உருவாக்கப்பட்டு பின் 1990ல் சென்னைக்கு மாற்றப்பட்டு மீண்டும் கொடைக்கானலுக்கு 1994 இல் மாற்றப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் மையங்கள் கொடைக்கானல், மதுரை மற்றும் சென்னையில் உள்ளன. இங்கு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, இளநிலை ஆய்வுப்படிப்பு, முனைவர் பட்ட ஆய்வு, ஆசிரியர் பயிற்சிப்பட்ட வகுப்பு, சான்றிதழ் வகுப்புகள், சுய தொழில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

9. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம்
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1987 ல் தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகமாக தொடங்கப்பட்டு சென்னை, மதுரை காமராசர், பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் மருத்துவப்பிரிவுகள் இதன் கீழ் இணைந்துள்ளன. 1990 அக்டோபர் முதலாம் திகதி எம்.ஜி.ஆர். பெயர் வழங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகமானது சென்னையில் அமைந்துள்ளது.

10. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் இதுவாகும். இது 1996 ல் நவம்பர் 14ம் தேதி உருவானது. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் முதலிய இடங்களின் சட்டக் கல்லூரிகளை இணைத்து தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் சென்னையில் அமைந்துள்ளது.

11. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இது 1971 ஜூன் மாதம் 1ம் தேதி உருவாக்கப்பட்டது. கோயம்பத்தூரில் அமைந்துள்ளது. இது தமிழாடு ஜி.டி.நாயுடு வேளான்மைப் பல்கலைக்கழகம் என 1990ல் பெயர் மாற்றப்பட்டு, பின்னர் 1992 இல் மீண்டும் தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.

Apply Now: Tamil Nadu Electricity Board Recruitment | தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு

12. பெரியார் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகமானது சேலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைகழகமாகும். இது 1997ல் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்திற்கு சமூக சீர்திருத்தவாதி பெரியார் பெயரிடப்பட்டது. இது பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது.

13. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இந்த பல்கலைக்கழகம் சென்னை மாதவரத்தில் அமைந்துள்ளது. சென்னை கால்நடை கல்லூரி, நாமக்கல் கால்நடைகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி ஆகியனவே இதன் அடிப்படை. இக்கல்லூரி 1989 இல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்து தனிப்பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது.

14. தஞசாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞசாவூர் தமிழ் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துக்ள்ளது. தமிழ்மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாக கொண்டது. இது 1981 செப்டம்பர் 15 ஆம் நாள் உருவாக்கப்பட்டது.

15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
திருவள்ளுவர் பல்கலைக்கழகமானது தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் 2002 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழக சட்டம் உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் பெயரில் அமைந்துள்ளது. விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள காலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் வருகின்றன. இப்பல்கலைக்கழகம் தொடக்கத்தில் வேலூர் கோட்டை வளாகத்தில் அமைந்திருந்தது. அதன் பின்னர் வேலூரை அடுத்த சேர்க்காட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு செயற்பட்டு வருகிறது.

Read More: Famous Temples in Tamil Nadu

16. சென்னை பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, செப்டம்பர் 1857ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம், நடுவண் அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது. மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்து துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக இந்த சென்னை பல்கலைக்கழகம் விளங்கியது. இப்பொழுது சட்டம், மருத்துவம், பொறியியல் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுவிட்டன. தன்னாட்சி கல்லூரிகளை முதல் முறையாக தொடங்கியது சென்னை பல்கலைக்கழகம். இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும்.

17. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு அரசு ஆசிரியர் பணிக்கான கல்வியியல் கல்லூரிகளை மட்டும் கொண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துடன் தமிழ்நாட்டிலுள்ள கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் கல்வியியலில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகள் மட்டும் வழங்கப்படுகின்றன.

18. தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இந்தியாவில் தமிழ்நாடு மாநில அரசினரால் நிறுவப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் பல பாடத்திட்டங்களில் பட்டய, சான்றிதழ், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பாடத்திட்டங்களை வழங்குகிறது. இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் போன்று சிறப்பாக வடிவமைத்துள்ளது. 2011 ல் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இப்பல்கலைக்கழகத்தின் புதிய நிர்வாக கட்டிடத்தை சைதாபேட்டையிலுள்ள ஆசிரியர் கல்வி வளாகத்தில் திறந்து வைத்தார். இப்பல்கலைக்கழகம், 2013 – 14 ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து துறைகளிலும் நிறைஞர் (M.Phil) மற்றும் முனைவர் (Ph.D) ஆகிய ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் பகுதி மற்றும் முழு நேர முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக சட்ட பேரவை இயற்றிய 2002 ஆம் ஆண்டின் எண் 27 சட்டத்தின் கீழ் உயர்கல்வித் தொடர இயலா ஆதரவற்றோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலையில் ஈடுபட்டுள்ள ஆண், பெண்களுக்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காக பள்ளிக்கல்வியை தொடராதவர்களுக்கும் பயன்தருமாறு இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.

Read More: Lockdown In Tamilnadu: TNPSC exams postponed

19. தமிழ்நாடு உடற்கல்வியியல் மாற்றம் விளையாட்டுப் பல்கலைக்கழகம்
இப்பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசால் 2005 ஆம் ஆண்டு உடன்கல்வியியல் மற்றும் விளையாட்டுகள் துறைகளுக்கென சென்னையில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகமாகும். இந்தியாவிலேயே இதுவே விளையாட்டுக் கல்விக்காக அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகமாகும்.

20. தமிழ் நாடு மீன்வள பல்கலைக்கழகம்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீனவள பல்கலைக்கழக சட்டம், 2012ன் படி நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் மீன்வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல் , மீன் உயிர்தொழில் நுட்பம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள பொருளாதாரம், மீன்வள விரிவாக்கம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்துதல் போன்ற படிப்புகள் உள்ளது. பொது நுழைவு தேர்வு மூலம் இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

21. தமிழ்நாடு தோட்டக்கலை பல்கலைக்கழகம்
இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் 2011 ஆம் ஆண்டு, பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று தமிழ்நாடு தோட்டக்கலை பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.

Coupon code- WIN15-15% OFFER

List of Universities in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்_4.1
TNPSC -Group -2 /2A | Tamil Live | By ADDA247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

List of Universities in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்_5.1