Table of Contents
இந்திய அரசியலமைப்பின் ஆதாரங்கள்
இந்திய அரசியலமைப்பின் ஆதாரங்கள்: இந்திய அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும். இந்திய அரசியலமைப்பு மிக நீளமான அரசியலமைப்பாகும். இந்திய அரசியலமைப்பு மிகவும் விரிவான ஆவணம். இந்திய அரசியலமைப்பின் பெரும்பாலான விதிகள் இந்திய அரசு சட்டம் 1935 மற்றும் பிற பல்வேறு நாடுகளில் இருந்து கடன் வாங்கப்பட்டவை. இந்தக் கட்டுரையில், ஆர்வமுள்ளவர்கள் இந்திய அரசியலமைப்பின் ஆதாரங்களைப் பற்றிய விரிவான தகவல்களைப் பெறலாம்.
இந்திய அரசியலமைப்பு |
|
முதல் கூட்டம் | 9 டிசம்பர் 1946 |
இந்திய அரசியலமைப்பு ஒப்புதல் வழங்கிய நாள் | 26 நவம்பர் 1949 |
நடைமுறைப்படுத்திய தேதி | 26 ஜனவரி 1950 |
அட்டவணைகள் | 8 |
பாகங்கள் | 22 |
சட்டப்பிரிவுகள் | 395 |
இருக்கைகள் | 389 |
தற்காலிக தலைவர் | சச்சிதானந்த சின்ஹா |
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர் | Dr. இராஜேந்திரபிரசாத் |
வரைவு குழுவின் தலைவர் | Dr. B.R. அம்பேத்கர் |
அரசியலமைப்பு ஆலோசகர் | B. N. ராவ் |
இந்திய அரசியலமைப்பின் தந்தை | Dr. B.R. அம்பேத்கர் |
Fill the Form and Get All The Latest Job Alerts
இந்திய அரசியலமைப்பு – மூல ஆதாரங்கள்
நாடு | இந்திய அரசியலமைப்பின் மூல ஆதாரங்கள் |
பிரிட்டன் | நாடாளுமன்ற அரசு, ஒற்றைக் குடியுரிமை, சட்டத்தின் ஆட்சி, நாடாளுமன்ற செயல்முறைகள். இடைக்கால தடையாணைகள் |
அமெரிக்க அரசமைப்பு | அடிப்படை உரிமைகள், நீதி சீராய்வு, குடியரசுத்தலைவர் மீதான பதவிநீக்க தீர்மானம், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், குடியரசுத் துணைத்தலைவர் போன்றோரை பதவி நீக்கம் செய்யும் முறை |
அயர்லாந்து | அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் |
கனடா | ஒரு வலுவான மத்திய அரசுடன் கூடிய கூட்டாட் சி, மத்திய அரசிடம் பொதுப் பட்டியல், மத்திய அரசால் மாநில ஆளுநர் நியமனம், உச்சநீதிமன்றத்தின் அறிவுரை அதிகார வரம்பு |
ஆஸ்திரேலியா | வணிகம், வர்த்தக சுதந்திரம், நாடாளுமன்றத்தின் ஈரவைகளின் கூட்டுக்கூட்டம் |
ஜெர்மனி வெய்மர் அரசமைப்பு | நெருக்கடிநிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் பறிப்பு |
சோவியத் யூனியன் | அடிப்படைக் கடமைகள், முகப்புரையில் (சமூக, பொருளாதார, அரசியல்) நீதியின் மாண்புகள், அடிப்படைக் கடமைகள். (42வது திருத்தத்தில் உறுதிபடுத்தப்பட்டது.) |
பிரான்சு | குடியரசு, முகப்புரையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் |
தென் ஆப்பிரிக்கா | அரசமைப்புத் திருத்தமுறை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு |
Read More: Indian Constitution in Tamil | இந்திய அரசியலமைப்புச் சட்டம் தமிழில்
இந்திய அரசியலமைப்பு – உருவாக்கம்
1946ஆம் ஆண்டு, அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இச்சபையில் 292 மாகாணப் பிரதிநிதிகள், 93 சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள், பலுச்சிஸ்தானின் சார்பில் ஒருவர் (1) மற்றும் மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் மூவர் (3) என மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர். அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம், 1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் நடைபெற்றது. இச்சபையின் தற்காலிக தலைவராக மூத்த உறுப்பினர் Dr. சச்சிதானந்த சின்கா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியலமைப்பை உருவாக்க கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் போதே அவர் இறந்ததைத் தொடர்ந்து, Dr. இராஜேந்திரபிரசாத் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராகவும், H.C. முகர்ஜி மற்றும் V.T. கிருஷ்ணமாச்சாரி இருவரும் துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத் தொடர் 11 அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது 2473 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் சில ஏற்கப்பட்டன. அரசியல் நிர்ணய சபை பல்வேறு குழுக்களின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டது. இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுத் தலைவர் Dr. B.R. அம்பேத்கர் தலைமையின் கீழ் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. எனவே அவர் “இந்திய அரசியலமைப்பின் தந்தை” என அறியப்படுகிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்ட பின்னர், பொதுமக்கள், பத்திரிக்கைகள், மாகாணசட்டமன்றங்கள்மற்றும் பலரால் விவாதிக்கப்பட்டது. இறுதியாக முகவுரை, 22 பாகங்கள், 395 சட்டப்பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகளைக் கொண்ட இந்திய அரசியலமைப்பு, 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த நாளே ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு – சிறப்பியல்புகள்
- உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.
- இதன் பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை.
- இறுக்கம், நெகிழ்வுத் தன்மை இரண்டும் கொண்டதாக உள்ளது.
- கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.
- மத்தியில் மட்டுமல்லாமல் மாநிலங்களிலும் நாடாளுமன்ற முறையை வழங்குகிறது.
- இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது. சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
- உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.
- ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.
- சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு சிறப்பு விதிகள் மூலம் சலுகைகள் வழங்க வகை செய்கிறது.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil