Tamil govt jobs   »   Study Materials   »   புகழ்பெற்ற தமிழ் நூல்களும் ஆசிரியர்களும்
Top Performing

புகழ்பெற்ற தமிழ் நூல்களும் ஆசிரியர்களும் – பொதுத்தமிழ்

புகழ்பெற்ற தமிழ் நூல்களும் ஆசிரியர்களும்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு தேர்வுகளை நடத்துகிறது. TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் தகுதித் தேர்வுத் தாளைக் கட்டாயமாக்கியுள்ளது. TNPSC தேர்வுகளுக்கான தமிழ் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள் என்பது தமிழ் தகுதித் தேர்வுத் தாளில் முக்கியமான தலைப்புகளில் ஒன்றாகும். TNPSC தேர்வுகளுக்கான தமிழ் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முழு கட்டுரையையும் படிக்கவும்.

புகழ்பெற்ற தமிழ் நூல்களும் ஆசிரியர்களும்

புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்: இங்கு கொடுக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும்.  இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும் தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்

Fill the Form and Get All The Latest Job Alerts

தமிழ் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்

ஐம்பெருங்காப்பியங்கள்

  • சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
  • மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்

(பௌத்த சமய நூல்)

  • சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
  • வளையாபதி – ஆசிரியர்

(சமணசமய நூல); தெரியவில்லை

  • குண்டலகேசி – நாதகுத்தனார்

(பௌத்த சமய நூல்)

ஐஞ்சிறுங்காப்பியங்கள்

  • யசோதர காவியம் (உயிர்க்கொலை தீது என்பதை வலியுறுத்த – வெண்ணாவலுடையார் எழுந்த நூல்)
  • உதயணகுமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை
  • நாககுமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை
  • சூளாமணி (கவிதை நயத்தில் சிந்தாமணி – தோலாமொழித் தேவர் போன்றது
  • நீலகேசி – வாமன முனிவர் (சமண சமய நூல்)
  • சீவகசிந்தாமணி நரிவிருத்தம் – திருத்தக்க தேவர்
  • பெருங்கதை – கொங்குவேளிர்
  • கம்பராமாயணம், ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபரந்தாதி, இலக்குமி அந்தாதி, மும்மணிக் கோவை – கம்பர்
  • பெரியபுராணம் – சேக்கிழார்
  • முத்தொள்ளாயிரம் – ஆசிரியர் தெரியவில்லை
  • நந்திக்கலம்பகம் – ஆசிரியர் தெரியவில்லை
  • பாரத வெண்பா – பெருந்தேவனார்
  • மேருமந்தர புராணம் – வாமன முனிவர்
  • வில்லி பாரதம் – வில்லிபுத்தூராழ்வார்
  • இறையனார் களவியல் உரை – நக்கீரர்
  • புறப்பொருள் வெண்பா மாலை – ஐயனரிதனார்
  • கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
  • வீரசோழியம் – புத்தமித்திரர்
  • சேந்தன் திவாகரம், திவாகர நிகண்டு – திவாகர முனிவர்
  • பிங்கல நிகண்டு – பிங்கல முனிவர்
  • உரிச்சொல் நிகண்டு – காங்கேயர்

Read Also: இரட்டை காப்பியங்கள் (சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை) | TNPSC Group1, 2/2A and Group 4 Exams

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்

  • சூடாமணி நிகண்டு – மண்டல புருடர்
  • நேமிநாதம், வச்சணந்திமாலை, பன்னிரு பாட்டியல், (வெண்பாப் பாட்டியல்) – குணவீரபண்டிதர்
  • தண்டியலங்காரம் – தண்டி
  • யாப்பருங்கலம், யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக்காரிகை – அமிர்தசாகரர்
  • நன்னூல் – பவணந்தி முனிவர்
  • நம்பியகப்பொருள் – நாற்கவிராச நம்பி
  • திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி
  • சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் – அந்தகக்கவி வீரராகவர்
  • திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார் – உய்யவந்தத் தேவர்
  • சிவஞான போதம் – மெய்கண்டார்
  • தில்லைக்கலம்பகம் – இரட்டைப்புலவர்கள் (இளஞ்சூரியர், முதுசூரியர்)
  • வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது – உமாபதி சிவாச்சாரியார்
  • அரிச்சந்திர புராணம் – வீரகவிராயர்
  • மச்ச புராணம் – வடமலையப்பர்
  • இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணிய குறள் – எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
  • திருமாலை, திருப்பள்ளியெழுச்சி – தொண்டரடிப்பொடியாழ்வார்
  • திருவண்ணாமலை, திருவெண்காடு புராணம் – சைவ எல்லப்ப நாவலர்
  • தொன்னூல் விளக்கம், ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை, சதுரகராதி, திருக்காவலூர் கலம்பகம், தேம்பாவணி – வீரமாமுனிவர்
  • சீறாப்புராணம், முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் – உமறுப்புலவர்
  • நந்தனார் சரித்திரம் – கோபாலகிருட்டிண பாரதியார்
  • டம்பாச்சரி விலாசம் – காசி விஸ்வநாதர்
  • சைவம் பன்னிரு திருமுறைகள்
  • அகத்தியம் – அகத்தியர்
  • தொல்காப்பியம் – தொல்காப்பியர்

Read Also : கம்பராமாயணம் | TNPSC Group1 and 2/2A Exams

ஐங்குநுறூறு

  • குறிஞ்சித் திணை பாடியவர் – கபிலர்
  • முல்லைத் திணை பாடியவர் – பேயனார்
  • மருதத் திணை பாடியவர் – ஓரம்போகியார்
  • நெய்தற் திணை பாடியவர் – அம்மூவனார்
  • பாலைத் திணை பாடியவர் – ஓதலாந்தையார்

கலித்தொகை

  • குறிஞ்சிக்கலி பாடியவர் (29 பாடல்கள்) – கபிலர்
  • முல்லைக்கலி பாடியவர் (17 பாடல்கள்) – சோழன் நல்லுருத்திரன்
  • மருதக்கலி பாடியவர் (35 பாடல்கள்) – மருதனில நாகனார்
  • நெய்தற்கலிபாடியவர்(33பாடல்கள்) – நல்லந்துவனார்
  • பாலைக்கலி பாடியவர் (35பாடல்கள்) – பெருங்கடுங்கோன்
  • ஆத்திச்சூடி, ஞானக்குறள் (109 பாக்கள்), கொன்றை வேந்தன் – நல்வழி (41 பாக்கள்), மூதுரை (வாக்குண்டாம்) (31 பாக்கள்) – ஒளவையார்
  • வெற்றிவேற்கை, நைடதம் – அதிவீர ராம பாண்டியன்
  • அறநெறிச்சாரம் – முனைப்பாடியார்
  • நன்னெறி – சிவப்பிரகாசர்
  • பிரபுலிங்க லீலை, உலக நீதி – உலகநாதர்
  • நளவெண்பா, நளோபாக்கியானம் – புகழேந்திப் புலவர்

How to crack TNPSC group 1 in first attempt?

பதினென்கீழ்க்கணக்கு நூல்களும் பாடியோரும்

  • திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம், ஒழிவிலொடுக்கம், தொண்டமண்டல சதகம், சின்மய தீபிகை – வள்ளலார் இராமலிங்க அடிகளார்
  • மாறன் அகப்பொருள், மாறனலங்காரம் – திருக்குருகைப் பெருமாள்
  • வேதாரணியப் புராணம், திருவிளையாடற் போற்றி கலிவெண்பா, சிதம்பரப்பாட்டியல், திருவிளையாடற் புராணம், மதுரை பதிற்றுப் பத்தந்தாதி – பரஞ்சோதி முனிவர்
  • இலக்கண விளக்கப் பட்டியல் – வைத்தியநாத தேசிகர்
  • மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், இரட்டை மணிமாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், காசிக்கலம்பகம்ää சகலகலா வள்ளிமாலை, கந்தர் கலிவெண்பா, மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பர செய்யுட்கோவை – குமரகுருபரர்
  • கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
  • திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் – பகழிக்கூத்தர்
  • சேக்கிழார் பிள்ளைத்தமிழ் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப் பரணி, மூவருலா – ஒட்டக்கூத்தர்
  • கலிங்கத்துப் பரணி, இசையாயிரம், உலா, மடல் – செயங்கொண்டார்
  • திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் – காரைக்காலம்மையார்
  • திருக்குற்றாலநாத உலா, குற்றாலக் குறவஞ்சி – திரிகூட ராசப்பக் கவிராயர்
  • அழகர் கிள்ளை விடு தூது, தென்றல் விடு தூது – பலபட்டைச் சொக்கநாதப் புலவர்
  • திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கை உலா – சிவப்பிரகாசர்
  • திருவரங்கக் கலம்பகம், திருவேங்கடந்தந்தாதி அஷ்டப்பிரபந்தம் – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
  • நாரை விடு தூது – சத்தி முத்தப் புலவர்
  • காந்தியம்மை பிள்ளைத்தமிழ், காந்தியம்மை அந்தாதி – அழகிய சொக்கநாதர்
  • சுகுண சுந்தரி – முன்சீப் வேதநாயகம் பிள்ளை
  • அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், இலக்கண விளக்க சூறாவளி – சிவஞான முனிவர்
  • கலைசைக் கோவை, கலைசைச் சிதம்பரேசர் பரணி, கலைசைச் சிலேடை வெண்பா, திருவாடுதுறை கோவை, சிவஞான முனிவர் துதி – தொட்டிக் களை சுப்பிரமணிய முனிவர்
  • குசேலோபாக்கியானம் – வல்லூர் தேவராசப் பிள்ளை
  • திருக்கோவையார் – மாணிக்கவாசகர்
  • தஞ்சைவாணன் கோவை – பொய்யாமொழிப் புலவர்
  • முக்கூடற்பள்ளு – என்னெயினாப் புலவராக இருக்கலாம்
  • சேது புராணம் – நிரம்பவழகிய தேசிகர்
  • இராம நாடகக் கீர்த்தனை – அருணாச்சலக் கவிராயர்
  • மனோன்மணியம் – பெ. சுந்தரம்பிள்ளை
  • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – கால்டுவெல்
  • பெண்மதி மாலை, சர்வ சமயக் கீர்த்தனைகள், பிரதாப முதலியார் சரித்திரம், நீதிநூல் திரட்டு, சுகுண சுந்தரி சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
  • கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் ஐயர்
  • ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், நாடகவியல் – பரிதிமாற்கலைஞர்
  • வள்ளித்திருமணம், கோவலன் சரித்திரம், சதி சுலோச்சனா, இலவகுசா, பக்த பிரகலாதா, நல்லதங்காள், வீர அபிமன்யுää பவளக் கொடி – சங்கரதாஸ் சுவாமிகள்
  • மனோகரா, யயாதி, சிறுதொண்டன், கர்ணன், சபாபதி, பொன் விலங்கு – பம்மல் சம்பந்தனார்
  • இரட்டை மனிதன், புனர் ஜென்மம், கனகாம்பரம் விடியுமா? – கு.ப. ராஜகோபாலன்
  • கடவுளும் சந்தசாமிப் பிள்ளையும், காஞ்சனை, பொன்னகரம், அகல்யை, சாப விமோசனம் – புதுமைப்பித்தன்
  • மீனாட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரம், புதியதும் பழையதும், கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி, என் சரிதம் – உ.வே. சாமிநாத அய்யர்
  • கருணாமிர்த சாகரம் – தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
  • பெத்லேகம் குறிஞ்சி – வேதநாயக சாஸ்திரி
  • நாக நாட்டரசி, கோகிலம்பாள் கடிதங்கள் – மறைமலையடிகள்
  • மோகமுள், அன்பே ஆரமுதே, அம்மா வந்தாச்சு, மரப்பசு, நளப்பாகம் – தி. ஜானகிராமன்
  • இராவண காவியம், தீரன் சின்னமலை, சுரமஞ்சரி, நெருஞ்சிப்பழம் – புலவர் குழந்தை
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், புதிய வார்ப்புகள், ஒரு பிடிச் சோறு, பாரீசுக்குப் போ, குருபீடம், சினிமாவுக்குப் போன சித்தாளு யுகசாந்தி, புது செருப்பு கடிக்கும், அக்னிப் பிரவேசம், உன்னைப்போல் ஒருவன் – ஜெயகாந்தன்
  • பொய்த்தீவு, ஒருநாள், வாழ்ந்தவர் கெட்டால் – க.நா. சுப்ரமணியம்
  • சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை, கள்வனின் காதலி, தியாகபூமி, மகுடபதி, அமரதாரா, திருடன் மகன் திருடன் – கல்கி
  • அகல் விளக்கு, பெற்ற மனம், கள்ளோ காவியமோ, கரித்துண்டு, நெஞ்சில் ஒரு முள், தம்பிக்கு, தமிழ் இலக்கிய வரலாறு, கயமை, பாவை, வாடா மலர், செந்தாமரை, மண்குடிசை, குறட்டை ஒலி– மு. வரதராசனார்
  • புத்ர, அபிதா – லா. சு. ராமாமிர்தம்
  • குறிஞ்சி மலர், சமுதாய வீதி, துளசி மாடம், பொன் விலங்கு, பாண்டிமா தேவி, மணி பல்லவம், வலம்புரிசங்கு – நா. பார்த்தசாரதி
  • அண்ணாமலை வீரையந்தாதி, சங்கரன் கோயில் திரிபந்தாதிää கருவை மும்மணிக்கோவை – அண்ணாமலை ரெட்டியார்
  • பாவை விளக்கு, சித்திரப்பாவை, எங்கே போகிறோம்? வேங்கையின் மைந்தன் வெற்றித் திருநகர், புதுவெள்ளம், பொன்மலர், பெண் – அகிலன்
  • நெஞ்சின் அலைகள், மிஸ்டர் வேதாந்தம், கரிசல், புதிய தரிசனங்கள் – பொன்னீலன்
  • கிருஷ்ண பருந்து – ஆ. மாதவன்
  • பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம் – மாதவ அய்யர்
  • உதய சந்திரன், நந்திபுரத்து நாயகி, காஞ்சி சுந்தரி – விக்கிரமன்
  • தவப்பயன், புது உலகம், அன்பளிப்பு, சிரிக்கவில்லை, காலகண்டி – கு. அழகிரிசாமி
  • ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி (பசுவய்யா)
  • குறிஞ்சித் தேன், வேருக்கு நீர், கரிப்பு மணிகள் – ராஜம் கிருஷ்ணன்
  • தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்
  • குருதிப்புனல், சுதந்திர பூமி, தந்திர பூமி, வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்த சாரதி
  • புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் – ப. சிங்காரம்
  • நாளை மற்றுமொரு நாளே, குறத்தி முடுக்கு – ஜி. நாகராஜன்
  • நாய்கள் – நகுலன்
  • தேசபக்தன் கந்தன், முருகன் ஓர் உழவன் – வேங்கடரமணி • பதினெட்டாவது அட்சக்கோடு, இருட்டிலிருந்து வெளிச்சம், கரைந்த நிழல்கள், நண்பனின் தந்தை – அசோகமித்திரன்
  • சாயாவனம், தொலைந்து போனவர்கள் – சா. கந்தசாமி
  • ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா
  • ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ. நிலையும் நினைப்பும், ஏ? தாழ்ந்த தமிழகமே, ஓர் இரவு, ஆரிய மாயை, வேலைக்காரி, தசாவதாரம், நீதி தேவன் மயக்கம், செவ்வாழை – அறிஞர் அண்ணா
  • குறளோவியம், பராசக்தி, தொல்காப்பியப் பூங்கா, பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், இரத்தம் ஒரே நிறம், வெள்ளிக்கிழமை, சங்கத்தமிழ், ரோமாபுரிப் பாண்டியன், பூம்புகார், மந்திரிகுமாரி – கலைஞர் கருணாநிதி
  • அர்த்தமுள்ள இந்துமதம், கல்லக்குடி மாகாவியம், இராசதண்டனை, ஆயிரம்தீவு, அங்கையற்கண்ணி, வேலங்குடித் திருவிழா, ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, இயேசு காவியம், சேரமான் காதலி, வனவாசம் மனவாசம் – கண்ணதாசன்
  • முள்ளும் மலரும் – உமாசந்திரன்
  • உயிரோவியம் – நாரண. துரைக்கண்ணன்
  • கல்லுக்குள் ஈரம் – ரா.சு. நல்லபெருமாள்
  • வாஷிங்டனில் திருமணம் – சாவி
  • ஸ்ரீரங்கத்து தேவதைகள், கரையெல்லாம் செண்பகப்பூ, யவனிகா, இரத்தம் ஒரே நிறம் – சுஜாதா
  • மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரை, உடையார் – பாலகுமாரன்
  • மானுடம் வெல்லும், மகாநதி, சந்தியா – பிரபஞ்சன்
  • நந்திவர்மன் காதலி, மதுரயாழ் மங்கை, ஆலவாய் அழகன் – ஜெகச்சிற்பியன்
  • வீரபாண்டியன் மனைவி – அரு. ராமநாதன்
  • இன்னொரு தேசிய கீதம், கவிராசன் கதை, கள்ளிக்காட்டு இதிகாசம், தண்ணீர் தேசம், கருவாச்சி காவியம், வில்லோடு வா நிலவே, வைகறை மேகங்கள், திருத்தி எழுதிய தீர்ப்புகள் – கவிஞர் வைரமுத்து
  • பால்வீதி, ஆலாபனை, சுட்டு விரல், நேயர் விருப்பம், பித்தன் – அப்துல் ரகுமான்
  • கண்ணீர்ப்பூக்கள், சோழநிலா, ஊர்வலம் – மு. மேத்தா
  • கருப்பு மலர்கள் சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், கல்லறைத் தொட்டில் – நா. காமராசன்
  • கனவுகள் ⁺ கற்பனைகள் ₌ காகிதங்கள் – மீரா (மீ. ராஜேந்திரன்)
  • ஞான ரதம், சந்திரிகையின் கதை, தராசு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் – பாரதியார்
  • கண்ணகி புரட்சி காப்பியம், பிசிராந்தையார், தமிழ் இயக்கம், குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, எதிர்பாராத முத்தம், கதர் இராட்டினப் பாட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாண்டியன் பரிசு, முதியோர் காதல், குறிஞ்சித் திரட்டு, படித்த பெண்கள், இசையமுது, மணிமேகலை வெண்பா, இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன்
  • தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், உதட்டில் உதடு, சாவின் முத்தம் – சுரதா
  • ஊரும் பேரும் – ரா.பி. சேதுப்பிள்ளை
  • தேவியின் கீர்த்தனைகள், மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, குழந்தை செல்வம், உமர் கய்யாம் பாடல்கள் – கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
  • கோவேறு கழுதைகள் – இமயம்
  • மலைக்கள்ளன், தமிழன் இதயம், சங்கொலி, அவனும் அவளும், என் கதை, கவிதாஞ்சலி, காந்தி அஞ்சலி, தமிழ் வேந்தன், அன்பு செய்த அற்புதம் – நாமக்கல் கவிஞர். வே. ராமலிங்கம்பிள்ளை
  • முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, சீர்திருத்தம், கிறித்துவின் அருள் வேட்டல், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்– திரு.வி. கல்யாணசுந்தரனார்
  • யவனராணி, கடல்புறா, மலைவாசல், இராசநிலம் ஜலதீபம், இராஜபேரிகை – சாண்டில்யன்
  • காந்தார்ச்சாலை, கொல்லிமலைச் செல்வி – பூவண்ணன்
  • மதங்க சூளாமணி, யாழ்நூல் – சுவாமி விபுலாநந்தர்
  • வியாசர் விருந்து, சக்கரவர்த்தி திருமகள், சபேசன் – இராஜாஜி
  • திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி
  • எழிலோவியம், குழந்தை இலக்கியம், தமிழச்சி, தொடு வானம் – வாணிதாசன்
  • மலரும் உள்ளம், சிரிக்கும் பூக்கள், நேருவும் குழந்தைகளும் – அழ. வள்ளியப்பா
  • கரமுண்டார் வீடு – தஞ்சை பிரகாஷ்
  • காடு, பின்தொடரும் நிழலின் குரல், கன்னியாகுமரி, ஏழாவது உலகம், மண், விஷ்ணுபுரம், கொற்றவை – ஜெயமோகன்
  • நெடுங்குருதி, உப பாண்டவம் – எஸ். ராமகிருஷ்ணன்
  • புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு – தாரா பாரதி
  • பூத்தது மானுடம், புரட்சி முழக்கம், உரை வீச்சு – சாலை இளந்திரையன்
  • வாழும் வள்ளுவம், பாரதியின் அறிவியல் பார்வை – வா. செ. குழந்தைசாமி
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNUSRB SI 2023 Sub-Inspector of Police | Tamil | Online Live Classes by Adda247
TNUSRB SI 2023 Sub-Inspector of Police | Tamil | Online Live Classes by Adda247

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

புகழ்பெற்ற தமிழ் நூல்களும் ஆசிரியர்களும் - பொதுத்தமிழ்_4.1