Table of Contents
Sahitya Akademi Award: If you are a candidate preparing for TNPSC Exams and looking for TNPSC Study Materials, you will get all the information regarding the topic Sahitya Akademi Award, Sahitya Akademi Award Selection Committee Members, List of Sahitya Akademi Award Winners, Sahitya Akademi Award Selection Procedures, etc. on this page.
Sahitya Akademi Award: சாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. Sahitya Akademi Award பற்றி இங்கு விரிவாக காணலாம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
Sahitya Akademi Award Overview
சாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954-இல் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பு.அது இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு தொடங்கப்பட்டது. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது.
இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளைச் செய்வது சாகித்ய அகாதமி.
Sahitya Akademi Award Committee Members
சாகித்ய அகாதமி கழகத்தில் அனைத்து மொழிகளுக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. தமிழுக்கான இடத்தில் உறுப்பினராக இருந்தோர்:
- நெ. து. சுந்தரவடிவேலு
- நாவலர் நெடுஞ்செழியன் (அப்போதைய சென்னை மாநிலக் கல்வி அமைச்சர்)
TNPSC Group 1 Notification 2022 | TNPSC குரூப் 1 அறிவிப்பு 2022
Sahitya Akademi Award Prize Money
சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூலினை எழுதிய நூலாசிரியருக்கு முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் ரூபாய் 5,000 வழங்கப்பட்டது. பின்னர் 1983-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அதன் பிறகு 1988-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2001-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 40,000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 2003-ஆம் ஆண்டில் ரூபாய் 50,000 ஆக அதிகரிக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 1,00,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது.
Madras High Court Recruitment 2022 Apply for 1412 Post
Sahitya Akademi Award Selection Procedure
இது, நீண்ட, ஒராண்டு கால விவாதம் மற்றும் தேர்வுகளைக் கொண்டது. இந்த விருது இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஓர் ஊடகமாகத் திகழ்கிறது. அதுமட்டுமன்றித் தற்கால மாறுதல்களையும், புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும்.
முதற்கட்டமாகத் தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஓரிரண்டு வல்லுநர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுநர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுநரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்குத் தேர்வுக்குச் செய்யப்படுகிறது. பின்னர் அகாதமியின் செயற்குழு அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படுகிறது. தமிழ் மொழியில் சாகித்ய அகாதமி விருது என்பது சர்ச்சைக்கு உரிய விருதாக ஜெயமோகன் கருதுகிறார்.
List of Sahitya Akademi Award winners for Tamil
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்களின் பட்டியல்:
வருடம் | படைப்பு | ஆசிரியர் | குறிப்பு |
2021 | சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை | அம்பை | சிறுகதைத் தொகுப்பு |
2020 | செல்லாத பணம் | இமையம் | புதினம் |
2019 | சூல் | சோ. தர்மன் | புதினம் |
2018 | சஞ்சாரம் | எஸ். ராமகிருஷ்ணன் | புதினம் |
2017 | காந்தள் நாட்கள் | இன்குலாப் | கவிதை நூல் |
2016 | ஒரு சிறு இசை | வண்ணதாசன் | சிறுகதைத் தொகுப்பு |
2015 | இலக்கியச் சுவடுகள் | ஆ. மாதவன் | கட்டுரைத் தொகுப்பு |
2014 | அஞ்ஞாடி | பூமணி | புதினம் |
2013 | கொற்கை | ஜோ டி குரூஸ் | புதினம் |
2012 | தோல் | டேனியல் செல்வராஜ் | புதினம் |
2011 | காவல் கோட்டம் | சு. வெங்கடேசன் | புதினம் |
2010 | சூடிய பூ சூடற்க | நாஞ்சில் நாடன் | சிறுகதைத் தொகுப்பு |
2009 | கையொப்பம் | புவியரசு | கவிதை நூல் |
2008 | மின்சாரப் பூ | மேலாண்மை பொன்னுசாமி | சிறுகதைத் தொகுப்பு |
2007 | இலை உதிர் காலம் | நீல பத்மநாபன் | புதினம் |
2006 | ஆகாயத்துக்கு அடுத்த வீடு | மு. மேத்தா | கவிதை நூல் |
2005 | கல்மரம் | கோ. திலகவதி | புதினம் |
2004 | வணக்கம் வள்ளுவ! | தமிழன்பன் | கவிதை நூல் |
2003 | கள்ளிக்காட்டு இதிகாசம் | இரா. வைரமுத்து | புதினம் |
2002 | ஒரு கிராமத்து நதி | சிற்பி பாலசுப்ரமணியம் | கவிதை நூல் |
2001 | சுதந்திர தாகம் | சி. சு. செல்லப்பா | புதினம் |
2000 | விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் | தி. க. சிவசங்கரன் | விமர்சனம் |
1999 | ஆலாபனை | அப்துல் ரகுமான் | வசன கவிதைகளின் தொகுப்பு |
1998 | விசாரணைக் கமிஷன் | சா. கந்தசாமி | புதினம் |
1997 | சாய்வு நாற்காலி | தோப்பில் முகமது மீரான் | புதினம் |
1996 | அப்பாவின் சினேகிதர் | அசோகமித்திரன் | சிறுகதைத் தொகுப்பு |
1995 | வானம் வசப்படும் | பிரபஞ்சன் | புதினம் |
1994 | புதிய தரிசனங்கள் | பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்) | புதினம் |
1993 | காதுகள் | எம். வி. வெங்கட்ராம் | புதினம் |
1992 | குற்றாலக் குறிஞ்சி | கோவி. மணிசேகரன் | வரலாற்றுப் புதினம் |
1991 | கோபல்லபுரத்து மக்கள் | கி. ராஜநாராயணன் | புதினம் |
1990 | வேரில் பழுத்த பலா | சு. சமுத்திரம் | புதினம் |
1989 | சிந்தாநதி | லா. ச. ராமாமிர்தம் | தன்வரலாற்றுக் கட்டுரை |
1988 | வாழும் வள்ளுவம் | வா. செ. குழந்தைசாமி | இலக்கியத் திறனாய்வு |
1987 | முதலில் இரவு வரும் | ஆதவன் சுந்தரம் | சிறுகதைத் தொகுப்பு |
1986 | இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் | க. நா. சுப்ரமண்யம் | இலக்கியத் திறனாய்வு |
1985 | கம்பன்: புதிய பார்வை | அ. ச. ஞானசம்பந்தன் | இலக்கியத் திறனாய்வு |
1984 | ஒரு காவிரியைப் போல | லட்சுமி (திரிபுரசுந்தரி) | புதினம் |
1983 | பாரதி: காலமும் கருத்தும் | தொ. மு. சி. ரகுநாதன் | இலக்கியத் திறனாய்வு |
1982 | மணிக்கொடி காலம் | பி. எஸ். ராமையா | இலக்கிய வரலாறு |
1981 | புதிய உரைநடை | மா. ராமலிங்கம் | இலக்கியத் திறனாய்வு |
1980 | சேரமான் காதலி | கண்ணதாசன் | புதினம் |
1979 | சக்தி வைத்தியம் | தி. ஜானகிராமன் | சிறுகதைத் தொகுப்பு |
1978 | புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் | வல்லிக்கண்ணன் | இலக்கியத் திறனாய்வு |
1977 | குருதிப்புனல் | இந்திரா பார்த்தசாரதி | புதினம் |
1976 | விருது வழங்கப்படவில்லை. | ||
1975 | தற்காலத் தமிழ் இலக்கியம் | இரா. தண்டாயுதம் | இலக்கியத் திறனாய்வு |
1974 | திருக்குறள் நீதி இலக்கியம் | க. த. திருநாவுக்கரசு | இலக்கியத் திறனாய்வு |
1973 | வேருக்கு நீர் | ராஜம் கிருஷ்ணன் | புதினம் |
1972 | சில நேரங்களில் சில மனிதர்கள் | ஜெயகாந்தன் | புதினம் |
1971 | சமுதாய வீதி | நா. பார்த்தசாரதி | புதினம் |
1970 | அன்பளிப்பு | கு. அழகிரிசாமி | சிறுகதைத் தொகுப்பு |
1969 | பிசிராந்தையார் | பாரதிதாசன் | நாடகம் |
1968 | வெள்ளைப் பறவை | அ. சீனிவாச ராகவன் | கவிதை நூல் |
1967 | வீரர் உலகம் | கி. வா. ஜகந்நாதன் | இலக்கியத் திறனாய்வு |
1966 | வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு | ம. பொ. சிவஞானம் | வாழ்க்கை வரலாற்று நூல் |
1965 | ஸ்ரீ ராமானுஜர் | பி. ஸ்ரீ. ஆச்சார்யா | வாழ்க்கை வரலாற்று நூல் |
1964 | விருது வழங்கப்படவில்லை. | ||
1963 | வேங்கையின் மைந்தன் | அகிலன் (பி. வி. அகிலாண்டம்) | புதினம் |
1962 | அக்கரைச் சீமையில் | சோமு (மீ. ப. சோமசுந்தரம்) | பயண நூல் |
1961 | அகல் விளக்கு | மு. வரதராசன் | புதினம் |
1960 | விருது வழங்கப்படவில்லை. | ||
1959 | விருது வழங்கப்படவில்லை. | ||
1958 | சக்கரவர்த்தித் திருமகன் | சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி | இராமாயணம் – உரைநடை |
1957 | விருது வழங்கப்படவில்லை. | ||
1956 | அலை ஓசை | கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி) | புதினம் |
1955 | தமிழ் இன்பம் | ரா. பி. சேதுப்பிள்ளை | கட்டுரைத் தொகுப்பு |
Sahithya Akademi Award Conclusion
2021 – 1955 வரை சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள், மற்றும் நூலின் வகைகள் ஆகியவற்றை பற்றி குறிப்பிட்டுள்ளோம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 4, GROUP 2 & 2A, GROUP 1 க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.
*****************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Use Code: MN15(15% off on all)
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil