Tamil govt jobs   »   வினை வகைகள் | TAMIL GRAMMAR |...

வினை வகைகள் | TAMIL GRAMMAR | TNPSC GROUP EXAMS

Table of Contents

வினை வகைகள் | TAMIL GRAMMAR | TNPSC GROUP EXAMS_2.1

வணக்கம் தேர்வர்களே!!!

நாம் இன்று TNPSC, SCC, UPSC ஆகிய தேர்விற்கு பயன்படும் தமிழ் இலக்கண வங்கிகளில் ஒன்றான வினை வகைகள் குறித்து பார்ப்போம்.

[sso_enhancement_lead_form_manual title=” வெற்றி வாராந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் july 1st week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/06/10095034/Weekly-Current-Affairs-PDF-in-Tamiljuly-1st-week-2021-adda247tamil.pdf”]

வினை வாக்கியம்

பெயர்ச்சொல் செய்யும் தொழிலைக் காட்டுவது வினைச்சொல் ஆகும். வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பது மட்டுமில்லாமல் அவை பயன்படுவதன் அடிப்படையில் பலவகைப்படுகிறது.அவை,

வினை வகைகள்

  • தன்வினை, பிறவினை
  • செய்வினை, செயப்பாட்டுவினை
  • உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை

தன்வினை, பிறவினை வாக்கியங்கள்:

தன்வினை வாக்கியம்

தன்வினை வாக்கியத்தில் ஒரு நபர் தானே ஒரு செயலைச் செய்வது.

உதாரணம்

நளினி பாடினாள்.

இவ்வகை வாக்கியத்தில் நளினி என்னும் எழுவாய் பாடுதல் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.

பிறவினை வாக்கியம்

ஒரு நபர் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்வது.

உதாரணம்

நளினி நடனம் பயிற்றுவித்தாள் . இவ்வகை வாக்கியத்தில் பயிற்றுவித்தல் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.

  தன்வினை    -   பிறவினை
  ஆடினான்  –  ஆட்டினான்
  மாறுவான்  -  மாற்றுவான்
  வருந்துவான் - வருத்துவான் 
  திருந்தினான் - திருத்தினான் 
  அடங்கினான் - அடக்கினான்

செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்கள்

செய்வினை வாக்கியம்
ஒரு வாக்கியம் எழுவாய் செயப்படுப்பொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும்.
வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.

இது செய்வினைத் தொடர் – Active Voice. பொதுவாக செயப்பாட்டு வினையில் எழுவாயுடன் ஆல், ஆன் இவற்றில் ஒன்று நேராகவோ, மறைந்தோ வரலாம்.

நிலன் பாடம் படித்தான் 

செயப்பாட்டு வினை வாக்கியம்

    ஒரு வாக்கியம் செயப்படுப்பொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் அமையும். 
எழுவாயோடு ’ஆல்’ என்ற 3ம் வேற்றுமை உருபும், பயனிலையோடு ‘பட்டது’, ‘பெற்றது’
 என்ற சொற்கள் சேர்ந்து வரும்.
                     பாடம்               நிலனால்           படிக்கப்பட்டது.
                 (செயப்படுபொருள்)    (எழுவாய்)         (பயனிலை)  
    இது செயப்பாட்டு வினை - Passive Voice.   பொதுவாக செயப்பாட்டு வினையில் 
எழுவாயுடன் ஆல், ஆன்  இவற்றில் ஒன்று நேராகவோ, மறைந்தோ வரலாம்.

செய்வினைத் தொடரைச் செயப்பாட்டு வினைத் தொடராக்கும் விதிகள்

(1) எழுவாயைச் செயப்படுபொருள் ஆக்க வேண்டும். அதனுடன் மூன்றாம் வேற்றுமை உருபாகிய ‘ஆல்’ (By) என்பதைச் சேர்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டு

நிலன் + ஆல் = நிலனால்

(2) செயப்படுபொருளில் உள்ள, ‘ஐ’ வேற்றுமை உருபை நீக்கி, எழுவாயாக மாற்ற வேண்டும்.

எடுத்துக்காட்டு

பாடம் + ஐ. இதில் ‘ஐ’ நீக்கினால், பாடம்(எழுவாய்)

(c) பயனிலையுடன் ‘படு’, ‘பட்டது’ என்னும் துணைவினைகளைச் சேர்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டு

பாடம் நிலனால் படிக்கப்பட்டது.

வினை வகைகள் | TAMIL GRAMMAR | TNPSC GROUP EXAMS_3.1

உடன்பாட்டுவினை எதிர்மறைவினை வாக்கியங்கள்

உடன்பாட்டு வினை:

ஒரு செயலைச் செய்வதற்கு உடன்பட்ட நிலையைத்தான். உடன்பாட்டு வினை எனப்படுகிறது.

உதாரணம்

  • செய்கிறான்
  • செய்வேன்
  • பெறுவான்

போன்ற வினைச்சொற்கள் ஒரு வினையைச் செய்வதையோ, செய்யப் போவதையோ அறிவிக்கின்றன. இவற்றை உடன்பாட்டு வினைகள் என்கிறோம்.

[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம் PART-8″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/08101500/TamilNadu-State-GK-in-Tamil-Download-State-GK-PDF-Part-8.pdf”]

எதிர்மறை வினை

ஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையை எதிர்மறை வினை எனப்படுகிறது.

உதாரணம்

  • செய்யேன் (செய்ய மாட்டேன் என்பது பொருள்)
  • செய்யான் (செய்ய மாட்டான் என்பது பொருள்)
  • பெறான் (பெற மாட்டான் என்பது பொருள்)

இது போன்ற தேர்விற்கான பாடக்குறிப்புகளுக்கு ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Use Coupon code: HAPPY (75% OFFER)

வினை வகைகள் | TAMIL GRAMMAR | TNPSC GROUP EXAMS_4.1

  *இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 Adda247App  | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group

 

 

 


 

வினை வகைகள் | TAMIL GRAMMAR | TNPSC GROUP EXAMS_5.1