Table of Contents
நிதி ஆயோக்: NITI ஆயோக், இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக 2015 இல் அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலங்களின் தீவிர ஈடுபாட்டுடன், தேசிய வளர்ச்சி உத்திகள், துறைகள் மற்றும் முன்னுரிமைகள் பற்றிய பகிரப்பட்ட பார்வையை உருவாக்குவதை NITI ஆயோக் நோக்கமாகக் கொண்டுள்ளது. NITI ஆயோக் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
நிதி ஆயோக் – மேலோட்டம்
NITI ஆயோக் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நாட்டின் முதன்மையான கொள்கை உருவாக்கும் நிறுவனம் இதுவாகும். ஆற்றல்மிக்க மற்றும் வலிமையான தேசத்தை உருவாக்க உதவும் வலுவான அரசை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிதி ஆயோக் – மேலோட்டம் |
|
நிறுவனம் | NITI ஆயோக் (NITI – National Institution for Transforming India) |
தொடங்கப்பட்ட ஆண்டு | 1 சனவரி 2015 |
தலைவர் | நரேந்திர மோடி |
துணைத் தலைவர் | ஸ்ரீ சுமன் பெரி |
தலைமையகம் | புது டெல்லி |
அதிகாரபூர்வ இணையதளம் | www.niti.gov.in |
நிதி ஆயோக் – வரலாறு
இந்தியசுதந்திரத்திற்கு பிறகு வளர்ச்சி மற்றும் மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்காக 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி மத்திய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டக் குழுவின் முதல் தலைவராக அப்போதைய பிரதமர் நேரு இருந்தார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2015, சனவரி 1 ஆம் தேதி திட்டக் குழுவுக்குப் பதிலாக நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பின் ஆதாரங்கள்
நிதி ஆயோக் – அம்சங்கள்
நிதி ஆயோக் இந்திய அரசாங்கத்திற்கான ஊக்குவிப்பு மற்றும் புதுமையான மூலோபாய கொள்கை பார்வையை செயல்படுத்துவதற்கு தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்குகிறது. இது பின்வரும் அலுவலகத்தின் வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அமைப்பு (DMEO), அடல் இன்னோவேஷன் மிஷன் (AIM) மற்றும் தேசிய தொழிலாளர் பொருளாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NILERD) ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது. NITI ஆயோக்கின் கீழ் உள்ள செயல்பாடுகளை நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம்-
- கொள்கை மற்றும் நிரல் கட்டமைப்பு
- கூட்டுறவு கூட்டாட்சி
- கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு
- திங்க் டேங்க் மற்றும் அறிவு மற்றும் புத்தாக்க மையம்.
NITI ஆயோக்கின் நோக்கங்கள்
- முன்னுரிமை திட்டங்களை அடையாளம் காண்பதில் மாநில அரசுகளையும் மத்திய அரசு இணைத்துக் கொள்வதன் மூலம் திட்டமிடல் செயல்முறையின் மாநிலங்களின் இணைக்கப்படுகின்றன.
- திட்டமிடல் செயல் முறையில் மாநிலங்களின் பங்களிக்க உள்ளதால் இது கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பாக செயல்படும்.
- கிராமங்கள் அளவிலான நம்பகமானத் திட்டங்களை உருவாக்கி அவை வளர்ச்சியோடு ஒருங்கிணைக்கப்படும்.
- பொருளாதார செயல்திட்டத்துடன் தேசப்பாதுகாப்பு இணைக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
- சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முறைகேடுகளை தடுப்பதற்கு தேவையான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
- பொருளாதார வளர்ச்சியின் அனைத்து பிரிவு மக்களும் பயனடைகிறார்களா என்பது கண்காணிக்கப்படும்.
- தொலைநோக்கு கொள்கைகளும் திட்டங்களும் உருவாக்கப்பட்டு அவற்றின் வளர்ச்சியை நிதி ஆயோக் கண்காணிக்கும்.
- படைப்பாற்றல் கொண்ட வளர்ச்சிகள் உருவாக்கப்படும்.
- பயனாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வி மற்றும் கொள்கையாட்சி நிறுவனங்கள் போன்ற பங்காளர்களின் பங்கேற்பு ஊக்கப்படுத்தப்படும். தேசிய, சர்வதேச வல்லுநர்களைக் கொண்ட சமுதாயத்தின் மூலமாக அறிவும் ஊக்கமும், தொழில் முனைப்பும் கொண்ட ஆதரவு அமைப்பு உருவாக்கப்படும்.
திட்ட ஆணையத்திருக்கு பதிலாக நிதி ஆயோக் கொண்டு வரப்பட்டதன் காரணங்கள்
- ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கி அதன் பொருளாதார இலக்குகளை எட்டும் வகையில் ஆதாரங்களை திட்ட ஒதுக்கீடு செய்ததற்கு மாறாக, மாறும் இந்தியாவுக்கான தேசிய நிறுவனம் என்ற புதிய அமைப்பு ஒரு சிந்தனைக் குழுவாகச் செயல்படும்.
- நிதி ஆயோக் அமைப்பு இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 9 ஒன்றிய பகுதிகளில் தலைவர்களை உள்ளடக்கியது. அதன் முழு நேர நிர்வாகிகளான துணைத் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிபுணர்கள் நிதி ஆயோக் தலைவர் பிரதமருக்கு நேரடியாக பதில் சொல்வர். இது திட்ட ஆணைய நடைமுறைக்கு மாறுபாடானதாகும்.
- திட்டமிடல் தொடர்பான முக்கிய வேறுபாடு என்னவென்றால் நிதி ஆயோக் திட்டமிடலில் பெரும் ஆர்வம் காட்டுமாறு மாநில அரசுகளுக்கு வாய்ப்புகள் அளிக்கும். மாறாக, திட்ட ஆணையத்தின் அணுகுமுறையோ அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவினைக் கொண்டதாக இருக்கும்.
- திட்ட ஆணைய பங்களிப்பு என்பது விரிந்த திட்டங்களை உருவாக்குவது என்றாலும் அதன் தகுதி ஆலோசனை வழங்குதல் என்ற அளவிலேயே இருந்தது. நிதி ஆயோக் மாநிலங்களின் தேவைக்கேற்ப ஆதாரங்களை ஒதுக்கீடு செய்யும் அதிகாரங்களைக் கொண்டு இருக்கிறது.
- திட்டமிடல் கொள்கை வகிப்பதில் மாநில அரசுகளுக்கு அறிய வாய்ப்புகள் அளிப்பதில்லை. இதுவே திட்ட ஆணையத்தின் அணுகுமுறையாக இருந்தது. மாநிலங்கள் நேரடியாக இல்லாமல் தங்கள் தேசிய வளர்ச்சி குழுவின் மூலம் மட்டுமே தங்கள் கருத்துக்களை கூற முடியும். நிதி ஆயோக்கில் இது தொடராது.
பாராளுமன்றத்தில் சட்டமியற்றும் நடைமுறைகள்
நிதி ஆயோக் – திட்ட ஆணையம் வேறுபாடுகள்
நிதி ஆயோக் – திட்ட ஆணையம் வேறுபாடுகள் |
||
நிதி ஆயோக் | திட்ட ஆணையம் | |
தலைவர் | பிரதமர் | பிரதமர் |
துணைத் தலைவர் | பிரதமரால் நியமிக்கப்படுகிறார் | துணைத் தலைவர், கேபினட் அமைச்சர் தகுதி கொண்ட ஒருவர் நியமிக்கப்படுவார். |
ஆளுநர் குழு | முதலமைச்சர்களும் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் | தேசிய வளர்ச்சிக் குழு |
உறுப்பினர் செயலர் | பிரதமரால் நியமிக்கப்படும் இவர்தலைமை நிர்வாக அதிகாரி என்று அழைக்கப்படுகிறார். | செயலர்கள் அல்லது உறுப்பினர் செயலர்கள் வழக்கமான செயல் முறைகளின் கீழ் நியமிக்கப்படுகிறார்கள். |
பகுதிநேர உறுப்பினர்கள் | தேவையைப் பொறுத்து அவ்வப்போது பகுதி நேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் | திட்ட ஆணையத்தில் பகுதிநேர உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான பகுதி வழங்கப்படவில்லை. |
முழு நேர உறுப்பினர்கள் | திட்ட ஆணையத்தை விட குறைவான எண்ணிக்கையில் முழுநேர உறுப்பினர்கள் எண்ணிக்கையில் இருக்கும். | கடைசி திட்ட ஆணையத்தில் எட்டு முழு நேர உறுப்பினர்கள் இருந்தனர். |
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை
பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Home page | Adda 247 Tamil |
Latest Notification | TNPSC Recruitment 2023 |
Official Website | Adda247 |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil