Table of Contents
SSC CHSL 2023 தேர்வு தமிழில்: ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது SSC CHSL 2023 தேர்வை நடத்துவதற்கான SSC CHSL அறிவிப்பு 2023 ஐ வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை SSC CHSL தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என 2 மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது தேர்வாணையம் தமிழ் உட்பட 13 மொழிகளில் தேர்வுகளை எழுதலாம் என அறிவித்துள்ளது. இது பற்றிய முழுமையான தகவல்களுக்கு கட்டுரையை முழுமையாக படிக்கவும்.
SSC CHSL 2023 தேர்வு தமிழில்
SSC CHSL தேர்வை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என 2 மொழிகளில் மட்டுமல்லாமல் கூடுதலாக 13 மொழிகளில் தேர்வுகளை எழுதலாம் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
SSC CHSL தேர்வு 2023 |
|
அமைப்பின் பெயர் | பணியாளர் தேர்வு ஆணையம் |
தேர்வின் பெயர் | ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL, 10+2) 2023 |
பணி | LDC, DEO. நீதிமன்ற எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் |
காலியிடங்கள் | 1600 |
SSC CHSL அறிவிப்பு 2023 வெளியீட்டு தேதி | 9 மே 2023 |
SSC CHSL 2023 அடுக்கு 1 தேர்வு தேதி | 2 ஆகஸ்ட் 2023 முதல் 22 ஆகஸ்ட் 2023 வரை |
SSC CHSL 2023 அறிவிப்பு வெளியீட்டு நிலை | வெளியிடப்பட்டது |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.ssc.nic.in |
SSC CHSL 2023 தேர்வு மொழிகள்
SSC CHSL தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மொத்தம் 15 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
SSC CHSL 2023 தேர்வு மொழிகள் | |
மொழிகள் | Code |
ஹிந்தி | 01 |
ஆங்கிலம் | 02 |
அசாமி | 03 |
பெங்காலி | 04 |
குஜராத்தி | 07 |
மராத்தி | 14 |
மலையாளம் | 12 |
கன்னடம் | 08 |
தமிழ் | 21 |
தெலுங்கு | 22 |
ஒடியா | 16 |
உருது | 23 |
பஞ்சாபி | 17 |
மணிப்பூரி | 13 |
கொங்கனி | 10 |
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 9 மே 2023 முதல் 8 ஜூன் 2023 க்குள் https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களை ஈர்க்கும் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் முதன்மைத் தேர்வுகளில் SSC CHSL தேர்வும் ஒன்றாகும். இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் 2023 முதல் தேர்வு நடத்தப்படும்.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் அரசுகள் உள்ளூர் இளைஞர்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வெழுதும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாட்டிற்குச் சேவையாற்றும் வகையிலும், அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையிலும், விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil