Tamil govt jobs   »   Study Materials   »   Slash and Burn Agriculture
Top Performing

ஸ்லாஷ் மற்றும் பர்ன் வேளாண்மை | Slash and Burn Agriculture | TNPSC | RRB

ஸ்லாஷ் மற்றும்  பர்ன் வேளாண்மை: ஸ்லாஷ் மற்றும்  பர்ன் வேளாண்மை என்பது ஸ்விடன் என்ற ஒரு விவசாய நிலத்தை உருவாக்க, ஒரு காடு அல்லது வனப்பகுதியில் உள்ள தாவரங்களை வெட்டி எரிப்பதுடன் தொடர்புடைய ஒரு விவசாய முறையாகும். ஸ்லாஷ் மற்றும்  பர்ன் வேளாண்மை என்பது ஒரு வகை நாடோடி வேளாண்மையாகும். நாடோடி வேளாண்மை என்னும் விவசாய அமைப்பில், விவசாயிகள் வழக்கமாக ஒரு விவசாய பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்கின்றனர். ஒரு தோராயமான மதிப்பீடு என்னவென்றால், உலகளவில் 200 மில்லியன் முதல் 500 மில்லியன் மக்கள் Slash and Burn Agriculture பயன்படுத்துகின்றனர்.

Read More: Newton’s laws of motion

Slash and Burn Agriculture: Overview

Slash and Burn Agriculture
Slash and Burn Agriculture

ஸ்லாஷ் மற்றும்  பர்ன் வேளாண்மை முறை, ஒரு இடத்தில் இருக்கும் மரங்கள் மற்றும் செடிகளை வெட்டுவதிலிருந்து தொடங்குகிறது. அவ்வாறு வெட்டப்பட்ட தாவரங்கள், அல்லது “ஸ்லாஷ்”, இயல்பாக அவ்வருடத்தின் மழைக்காலத்திற்கு முன்பே உலர விடப்படுகிறது. பின்னர், உலர்ந்த தாவரங்கள் எரிக்கப்படுகின்றன, இதன் விளைவாக ஊட்டச்சத்து நிறைந்த சாம்பல் அடுக்கு, மண்ணை வளமாக்குகிறது, அத்துடன் தற்காலிகமாக களை மற்றும் பூச்சி இனங்களை நீக்குகிறது. சுமார் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, களை மற்றும் பூச்சி படையெடுப்புகளுடன் சத்துக்கள் குறைவதால், நிலத்தின் உற்பத்தி திறன் குறைகிறது, இதனால் விவசாயிகள் வயலைக் கைவிட்டு புதிய பகுதிக்குச் செல்கின்றனர். ஒரு ஸ்விடன் மீள எடுக்கும் நேரம், இருப்பிடத்தைப் பொறுத்தது மற்றும் அது ஐந்து வருடங்கள் முதல் இருபது வருடங்களுக்கும் மேலாக இருக்கலாம், அதன் பிறகு நிலம் மீண்டும் வெட்டப்பட்டு, எரிக்கப்படுகிறது.

பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில், இந்த நடைமுறை ஜும் அல்லது ஜூம் என்று அழைக்கப்படுகிறது.

அஸார்டிங் என்ற சொல்லும் இதனுடன் தொடர்புடையதாகும். இது பொதுவாக விவசாய நோக்கத்திற்காக (ஆனால் எப்போதும் இல்லை), காடுகளை அழிப்பதாகும். அசார்ட்டிங்கில் மரங்கள் எரிக்கப்படமாட்டாது.

ஸ்லாஷ் மற்றும் பர்ன் வயல்கள் பொதுவாக மண்ணின் உற்பத்தி திறன் போகும் வரை ஒரு குடும்பத்திற்கு சொந்தமானதாக இருக்கும். உற்பத்தி திறன் குறையும் கட்டத்தில், உரிமை கைவிடப்பட்டு, அந்த குடும்பம் ஒரு புதிய நிலத்தை அழிக்கிறது, அதே சமயம் மரங்கள் மற்றும் புதர்கள், முன்னாள் வயலில் வளர அனுமதிக்கப்படுகின்றன. சில தசாப்தங்களுக்குப் பிறகு, மற்றொரு குடும்பம் அல்லது குலம், அந்த நிலத்தைப் பயன்படுத்தி பயனடைவதற்கான உரிமைகளைப் பெறலாம். இத்தகைய அமைப்பில் பொதுவாக விவசாய நில சந்தை இருக்காது, எனவே நிலத்தை திறந்த சந்தையில் வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது மற்றும் நில உரிமைகள் பாரம்பரியமானவை.

Read More: E-GOVERNANCE FOR TNPSC

Slash and Burn Agriculture: Technique(நுட்பம்)

Slash and Burn Agriculture-Slash being dried for burning
Slash and Burn Agriculture-Slash being dried for burning
  • ஸ்லாஷ் மற்றும் பர்ன் விவசாயத்தில், காடுகள் பொதுவாக வறண்ட காலத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு வெட்டப்படுகின்றன.
  • “ஸ்லாஷ்” உலர அனுமதிக்கப்பட்டு, பின் வரும் வறண்ட காலத்தில் எரிக்கப்படும்.
  • இதன் விளைவாக சாம்பல் மண்ணை உரமாக்குகிறது மற்றும் எரிந்த வயலில், அடுத்த மழைக்காலத்தின் தொடக்கத்தில் நெல், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு அல்லது பிற பயிர்கள் நடப்படுகிறது.
  • இந்த விவசாயம், ஒரு காலத்தில், வெட்டுக்கருவிகள், கோடாரிகள் மற்றும் மண்வெட்டிகள் போன்ற எளிய கருவிகளைப் பயன்படுத்தி செய்யப்பட்டது.

ALL OVER TAMILNADU TNPSC GROUP 4 MOCK EXAM 28th AUG 2021 12pm- GENERAL TAMIL 100 MARK- REGISTER NOW

Slash and Burn Agriculture: Advantages (நன்மைகள்)

  • ஸ்லாஷ் மற்றும்  பர்ன் விவசாய முறை கோடி கணக்கான மக்களுக்கு உணவு மற்றும் வருமானத்தை வழங்குகிறது.
  • இது பல்லாயிரம் ஆண்டுகளாக சுற்றுச்சூழல் ரீதியாக நிலைத்து நிற்கிறது.
  • அமேசான் போன்ற பல வெப்பமண்டல பகுதிகளில் உள்ள மண்ணின் ஊட்டச்சத்து மிகவும் குறைவாக இருப்பதால், இந்த பகுதிகளில் பயிரிடுவதற்கு பயன்படும் ஒரே வகை விவசாயம், இது ஒன்றுதான்.
  • ஸ்லாஷ் மற்றும் பர்ன் விவசாயிகள், பொதுவாக ஒரேவகைப் பயிரிடலுக்கு பதிலாக, பல்வேறு பயிர்களை நடவு செய்வதன் மூலம் அதிக பல்லுயிர் பெருக்கத்திற்கு பங்களிக்கின்றனர்.
  • ஒரு சிறிய தற்காலிக இடத்தை தவிர்த்து, பாரம்பரிய ஸ்லாஷ் மற்றும் பர்ன்  விவசாயத்தால், பொது சுற்றுச்சூழல் அமைப்பு பாதிக்கப்படுவதில்லை.

Read more: PDS system in Tamilnadu

Slash and Burn Agriculture: Disadvantages (தீமைகள்)

  •  ஸ்லாஷ் மற்றும்  பர்ன் வேளாண்மை, தற்காலிக காடழிப்பை உருவாக்குகிறது. எரிந்த மரங்களின் சாம்பல் மண்ணுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி விவசாயிகளுக்கு உதவுகிறது.
  • இந்த அணுகுமுறை, குறைந்த மக்கள்தொகை அடர்த்தி இருந்தால் மட்டுமே நிலையானதாக இருக்கும்.
  • இந்த நுட்பம் பொதுவாக பணப்பயிர்களை உற்பத்தி செய்ய மிகவும் பொருத்தமானது அல்ல.
  • ஒரு பெரிய அளவு நிலம், அல்லது குறைந்த மக்கள் தொகை அடர்த்தி, இந்த ஸ்லாஷ் மற்றும் பர்ன் விவசாயத்திற்கு தேவைப்படுகிறது.
  • மக்கள்தொகை அடர்த்தி அதிக அளவிற்கு உயர்ந்து, அதே பகுதியில் அடிக்கடி ஸ்லாஷ் மற்றும் பர்ன் நடைமுறை மேற்கொள்ளப்பட்டால், இறுதியில் காடு அழிய நேரிடும்.

ADDA247 தமிழின் இந்த பகுதியில் நாம் TNPSC குரூப் 1, 2/2A தேர்வுகளுக்கு தேவைப்படும் முதன்மை தேர்விற்கான கட்டுரைகளும் பிற RRB,SSC தேர்வுகளுக்கான கொள்குறி வினாக்களுக்கு தேவையான விஷயங்களும் பார்ப்போம்.

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: DREAM(75% OFFER)

ADDA247 TAMIL TIIC BATCH STARTS ON AUG 31 2021
ADDA247 TAMIL TIIC BATCH STARTS ON AUG 31 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

ஸ்லாஷ் மற்றும் பர்ன் வேளாண்மை | Slash and Burn Agriculture | TNPSC | RRB_6.1