Tamil govt jobs   »   Study Materials   »   National Income for TNPSC | தேசிய...
Top Performing

National Income for TNPSC | தேசிய வருவாய்

Table of Contents

தேசிய வருவாய் என்பது பெரிய பிரச்சனைகளான வேலைவாய்ப்பு இன்மை, பண வீக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்ட தவிர்க்க முடியாத தயாரிப்பு ஆகும். தேசிய வருவாய் என்பது, ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.
இது உற்பத்தியிலிருந்து கிடைக்கும் மொத்த வருமானம் அல்லது உற்பத்திக்காக செய்யப்படும் மொத்த செலவைக் குறிக்கும். National Income என்பது மறுமுறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல், ஒரு குறிப்பிட்ட காலத்தில், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண் மதிப்பாகும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

National Income Overview| தேசிய வருவாய் ஒரு கண்ணோட்டம் 

National Income
National Income
  • தேசிய வருவாய்க்கான கருத்தை, நோபல் பரிசு பெற்ற சைமன் குஷ்நெட்ஸ் (Simon Kuznets), முதலில் அறிமுகப்படுத்தினார்.
  • தேசிய வருவாய் ஆனது ஓர் ஆண்டில், ஒரு நாட்டில் உள்ள உழைப்பும், முதலும் சேர்ந்து அங்குள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பண்டங்கள் மற்றும் பணிகளின் பண மதிப்பாகும்.
  • ஒரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை அளவிடுவதற்கான ஒரு முழுமையான அளவு கோலை தேசிய வருவாய் தருகிறது. இது ஒரு நாட்டின் வாங்கும் சக்தியை குறிப்பிடும் காரணியாக இருக்கிறது. தேசிய வருவாயின் வளர்ச்சி, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறும் விகிதத்தைப் பொருத்தே, பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவிடப்படுகிறது. இது பொருளாதாரத் திட்டமிடுதலுக்கான ஒரு கருவியாக திகழ்கிறது.

Read More : Chemical Bonds for TNPSC | வேதிப் பிணைப்பு

Basic Concepts of National Income | தேசிய வருவாயின் அடிப்படை கருத்துக்கள்

தேசிய வருவாயை அளவிடுவதற்கு பின்வரும் அடிப்படை கருத்துக்கள் பயன்படுகின்றன.

Gross Domestic Product | மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

Gross Domestic Product
Gross Domestic Product

மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு கணக்கீட்டு ஆண்டில், ஒரு நாட்டின் எல்லைப்பரப்புக்குள் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலைப் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பாகும். இதற்கு சந்தையில் நிலவும் விலை பயன்படுத்தப்பட்டால், இது சந்தைவிலை GDP என அழைக்கப்படுகிறது. இவ்வருமானத்தில் வெளிநாடுகளிலிருந்து ஈட்டப்படும் நிகர காரணி வருமானம் சேர்க்கப்படுவதில்லை.

இது செலவு முறையைப் பயன்படுத்தி கணக்கிடப்படும்.

GDP = C + I + G + (X – M).

இதில் C என்பது நுகர்வு பண்டங்கள், I என்பது முதலீட்டு பண்டங்கள், G என்பது அரசின் வாங்குதல்கள் மற்றும் (X – M) என்பது நிகர ஏற்றுமதி ஆகும்.

Also Read : Education System in Tamil Nadu | தமிழ்நாட்டில் கல்வி முறை | Unit.9 Study Material for TNPSC Group 2-Part 2

Gross National Product | மொத்த தேசிய உற்பத்தி (GNP)

Gross National Product
Gross National Product

மொத்த தேசிய உற்பத்தி என்பது, ஒரு நாட்டில், ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலை பொருட்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பின் மொத்த கணக்கிடுதல் ஆகும். இதில் நிகர வெளிநாட்டு வருமானமும் (நிகர ஏற்றுமதி) சேர்க்கப்படும்.
மொத்த தேசிய உற்பத்தியில், கீழ்க்கண்ட ஐந்து வகையான இறுதிநிலை பொருட்கள் மற்றும் பணிகள் உள்ளன.

  1. ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலை பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு. இவை மக்களின் நுகர்வுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உற்பத்தி செய்யப்பட்டவை. இதனை நுகர்வு (Consumption) என்கிறோம்.
  2. மொத்த உள்நாட்டு மூலதன பொருட்களின் தனியார் முதலீடுகள். இதில் மூலதனத் திரட்சி, வீடுகட்டுதல், உற்பத்திக்காக இருப்பில் உள்ள முடிந்த மற்றும் முடியாத பொருட்கள் ஆகியவை அடங்கும். இதனை முதலீடு (Investment) எனக் குறிக்கிறோம்.
  3. அரசால் வாங்கப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகள் G என்று குறிப்பிடப்படுகிறது.
  4. உள்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதியிலிருந்து (X), வெளிநாட்டிலிருந்து வருவிக்கப்பட்ட இறக்குமதியை (M) கழிப்பதன் மூலம் கிடைக்கும் (X –M), நிகர ஏற்றுமதி ஆகும்.
  5. நிகர வருமானம் என்பது, வெளிநாடுகளில் இருந்து பெற்ற காரணிகளின் வருவாய்க்கும் (கூலி, வட்டி, இலாபம்), நம் நாட்டில் குடியிருக்கும் வெளிநாட்டுக்காரர்களுக்கு கொடுக்கப்பட்ட காரணிகளின் வருவாய்க்கும் இடையே உள்ள வேறுபாடு (R – P) ஆகும்.

எனவே சந்தை விலையில் GNP என்பது C + I + G + (X – M) + (R – P) ஆகும். சந்தை விலையில் GNP = சந்தை விலையில் GDP + வெளிநாட்டிலிருந்து பெற்ற நிகர வருமானம்.

Net Domestic Product | நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP)

Net Domestic Product
Net Domestic Product

நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது, ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் ஏற்படும் தேய்மானத்தை கழித்த பிறகு கிடைக்கும் நிகர உற்பத்தி ஆகும். ஒரு நாட்டில் உள்ள சில முதலீட்டுக் கருவிகள், உற்பத்தியில் ஈடுபடும்போது, அவை தேய்மானம் அடையலாம், பழுதாகிப் போகலாம் அல்லது பயனற்று போகலாம். தேய்மானத்தின் மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து கழிப்பதனால் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தி ஆகும்.

நிகர உள்நாட்டு உற்பத்தி = மொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்

Net National Product | நிகர தேசிய உற்பத்தி (NNP)

Net National Product
Net National Product

நிகர தேசிய உற்பத்தி என்பது ஒரு ஆண்டின், பொருளாதாரத்தின் நிகர உற்பத்தியின் மதிப்பு ஆகும். மொத்த தேசிய உற்பத்தியிலிருந்து, தேய்மானத்தின் மதிப்பு, முதலீட்டு சொத்தின் மாற்று கழிவு ஆகியவற்றை கழித்த பின் கிடைப்பது நிகர தேசிய உற்பத்தி ஆகும்.

நிகர தேசிய உற்பத்தி = மொத்த தேசிய உற்பத்தி – தேய்மான கழிவு

Also Read : TNPSC TAMILNADU GENERAL KNOWLEDGE Q&A PART-19 PDF 

Methods of Measuring National Income | தேசிய வருவாயை அளவிடும் முறைகள்

Methods of Measuring National Income
Methods of Measuring National Income

ஒரு ஆண்டில், ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பை கணக்கிட்டு, அதனை பணமதிப்பில் மதிப்பிட வேண்டும். அதாவது நமது சுய நுகர்வுக்காவோ அல்லது சேமிப்பிற்காகவோ பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதன் பண மதிப்பையும் தேசிய வருவாய் கணக்கிடலில் சேர்க்கவேண்டும்.

தேசிய வருவாயை மூன்று முறைகளை பயன்படுத்தி அளவிடலாம்.

  1. உற்பத்தி அல்லது மதிப்புக் கூடுதல் முறை
  2. வருமானம் அல்லது காரணிகளின் ஊதிய முறை
  3. செலவு முறை

இந்த மூன்று முறைகளையும் சரியாக பயன்படுத்தி கணக்கிட்டால் உற்பத்தி, வருமானம் மற்றும் செலவு ஆகிய மூன்று மதிப்புகளும் சமமாக இருக்கும்.

உற்பத்தி = வருமானம் = செலவு

ஏனென்றால் இந்த மூன்று முறைகளும், இயல்பாகவே ஒரு சுழற்சியாக இருக்கும். நுகர்வை பூர்த்தி செய்ய உற்பத்தி தொடங்கப்படுகிறது. உற்பத்தி செய்ய, ஆட்களை வேலைக்கு அமர்த்தினால், உற்பத்தி முடிந்த பிறகு வருமானம் பெருகும். பிறகு வேலையாட்களுக்கு ஊதியத்தை அளித்து, அதன் மூலம் நுகர்வு செலவு செய்யப்படும்.

Product Method | உற்பத்தி முறை

  • உற்பத்தி முறை என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை கணக்கிடுவது ஆகும். இந்த முறை சரக்கு முறை என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் விவசாயம், தொழில், வணிகம் போன்ற துறைகளின் உற்பத்தியின் மொத்தமே தேசிய உற்பத்தி ஆகும்.
  • ஒரு துறையின் வெளியீடு (Output) மற்றொரு துறையின் உள்ளீடு (Input) ஆகச் செல்ல வாய்ப்பு இருப்பதால், ஒரே பொருள் இரு முறை அல்லது பல முறை கணக்கில் வர வாய்ப்பு உள்ளது. இது இருமுறை கணக்கிடல் என்று அழைக்கப்படுகிறது.
  • இதனை தவிர்க்க இறுதி பொருட்களின் மதிப்பையோ அல்லது ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட மதிப்புக் கூட்டலையோ கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Income Method | வருமான முறை

  • வருமான முறை என்பது தேசிய வருவாய் கணக்கிடல் பகிர்வு பகுதியிலிருந்து அணுகப்படுகிறது. உற்பத்தி நிலைகளில் பணிபுரிபவர்கள் பெரும் அனைத்து வித ஊதியங்களையும் கூட்டி, தேசிய வருமானத்தைக் கணக்கிடலாம். வருமான முறை, காரணிகள் சம்பாதிக்கும் முறை என்றும் அழைக்கப்படுகிறது.
  • இதில் மொத்த நிறுவனங்களும், வெவ்வேறு தொழில் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. பணிபுரிபவர்களின் வருவாயும், உழைப்பாளர் வருமானம், மூலதன வருமானம் மற்றும் கலப்பு வருமானம் போன்ற மூன்று வகைகளில் பிரிக்கப்படுகிறது.
  • உள்நாட்டில் பணிபுரிபவர்களின் வருவாய்களுடன், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் நிகர வருவாயை கூட்டுவதன் மூலம் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.
    Y = w + r + i + p + (R – P)

w = கூலி, r = வாடகை, i = வட்டி, p = இலாபம், R = ஏற்றுமதி, P = இறக்குமதி

Expenditure Method | செலவு முறை

  • இந்த முறையில், ஒரு ஆண்டில், சமுதாயத்தில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் மொத்த செலவுகள் அனைத்தையும் கூட்டி, தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.
  • தனிநபர் சுய நுகர்வு செலவுகள், நிகர உள்நாட்டு முதலீடு, அரசின் கொள்முதல் செலவு, முதலீட்டு பொருள் வாங்கும் செலவு மற்றும் நிகர ஏற்றுமதி போன்ற அனைத்து செலவுகளையும் கூட்டி, தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.

GNP = C + I + G + (X – M)

C – தனியார் நுகர்வுச் செலவு, I – தனியார் முதலீட்டு செலவு, G – அரசின் கொள்முதல் செலவு, X – M = நிகர ஏற்றுமதி

Also Read : Education System in Tamil Nadu | தமிழ்நாட்டில் கல்வி முறை | Unit.9 Study Material for TNPSC Group 2-Part 1

Importance of National Income Analysis | தேசிய வருவாய் பகுத்தாய்வின் முக்கியத்துவம்

Importance of National Income Analysis
Importance of National Income Analysis

தேசிய வருவாய் என்பது, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய வருவாய் பொருளாதாரத்தின் கணக்கு அல்லது சமூகக் கணக்கு எனவும் சொல்லப்படுகிறது.

  • தேசிய வருவாயை கணக்கிடுவதன் மூலம், தேசிய பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளின் முக்கியத்துவம் பற்றியும், தேசிய வருமானத்தில் அத்துறைகளின் பங்களிப்பு பற்றியும் அறிய முடிகின்றது. மேலும் பொருள்கள் மற்றும் பணிகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன, பகிரப்படுகின்றன, செலவு செய்யப்படுகின்றன, சேமிக்கப்படுகின்றன, மற்றும் வரிவிதிக்கப்படுகின்றன போன்றவைகளை அறிய இயலும்.
    தேசிய அளவிலான பணவியல் மற்றும் பொதுநிதிக் கொள்கைகளை உருவாக்கவும், பொருளாதாரம் சரியான பாதையில் செல்ல, கடைபிடிக்க வேண்டிய சரியான வழிமுறைகளைக் கையாளவும் தேசிய வருவாய் ஆய்வு உதவுகிறது.
  • திட்டமிடுதலுக்கும், திட்டங்களின் விளைவுகளை மதிப்பிடுவதற்கும் நாட்டின் மொத்த வருமானம், உற்பத்தி, சேமிப்பு மற்றும் நுகர்வின் அளவு ஆகிய புள்ளி விவரங்களை தேசிய வருவாய் கணக்கீடு அளிக்கின்றது.
  • ஒரு நாட்டின் வெவ்வேறு வட்டாரங்களின் வருமானத்தை ஒப்பிடவும், நாட்டின் வருமானத்தை மற்ற நாடுகளின் வருமானத்தோடு ஒப்பிடவும், தேசிய வருவாய் விவரங்கள் பயன்படுகின்றன.
  • தேசிய வருமானம் மூலம் தலா வருமானம் கணக்கிடப்படுகிறது. தலா வருமானம் ஒரு நாட்டின் பொருளாதார நலனை அறிய பயன்படுகிறது.
  • ஒரு நாட்டில் இருக்கும் பல்வேறு உற்பத்தி காரணிகளின் வருமானப் பகிர்வை தெரிந்து கொள்ள தேசிய வருவாய் பயன்படுகிறது.

Difficulties in the Calculation of National Income | தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்கள்

Difficulties in the Calculation of National Income
Difficulties in the Calculation of National Income

இந்தியா ஒரு ஒழுங்கமைக்கப்படாத, அன்றாட பிழைப்பை நடத்தும் சிறு தொழில்களையும் பண்ட மாற்று அங்காடிகளையும் உள்ளடக்கிய நாடெனும் காரணத்தினால், ஒரு சரியான தேசிய வருமான மதிப்பீடு தருவதில் சிரமங்கள் இருக்கின்றன.

Apply for : TNCSC Recruitment 2021, Apply 435 TNCSC Tiruvarur Vacancies @ www.tncsc.tn.gov.in

Transfer Payments | மாற்றுச் செலுத்துதல்கள்

நாட்டின் கடனுக்காக செலுத்தப்படும் வட்டியை போன்றே, அரசு அளிக்கிற ஓய்வூதியம், வேலையின்மைக்கான உதவித்தொகை, மானியங்கள் போன்ற அரசின் செலவுகள் தேசிய வருவாயில் சேர்க்கப்படுவதில்லை.

Assessing Depreciation Allowance | தேய்மானங்களின் கொடுப்பனவுகளை மதிப்பிடுதல்

தேய்மான கொடுப்பனவு, விபத்து இழப்பீடு மற்றும் பழுது கட்டணங்கள் போன்றவற்றை தேசிய வருவாயிலிருந்து கழிப்பது சுலபமானது அல்ல.

Unpaid Services | பணமிலா சேவைகள்

உணவு தயாரித்தல், தையல், பழுது பார்த்தல், துவைத்தல், சுத்தம் செய்தல், குழந்தைகளை வளர்த்தல் போன்ற வேலைகளையும் எந்தவித வருமானமுமின்றி நட்பு, பாசம், அன்பு, மரியாதை போன்ற, பணத்தால் மதிப்பிட முடியாத காரணங்களுக்காகவும் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அர்ப்பணிப்பு தேசிய உற்பத்தியில் சேர்க்கப்படுவதில்லை.

Income from Illegal Activities | சட்டவிரோத நடவடிக்கையிலிருந்து பெறும் வருமானம்

சூதாட்டம், கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் வருமானம், தேசியவருமானத்தில் சேர்க்கப்படுவது இல்லை.

Production for Self-Consumption | சுய நுகர்வுக்கான உற்பத்தி

சந்தையில் விற்பனை செய்யாமல், விவசாயிகள் தங்களின் சுய நுகர்விற்காக ஒதுக்கிய உற்பத்தி, தேசிய வருமானத்தில் சேர்க்கப்பட்டதா என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.

Capital Gains | மூலதன இலாபம்

மூலதன சொத்துக்களான வீடு மற்றும் பிற சொத்துக்கள், பங்குகள் போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கிற மூலதன இலாபம் தேசிய வருவாய் கணக்கீட்டில் சேர்க்கப்படுவது இல்லை.

Statistical Problems | புள்ளி விவர சிக்கல்

ஒரே புள்ளிவிவரத்தை பல முறை கணக்கில் சேர்ப்பது, நம்பகத்தன்மை, புள்ளி விவரங்கள் கிடைக்காமை, சேகரிப்பவர்களின் திறன் குறைவு, அர்ப்பணிப்பு இன்மை ஆகியவை தேசிய வருவாய் கணக்கிடுதலில் பிரச்சனைகளைத் உண்டாக்கும்.

Read Also : TNEB AE Exam Dates 2021 | TNEB AE தேர்வு தேதிகள் 2021

National Income Conclusion | தேசிய வருவாய் முடிவுரை

தேசிய வருவாய் ஆனது, ஒரு நாட்டின் உற்பத்தி செயல்திறனை விளக்குகிறது. பல்வேறு நோக்கங்களுக்காக தேசிய வருவாய் பற்றிய புள்ளி விவரத்தை, பொருளாதார வல்லுநர்கள், திட்டமிடுபவர்கள், அரசு மற்றும் IMF, உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. நம் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம், பிற நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தோடு ஒப்பிடுகையில், அது அதிகரித்துள்ளதா என்பதை கண்டறிய தேசிய வருவாய் உதவுகிறது.

தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 1  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

*****************************************************

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Read More:

Weekly Current Affairs One-Liners | 18th to 24th of October 2021

Weekly Current Affairs In Tamil 1st Week Of October 2021

Weekly Current Affairs One-Liners | 11th to 17th of October 2021 Weekly Current Affairs in Tamil 2nd Week of October 2021

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் தமிழில் PDF செப்டம்பர் 2021

தமிழ்நாடு மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் தமிழில் PDF செப்டம்பர் 2021

Coupon code- FEST75-75% OFFER

TNPSC GROUP 4, 1, 2, 2A GENERAL TAMIL LIVE CLASS BATCH BY ADDA247 STARTS OCT 14 2021
TNPSC GROUP 4, 1, 2, 2A GENERAL TAMIL LIVE CLASS BATCH BY ADDA247 STARTS OCT 14 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

National Income for TNPSC | தேசிய வருவாய்_12.1