Tamil govt jobs   »   Study Materials   »   Respiratory System for TNPSC

சுவாசத் தொகுதி | Respiratory System for TNPSC

சுவாசத் தொகுதி அல்லது மூச்சுத் தொகுதி என்பது உடற் செயற்பாடுகளுக்குத் தேவையான வளிமங்களை உள்ளிழுத்து, வளிமப் பரிமாற்றத்திற்கு உதவி, தேவையற்ற வளிமத்தை (கார்பன் டைஆக்சைட்டை) வெளியேற்றும் பணியைச் செய்யும் ஒரு உடற்கூற்றியல் தொகுதியாகும். சுவாசத் தொகுதி, தனிக்கல உயிரினங்களில் காணப்படுவதில்லை, ஏனெனில் அவற்றில் நேரடி பரவல் மூலம் வாயுக்கள் பரிமாற்றப்படுகின்றன. சிறிய பல்கல உயிரினங்களின் மேற்பரப்பு கனவளவு வீதம் அதிகமாக இருப்பதால், அவற்றிலும் Respiratory System காணப்படாமல், வாயுக்கள் உடற்கலங்களுடன் நேரடியாகப் பரிமாற்றப்படுகின்றன.

 

TNPSC GROUP 4 FREE TEST BY ADDA247 REGISTER NOW!!

 

Respiratory System : An Overview (ஒரு கண்ணோட்டம்)

சுவாசத் தொகுதி | Respiratory System for TNPSC_3.1
Respiratory System : An Overview
  • மனித உடலானது, ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு, இடைவினையாற்றும் பல உடல் தொகுதிகளைக் கொண்டுள்ளது. வெவ்வேறு உடல் தொகுதிகள், வேறுபட்ட உடற்கூற்று அமைப்புக்களைக் கொண்டிருந்தாலும், உடலியங்கியல் ரீதியில் மிகவும் நெருங்கிய தொடர்பை கொண்டு, ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன. இருப்பினும், ஒவ்வொரு தொகுதியும் தனக்கான தனிப்பட்ட செயல்களையும், நோக்கங்களையும் கொண்டு செயல்படுவதற்கேற்ற உறுப்புக்களைக் கொண்டுள்ளன.
  • சுவாசத் தொகுதி அல்லது மூச்சுத் தொகுதி என்பது மூக்கு, மேல் தொண்டை (நாசித் தொண்டை), மூச்சுக்குழாய், கிளை மூச்சுக்குழாய்கள், நுரையீரல் என்னும் சுவாசப் பாதையைக் கொண்டதாக இருக்கும். நுரையீரலில் இருக்கும் காற்று நுண்ணறைகளுக்கும், அங்கே இருக்கும் குருதி மயிர்க்குழாய்களுக்கும் இடையில் வளிமப் பரிமாற்றம் நிகழும்.
  • குறிப்பிட்ட சுவாசப் பாதை வாயிலாக, உள்மூச்சின்போது உடலினுள் செல்லும் காற்று அதிகளவு ஆக்சிசனைக் கொண்டதாக இருக்கும். இதயத்திலிருந்து நுரையீரலுக்கு எடுத்து வரப்படும் குருதியில் கார்பன் டைஆக்சைட் அதிகளவில் இருக்கும். இதனால் பரவல் மூலம் ஆக்சிசன், கார்பன் டைஆக்சைட் ஆகிய இவ்விரண்டு கூறுகளும் பரிமாறிக் கொள்ளப்படும்.
  • பின்னர் ஆக்சிசன் அதிகளவிலுள்ள குருதியானது நுரையீரலில் இருந்து இதயத்துக்கு எடுத்துச் செல்லப்பட, கார்பன் டைஆக்சைட் கூடிய வளியானது வெளிமூச்சின்போது, உடலிலிருந்து வெளிச் சூழலுக்கு வெளியேற்றப்படும்.

 

READ MORE: Petroleum and its Products

 

Respiratory System : Flowers (தாவரங்கள்)

சுவாசத் தொகுதி | Respiratory System for TNPSC_4.1
Respiratory System : Flowers
  • தாவரங்களின் இலைகளில் உள்ள இலைவாய், பிரதான வாயுப்பரிமாற்ற உறுப்பாக செயல்படுகிறது. இது சுவாசத்துக்கும், ஒளித்தொகுப்புக்கும் பொதுவான உறுப்பாகும்.
  • தாவரங்களில் பகலில், சுவாச வீதத்தை விட ஒளித்தொகுப்பு வீதம் அதிகமென்பதால், பகலில் பொதுவாக ஆக்சிசன் வாயுவே வெளியிடப்படுகின்றது. ராத்திரி வேளைகளில், ஒளித்தொகுப்பு நடைபெறாததால் கார்பன் டைஆக்சைட் வாயுவே இலைவாய் மூலமாக வெளியேறுகின்றது.
  • உடற்பருமன் கூடிய தாவரங்களின் உட்பகுதியிலுள்ள இழையங்களுக்கு ஆக்சிசன் செல்ல முடியாது. தண்டிலுள்ள தடித்த பட்டை வாயுக்களையோ, நீரையோ அனுமதிப்பதில்லை. எனவே இவ்விழையங்கள் இறப்பதைத் தடுப்பதற்காக பருமன் கூடிய தண்டிலும், வேர்களிலும் பட்டைவாய்கள் உள்ளன. இதன் மூலமாக, வாயுப்பரிமாற்றம் நிகழும்.
  • சதுப்பு நிலங்களின் மண்ணில் ஆக்சிசன் செறிவு மிகவும் குறைவாக இருப்பதால், கண்டல் தாவரங்களில் வேரிழையங்களுக்கு ஆக்சிசன் வழங்குவதற்காக மூச்சு வேர்கள் கூர்ப்படைந்துள்ளன.

 

Respiratory System : Animals (விலங்குகள்)

சுவாசத் தொகுதி | Respiratory System for TNPSC_5.1
Respiratory System : Animals

Invertebrates

  • முதுகெலும்பிலா விலங்கினங்களான மண்புழு போன்ற வளையப் புழுக்களில் (அனெலிடா) வாயுப்பரிமாற்றம் ஈரலிப்பான தோலினூடாக நடைபெறுகின்றது. எனவே இவற்றில் தோலைத் தவிர வேறு மூச்சுத் தொகுதி உறுப்புகள் இருப்பதில்லை.
  • பூச்சிகளில் வாதனாளித் தொகுதி மூலம் உடற்கலங்களுக்கும், வளிக்குமிடையே நேரடித்தொடர்பு ஏற்படுத்துவதனால், மூச்சுத்தொகுதி கலச்சுவாசத்துக்கு உதவுகின்றது. நீர்வாழ் முதுகெலும்பிலா விலங்கினங்களில் பூக்கள் மூலம் வாயுப்பரிமாற்றம் நிகழும்.
  • சில முதுகெலும்பிலா விலங்கினங்களின் சுவாசக் கட்டமைப்புகள்:
  1. பூச்சிகள், ஆயிரங்காலிகள், நூற்றுக்காலிகள் – வாதனாளித் தொகுதி
  2. சிலந்தி, தேள் – ஏட்டு நுரையீரல்
  3. பொலிகீட்டுக்கள் – வெளிப் பூக்கள்
  4. கடலட்டை – கழியறைக்குரிய சுவாச மரம்
  5. கிரஸ்டேசியா, மொலஸ்கா – பூக்கள்

Vertebrates

  • முதுகெலும்புயிரிகளில் மூச்சுத்தொகுதியும், குருதிச்சுற்றோட்டத் தொகுதியும் உடற்கூற்றியல் ரீதியாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. அனைத்து முதுகெலும்புயிரிகளிலும் குருதியே மூச்சுத்தொகுதியிலிருந்து உடற்கலங்களுக்கு ஆக்சிசனையும், உடற்கலங்களிலிருந்து மூச்சுத்தொகுதிக்கு கார்பன் டைஆக்சைட்டையும் காவுகின்றது. இதற்காக முதுகெலும்புயிரிகளின் குருதியில் ஆக்சிசனைக் காவுவதற்கென, இயைபாக்கமடைந்த செங்குருதிக் கலங்களையும், அக்கலங்களில் ஈமோகுளோபிளின் எனப்படும் புரதத்தையும் கொண்டுள்ளன.
  • மீன்களில் பொதுவாக பூக்கள் காணப்படுவதுடன், ஏனையவற்றில் நுரையீரல் காணப்படுகின்றது.
  • ஊர்வனவற்றிலும், பாலூட்டிகளிலும், பறவைகளிலும் நுரையீரல் மாத்திரமே மூச்சுத்தொகுதியின் பிரதான உறுப்பாகக் காணப்படுகின்றது.

Mammals

  • பாலூட்டிகளில் நுரையீரல் மூலம் வாயுப் பரிமாற்றம் நிகழும். பாலூட்டிகளின் நுரையீரல், ஊர்வனங்களின் நுரையீரலை விட, வினைத்திறன் கூடியதாகும்.
  • மனிதன் உட்பட, அனைத்து பாலூட்டிகளின் மூச்சுத்தொகுதியில், பிரதானமாக இரு நுரையீரல்கள் காணப்படுவதுடன், அவற்றுக்கு வளியை உட்செலுத்தும் பல மூச்சுக் குழாய்களும் காணப்படுகின்றன.
  • பாலூட்டிகளின் மூச்சுத்தொகுதியின் பிரதான பாகங்கள்:
  1. மூக்கு
  2. தொண்டை
  3. குரல் வளை
  4. வாதனாளி
  5. சுவாசப்பைக் குழாய்கள்
  6. சுவாசப்பைச் சிறுகுழாய்கள்
  7. நுரையீரல்கள்
  8. சுவாசத் தசைகள்

 

READ MORE: The Solar System

 

Respiratory System : Parts (பாகங்கள்)

மூக்குக்குழி / Nosal Cavity

சுவாசத் தொகுதி | Respiratory System for TNPSC_6.1
Respiratory System : Parts – Nosal Cavity

வளிமண்டலத்தில் உள்ள காற்றானது, மூக்குத் துவாரத்தின் மூலம் சுவாசப்பைகளை சென்று அடைகிறது. மூக்குக் குளியினுள் காணப்படும் மயிர்கள் மூலம், நாம் உள்ளெடுக்கின்ற காற்றானது வடிக்கப்படுகிறது, இதனால் காற்றில் உள்ள தூசு, துணிக்கைகள் அகற்றப்படுகின்றன. அத்தோடு மூக்குக் குழியினுள் சுரக்கப்படுகின்ற சளியப்பதார்த்தம் மூலம் வடிக்கப்பட்ட தூசு, துணிக்கைகள் திரட்சியாக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன.

தொண்டை / Pharynx

சுவாசத் தொகுதி | Respiratory System for TNPSC_7.1
Respiratory System : Parts – Pharynx

வாய்க் குழியையும், மூக்குக் குழியையும் இணைக்கின்ற ஒரு முக்கிய பாகமாக தொண்டை காணப்படுகிறது. தொண்டையின் மூலம், நாம் உள்ளெடுக்கின்ற உணவு, களத்துக்குள்ளும், நாம் சுவாசிக்கின்ற காற்று, வாதனாளிக்குள்ளும் செலுத்தப்படுகின்றன.

மூக்குக்குப் பின்னால் உள்ள தொண்டை, மூக்கு தொண்டை (Nasopharynx) எனவும், வாய்க்குப் பின்னால் உள்ள தொண்டை, வாய்த் தொண்டை (Oropharynx) எனவும், குரல்வளைக்கு மேல் உள்ள தொண்டை, குரல்வளைத் தொண்டை (Laryngopharynx) / கீழ்த் தொண்டை (Hypopharynx) எனவும் அழைக்கப்படும். தொண்டையில் சுரக்கப்படும் சளியப்பதார்த்தம் மூலமும் தூசு, துணிக்கைகள் மற்றும் நுண்ணங்கிகள் அகற்றப்படும்.

குரல்வளை / Larynx

Respiratory System : Parts - Larynx
Respiratory System : Parts – Larynx

தொண்டையின் மூலம் வரும் காற்றை, வாதனாளியை (Trachea) நோக்கி திசைப்படுத்தும் பாகமாக குரல்வளை காணப்படுகிறது. குரல்வளையின் மேலாகக் காணப்படும் மூச்சுக் குழல் வாய் மூடி (Epiglottis) எனப்படும் கட்டமைப்பின் மூலமாக, தொண்டையின் மூலம் வரும் உணவுப் பொருட்கள், வாதனாளிக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. அத்தோடு குரல்வளையினுள் காணப்படும் குரல் நாண்கள் (Vocal Cords) எனும் இழைகள் போன்ற கட்டமைப்பு மூலமே நாம் பேசத்தேவையான ஒலி உருவாக்கப்படுகிறது.

வாதனாளி / Trachea

சுவாசத் தொகுதி | Respiratory System for TNPSC_9.1
Respiratory System : Parts – Trachea

குரல்வளையைத் தாண்டி வருகின்ற காற்றானது, நுரையீரல்களுக்கு வாதனாளியின் மூலமே பயணிக்கிறது. காற்று செல்வதற்க்கு ஏற்றது போல விரிந்து கொடுக்கக் கூடியதாகவும், எப்பொழுதும் திறந்த நிலையிலும் காணப்படும் இக்குழாய்க் கட்டமைப்பினுள், பிசிர்கள் எனும் கட்டமைப்புகளும், சளியப்பதார்த்தமும் காணப்படுகின்றன. இவை வாதனாளியையும் தாண்டி வருகின்ற தூசு துணிக்கைகள் மற்றும் நுண்ணங்கிகளை இருமல், தும்மல் போன்ற செயற்பாடுகள் மூலம் வெளியேற்றுகின்றன.

சுவாசப்பைக் குழாய்கள் / Bronchioles

சுவாசத் தொகுதி | Respiratory System for TNPSC_10.1
Respiratory System : Parts – Bronchioles

வாதனாளியானது இரண்டாகப் பிரிந்து வலது மற்றும் இடது சுவாசப்பைக் குழாய்களாக, இரண்டு நுரையீரல்களுக்கும் செல்கின்றன. இவற்றினுள்ளும் பிசிர்கள் மற்றும் சளியத்தை சுரக்கும் கட்டமைப்புகள் காணப்படுகின்றன.

நுரையீர்ல்களுக்குள் நுழைந்த பிறகும், இக்குழாய்கள் மேலும் பல சிறிய சுவாசப்பைக் குழாய்களாக பிரிகின்றன. இறுதியில் முனைக்குரிய சுவாசப்பைக் குழாய்களாகவும் (Terminal Bronchioles), சுவாசத்துக்குரிய சுவாசப்பைக் குழாய்களாகவும் (Respiratory Bronchioles) மாறி, சிற்றறைகள் (Alveoli) எனப்படும் மிகச்சிறிய அறைகளுக்குள் திறக்கின்றன.

நுரைஈரல் / Lung

சுவாசத் தொகுதி | Respiratory System for TNPSC_11.1
Respiratory System : Parts – Lung

வலது, இடது என மனிதனில் இரண்டு நுரையீரல்கள் காணப்படுகின்றன. சுவாசப்பைக் குழாய்களையும், அவற்றின் இறுதி முடிவிடமான சிற்றறைகளையும் இவை கொண்டுள்ளன. அத்தோடு சிற்றறைகளைச் சுற்றிவர மிகச்சிறிய குருத்திக்குழாய்கள் காணப்படுகின்றன.

சுவாசப்பைகுழாய்கள் மூலமாக சிற்றறைகளுக்குள் கொண்டு வரப்படுகின்ற காற்றிலிருந்து ஆக்ஸிஜன் வாயுவானது, குருதிக் குழாய்களுக்குள் பரவுகிறது. பின்னர் குருதியின் மூலம் உடலின் தேவயான பாகங்களுக்கு ஆக்ஸிஜன் வாயு கொண்டு செல்லப்படும்.

அத்தோடு குருதிக்குள் உடலின் பல பாகங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட கார்பன் டைஆக்சைட் வாயுவானது, சிற்றறைகளுக்குள் பரவி வளிமண்டலத்துக்கு வெளிவிடப்படுகின்றது.

 

READ MORE: Rivers in Tamil Nadu

 

Respiratory System : Inhalation (உட்சுவாசம்)

சுவாசத் தொகுதி | Respiratory System for TNPSC_12.1
Respiratory System : Inhalation and Exhalation
  • இது உயிர்ப்பான செயற்பாடாகும். வெளிப்பழுவிடைத் தசைகள் சுருங்கி, உட்பழுவிடைத் தசைகள் தளரும். விலா எலும்பும், மார்புப்பட்டையும் வெளிநோக்கி அசையும். பிரிமென்றகடு(Diaphragm) சுருங்கித் தட்டையாகும். இதனால் நெஞ்சறைக் குழியின் கனவளவு அதிகரித்து நுரைஈரலுக்கு உள்ளே வளியமுக்கம் வேகமாகக் குறைவடையும். இதை ஈடு செய்வதற்கு, வெளியிலிருந்து காற்று உள்வருகின்றது.
  • பொதுவாக உட்சுவாசம் இரண்டு நொடிகள் நீடிக்கும். சாதாரணமான இச்சையின்றிய, சந்தமான உட்சுவாசத்தில் வெளிப் பழுவிடைத் தசைகளும் (external intercostal muscles), பிரிமென்றகடும் மாத்திரமே பங்கெடுக்கின்றன.
  • வலிந்த உட்சுவாசத்தின் போது, மேற்கூறிய தசைகள் அதிகமாக சுருங்குவதுடன், இவற்றுக்கு உதவியாக மார்பு மற்றும் கழுத்திலுள்ள தசைகளும் சுருங்கும். இதனால் அதிக காற்று உள்ளெடுக்கப்படும்.

Respiratory System : Exhalation (வெளிச்சுவாசம்)

  • இது உயிர்ப்பற்ற செயற்பாடாகும். வெளிப்பழுவிடைத் தசையும், பிரிமென்றகடும் தளருவதால் விலா எலும்புகளும், மார்புப் பட்டையும் உள்நோக்கி அசையும். பிரிமென்றகடு மேல்நோக்கி அசையும். இதனால் நெஞ்சறைக் குழியின் கனவளவு குறைந்து அமுக்கம் அதிகரிக்கும். இதனால் கார்பன் டைஆக்சைட் நிறைந்த காற்று வெளிநோக்கித் தள்ளப்படும்.
  • வலிந்த வெளிச்சுவாசம் உயிர்ப்பான செயற்பாடாகும். இதன் போது உட் பழுவிடைத் தசைகளும், வயிற்றுப்புறத் தசைகளும் சுருக்கமடைவதால் அதிகளவு காற்று வெளியேற்றப்படும்.

 

Respiratory System : Disorders (நோய்கள்)

Respiratory System : Disorders
Respiratory System : Disorders
  • ஆஸ்துமா (Asthma)
  • நாட்பட்ட மார்புச்சளி நோய் (Chronic Bronchitis)
  • நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Diseases (COPD))
  • திசுக்களில் காற்று பரவிய நிலை (Emphysema)
  • நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer)
  • நிமோனியா (Pneumonia)
  • நுரையீரலில் திரவம் இருக்கும் ஒரு நிலை (Pleural Effusion)

 

Respiratory System : Conclusion (முடிவுரை)

சுவாசத் தொகுதி பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொண்டோம். தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 1  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.

 

 

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: HAPPY(75% OFFER)

TNPSC GROUP 2 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON sep 6 2021
TNPSC GROUP 2 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON sep 6 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

சுவாசத் தொகுதி | Respiratory System for TNPSC_15.1