Table of Contents
Sangam Age in Tamil Nadu
Sangam Age in Tamil Nadu (தமிழ்நாட்டில் சங்க காலம்)
சங்க காலத்திற்கான அடித்தளம் இரும்பு காலத்திலிருந்து நாம் காணலாம். சங்க காலத்தில் மக்கள் குழுக்களாக வாழ்ந்தனர். அவர்களுள் ஒருவர் தலைவராக இருந்து குழுவை வழி நடத்தினார். இதுவே வேந்தர்கள் என்ற சொல் தோன்ற தோன்றுவதற்கு வழிவகுத்தது. மௌரிய பேரரசர் அசோகர் ஒடிசா, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளை கைப்பற்றினார். அசோகரின் கல்வெட்டுகள் இந்த பகுதிகளில் காணப்படுகிறது. ஆனால் கேரளா மற்றும் தமிழ் நாட்டில் இவை காணப்படவில்லை. இதன் மூலம் தமிழ்நாட்டின் வேந்தர்கள் சுதந்திரமாக ஆட்சி செய்தனர் என்பதை நாம் அறியலாம்.
Muvendars-மூவேந்தர்கள் (சேர, சோழ, பாண்டியர்கள்):
சங்க கால ஆட்சியர்களில் சேர, சோழ, பாண்டியர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களின் ஆளுகைக்கு உட்பட்டு நகரங்கள் மற்றும் துறைமுகங்கள் இருந்தன.
Cheras (சேரர்கள்):
சேரர்கள் கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு பகுதியை ஆண்டு வந்தனர். அவர்கள் கேரளபுத்திரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என அசோகரின் கல்வெட்டு குறிப்பிடுகிறது .
தலைநகர்- வஞ்சி
துறைமுகங்கள் – முசுரி மற்றும் தொண்டி
மாலை – பனம்பூ
சின்னம் / கொடி – வில் அம்பு
ஆதாரங்கள் – சேர அரசின் எல்லைகள் பதிற்றுப்பற்றில் கூறப்பட்டுள்ளது. கரூருக்கு அருகில் கிடைத்த நாணயங்கள், கல்வெட்டுகள் சேர மன்னர்களின் 3 தலைமுறை பற்றி கூறுகிறது.
புகழ் பெற்ற மன்னர்கள்- இமயம் வரை சென்று பத்தினி தெய்வம் கண்ணகிக்கு கோவில் கட்ட கற்கள் எடுத்து வந்த சேரன் செங்குட்டுவன், சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் செங்குட்டுவனின் தமையன் ஆவர்.
Cholas (சோழர்):
தமிழ்நாட்டின் வட பகுதிகளும், காவிரி வடிநிலங்களும் சோழர்கள் ஆண்ட பகுதிகள்.
தலைநகர்- உறையூர்
துறைமுகங்கள் – காவிரி வங்கக்கடலில் கலக்கும் இடமான பூம்புகார் என்னும் காவேரிப்பூம்பட்டினம்.
சின்னம்/ கொடி : புலி
ஆதாரங்கள் – கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலை என்ற நீண்ட நூலில் காவேரிப்பூம்பட்டினம் குறித்து பாடியுள்ளார்.
புகழ் பெற்ற மன்னர்கள்: காவிரி நீர் பெருக்கை திறம்பட பயன்படுத்தி நிலப்பரப்புகளில் விவசாயம் செழிக்க செய்த கரிகால சோழன். அவர் கட்டிய அணையே இன்னும் திருச்சியில் கம்பீரமாக நிற்கும் கல்லணை ஆணை.
சதுர வடிவிலான நாணயங்களை இவர் வெளியிட்டார். அதன் முகப்பில் புலியும் மறுபுறம் யானை மற்றும் புனித சின்னங்கள் காணப்பட்டன.
Pandyas (பாண்டியர்கள்):
மதுரையை தலைநகரை கொண்டு தென் தமிழகத்தை ஆண்டு வந்த மன்னர்கள்.
தலைநகர்- மதுரை
துறைமுகங்கள் – கொற்கை மற்றும் ஆலங்குளம்
சின்னம்/ கொடி : மீன்
ஆதாரங்கள் – அசோகரது கல்வெட்டுகள், மாங்குளத்தில் கண்டறியப்பட்ட பிராமி கல்வெட்டுகள். அவர்கள் வளர்த்த தமிழ் சங்கத்தில் உருவான சங்க இலக்கியங்கள்.
புகழ் பெற்ற மன்னர்கள்: நெடியோன் முடத்திருமாறன், பலயாகசாலை முதுகுடுமி பெருவழுதி ஆகியோர் முக்கிய அரசர்கள்.
Velir (வெளிர்/ குடித்தலைமை)
தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்கள் தவிர சில குறுநில மன்னர்களும் ஆட்சி செய்தனர். அவர்கள் வெளிர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் மூவேந்தர்களுடன் இணைந்து பிற மன்னர்களை எதிர்த்து போர் புரிந்தனர். சிலர் மூவேந்தர்களை எதிர்த்து நின்றனர். வேளிர்களில் முக்கியமானோர் கடையெழு வள்ளல்கள் (பாரி, காரி, ஓரி. நள்ளி, பேகன், ஆய், அதியமான்) ஆவர். அவர்கள் புலவர்களுக்கு வாரி வழங்கியுள்ளனர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். கடையெழு வள்ளல்கள் குறித்து புலவர்களின் நூல்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற தேர்விற்கு பயன்படும் குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
Use Coupon code: MON75 (75% offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group