Tamil govt jobs   »   Megalithic in Tamil Nadu Part 3...   »   Megalithic in Tamil Nadu Part 3...

Megalithic in Tamil Nadu Part 3 in Adda247 Tamil | தமிழ்நாட்டின் பெருங்கற்காலம் பகுதி – 3 Adda247 தமிழில்

தமிழ்நாட்டில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள்:

  • புதிய கற்காலத்தின் கடைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பெருங்கற்காலப் புதைப்பு முறைகளைப் பின்பற்றத் தொடங்கினர்
  • இம்முறையின்படி இறந்தவர்களின் உடல் பெரிய மட்பாண்டத்தில் வைக்கப்படும். 
  • சில பொருட்களும் அதனுடன் வைக்கப்படும். 
  • இந்த பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் இரும்பைக் குறித்த அறிவைப் பெற்றிருந்த, சமூகமாக கூடி வாழத் தெரிந்திருந்த மிகவும் முன்னேறிய தமிழ் நாகரிகத்திற்கான சாட்சிகளாகும்.

Megalithic in Tamil Nadu Part 3 in Adda247 Tamil | தமிழ்நாட்டின் பெருங்கற்காலம் பகுதி - 3 Adda247 தமிழில்_3.1

கற்திட்டைகள் (Dolmens):

  • இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறம் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்பட்டு அவற்றின்மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும். 
  • இக்கற்திட்டைகள் வீரராகவபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) கும்மாளமருதுபட்டி (திண்டுக்கல் மாவட்டம்) நரசிங்கம்பட்டி (மதுரைமாவட்டம்) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

Megalithic in Tamil Nadu Part 3 in Adda247 Tamil | தமிழ்நாட்டின் பெருங்கற்காலம் பகுதி - 3 Adda247 தமிழில்_4.1

நினைவு கற்கள் (Menhir):

  • பிரிட்டானிய (Breton) மொழியில் ‘மென்’ என்றால் கல், ‘கிர்’ என்றால் “நீளமான” என்று பொருள். 
  • ஒரே கல்லிலான இத்தூண்கள் இறந்தோரின் நினைவாக செங்குத்தாக நடப்படும்.
  • திருப்பூர் மாவட்டம் சிங்கரிபாளையம், தேனி மாவட்டம் வெம்பூர் ஆகிய இடங்களில் இவ்வாறான நினைவுத் தூண்கள் உள்ளன. 
  • இவை உப்பாற்றின் இரு கரைகளிலும் பழங்கால வாழ்விடங்கள் இருந்ததைக் சுட்டிக்காட்டுகின்றன
  • மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டியிலும், ஈரோடு மாவட்டம் குமரிக்கல் பாளையத்திலும், கொடுமணலிலும் இது போன்ற நினைவுத் தூண்கள் உள்ளன.

TNUSRB CONSTABLE 2023

நடுகற்கள்:

  • இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும்  வகையில் நடப்படும் கல் நடுகல்லாகும் தனது கிராமத்தை கொடிய விலங்குகளிடமிருந்து அல்லது எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய வீரர்களின் நினைவாக நடப்படுவது ஆகும். 
  • திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகேயுள்ள மானூர், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன் கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் புலிமான் கோம்பை ஆகிய இடங்களில் நடுகற்கள் காணப்படுகின்றன.

Megalithic in Tamil Nadu Part 3 in Adda247 Tamil | தமிழ்நாட்டின் பெருங்கற்காலம் பகுதி - 3 Adda247 தமிழில்_5.1

வேதகாலம் பற்றி அறிந்துகொள்ள பகுதி – 1, பகுதி – 2, பகுதி – 3, பகுதி – 4 மற்றும் பகுதி – 5 ண்டை இங்கு படியுங்கள்.

Vedic Culture Part 1

Vedic Culture Part 2

Vedic Culture Part 3

Vedic Culture Part 4

Vedic Culture Part 5

Megalithic Culture Part 1

Megalithic Culture Part 2

இது பகுதி 01 மற்றும் அடுத்த பகுதிக்கு adda247 செயலியை பதிவிறக்கம் செய்யவும். TNPSC, TNUSRB, TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற இது உதவும்.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group

Instagram = Adda247 Tamil