Tamil govt jobs   »   Study Materials   »   Tamil Ilakkanam
Top Performing

Tamil Ilakkanam | தமிழ் இலக்கணம்: சந்திப்பிழை அறிதல்

தமிழ் இலக்கணம் சந்திப் பிழையை நீக்குதல்:வல்லின எழுத்துக்கள் ஆறு – க், ச், ட், த், ப் இவைகளில் க், ச், த், ப் ஆகிய எழுத்துகள் மிகவும் வலிமையானவை. ட், ற் – ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வர இயலாதவை வல்லினம் என்று அழைக்கப்படும். வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும் வல்லினம் மிகும் இடங்கள்.தமிழ் இலக்கணம் சந்திப் பிழையை நீக்குதல் எந்தெந்த இடத்தில் வல்லினம் மிகும் மிகாது என்பதை அறிந்து கொண்டால், எளிதாக சந்திப்பிழை நீக்கி எழுதலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

வல்லினம் மிகும் இடங்கள்

  1. அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி என்றும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

(எ.கா) அந்தத் தோட்டம்

இந்தக் கிணறு

எந்தத் தொழில்

அப்படிச் செய்தான்

இப்படிக் கூறினான்

எப்படிப் பார்ப்போம்

 

  1. இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரிகளில் வல்லினம் ஆகும். (எ.கா)பொருளைத் தேடினான்

புத்தகத்தைப் படித்தான்

ஊருக்குச் சென்றான்

தோழனுக்குக் கொடு

 

  1. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகைகளின் பின் மிகும்.

(எ.கா)தண்ணீர்ப்பானை,

மரப்பலகை,

சட்டைத்துணி

 

  1. ஒரெழுத்துச் சொற்கள் சிலவற்றின் பின்பகும்.

(எ.கா)தைப்பாவை

தீச்சுடர்

 

  1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும்.

(எ.கா)ஓடாப்புலி,

வளையாச் சொல்

 

  1. முற்றியலுகர சொற்களின் பின் வல்லினம் மிகும்

(எ.கா)திருக்குறள்,

பொதுச்சொத்து

Read More : Chemical Bonds for TNPSC | வேதிப் பிணைப்பு

  1. உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்

(எ.கா)மழைக்காலம்,

பனித்துளி

 

  1. இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும் (ஐ)

(எ.கா) குழந்தையை + கண்டேன்₌ குழந்தையைக் கண்டேன்

பொருளை + தேடு ₌ பொருளைத்தேடு

புலியை + கொன்றான் ₌ புலியைக் கொன்றான்

நூலை + படி ₌ நூலைப்படி

 

  1. நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும்.

(எ.கா) வீட்டிற்கு + சென்றான் ₌ வீட்டிற்குச் சென்றான்

கல்லூரிக்கு + போனாள் ₌ கல்லூரிக்குப் போனாள்

 

  1. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும். ‘அது’ – மறைந்திருப்பது

(எ.கா) தாமரை+ பூ ₌ தாமரைப்பூ

குதிரை + கால் ₌ குதிரைக்கால்

 

  1. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும்.

(எ.கா) குடி + பிறந்தார் ₌ குடிப்பிறந்தார்

வழி + சென்றார் ₌ வழிச்சென்றார்

 

  1. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் வர மிகும் (வல்லெழுத்தை அடுத்து வந்த குற்றிலுகரம்)

(எ.கா) பாக்கு + தூள் ₌ பாக்குத்தூள்

தச்சு + தொழில் ₌ தச்சுத்தொழில்

கேட்டு + கொடு ₌ கேட்டுக்கொடு

பத்து + பாட்டு ₌ பத்துப்பாட்டு

படிப்பு + செலவு ₌ படிப்புச்செலவு

பற்று + தொகை ₌ பற்றுத்தொகை

 

  1. மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் சில இடங்களில் வல்லினம் மிகும்.

(எ.கா) இரும்பு + தூள் ₌ இரும்புத்தூள்

மருந்து + கடை ₌ மருந்துக்கடை

கன்று + குட்டி ₌ கன்றுக்குட்டி

 

  1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் ‘எ’ என்னும் வினா எழுத்திற்குப் பின்னும் வலி மிகும்.

(எ.கா) அ+ கடல் ₌ அக்கடல்

இ + பாடம் ₌ இப்பாடம்

உ + சிறுவன் ₌ உச்சிறுவன்

எ + தொழில் ₌ எத்தொழில்

Also Read : Education System in Tamil Nadu | தமிழ்நாட்டில் கல்வி முறை | Unit.9 Study Material for TNPSC Group 2-Part 2

  1. சுட்டு, வினாக்களின் திரிபுகளான அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

(எ.கா) அந்த + கிணறு ₌ அந்தக்கிணறு

இந்த +தமிழ் ₌ இந்தத்தமிழ்

எந்த + செயல் ₌ எந்தச்செயல்

 

  1. அந்த, இந்த, அப்படி, இப்படி என்னும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

(எ.கா) அந்த + பையன் ₌ அந்தப்பையன்

இந்த + சிறுவன் ₌ இந்தச்சிறுவன்

அப்படி + செய் ₌ அப்படிச்செய்

இப்படி +பார் ₌ இப்படிப்பார்

 

  1. எந்த, எப்படி, எங்கு என்ற வினாச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

(எ.கா) எங்கு + பார்த்தாய் ₌ எங்குப்பார்த்தாய்?

எப்படி + சாதித்தாய் ₌ எப்படிச்சாதித்தாய்?

எந்த + செடி ₌ எந்தச்செடி?

 

  1. நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க வருமொழி முதலில் வரும் வல்லினம் மிகுந்து ஒலிக்கும் (உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்)

(எ.கா) நிலா+ சோறு ₌ நிலாச்சோறு

மழை+ காலம் ₌ மழைக்காலம்

பனி + துளி ₌ பனித்துளி

 

  1. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

(எ.கா) சாரை + பாம்பு ₌ சாரைப்பாம்பு

மார்கழி + திங்கள் ₌ மார்கழித்திங்கள்

மல்லி +பூ ₌ மல்லிப்பூ

 

  1. பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

(எ.கா) சதுரம் + பலகை ₌ சதுரப்பலகை

வட்டம் + பாறை ₌ வட்டப்பாறை

பச்சை + பட்டு ₌ பச்சைப்பட்டு

Also Read : TNPSC TAMILNADU GENERAL KNOWLEDGE Q&A PART-19 PDF 

  1. அகர இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்

(எ.கா) தேட + சொன்னான் ₌ தேடச்சொன்னான்

வர + சொன்னான் ₌ வரச்சொன்னான்

ஓடி + பிடித்தான் ₌ ஓடிப்பிடித்தான்

 

  1. ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்

(எ.கா) பூ +பறித்தான் ₌ பூப்பறித்தான்

கை + கரண்டி ₌ கைக்கரண்டி

தீ + பற்றியது ₌ தீப்பற்றியது

 

  1. ஆய், போய் என்னும் வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்

(எ.கா) நன்றாய் + பேசினார்₌ நன்றாய்ப்பேசினார்

போய் + தேடு ₌ போய்த்தேடு

 

  1. இனி, தனி மற்று, மற்ற, மற்றை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்

(எ.கா) இனி + காணலாம் ₌ இனிக்காணலாம்

தனி + தமிழ் ₌ தனித்தமிழ்

மற்று + கண்டவை ₌ மற்றுக்கண்டவை

மற்ற+ பொருள்கள் ₌ மற்றப்பொருள்கள்

மற்றை + கூறுகள் ₌ மற்றைக் கூறுகள்

 

  1. என, ஆக என்னும் சொற்களுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.

(எ.கா) என + கூறினான் ₌ எனக்கூறினான்

ஆக + சொன்னான் ₌ ஆகச்சொன்னான்

 

  1. சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்

(எ.கா) சால + சிறந்தது ₌ சாலச்சிறந்தது

தவ + பெரிது ₌ தவப்பெரிது

 

  1. ஈறுகெட்ட எதிரிமறைப் பெயரெச்சத்தின் பின்வரும் வல்லினம் மிகும்

(எ.கா) உண்ணா + சோறு ₌ உண்ணாச்சோறு

ஓடா + குதிரை ₌ ஓடாக்குதிரை

அழியா + புகழ் ₌ அழியாப்புகழ்

 

  1. தனிக்குறிலையடுத்து வரும் ஆ என்னும் நெடிலுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்

(எ.கா) பலா + சுளை ₌ பலாச்சுளை

இரா + பகல் ₌ இராப்பகல்

கனா + காலம் ₌ கனாக்காலம்

 

  1. முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்

(எ.கா) திரு + குறள் ₌ திருக்குறள்

பொது + சொத்து ₌ பொதுச்சொத்து

 

  1. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்

(எ.கா) தண்ணீர் + குடம் ₌ தண்ணீர்க்குடம்

மலர் + கூடை ₌ மலர்க்கூடை

Also Read : Education System in Tamil Nadu | தமிழ்நாட்டில் கல்வி முறை | Unit.9 Study Material for TNPSC Group 2-Part 1

  1. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்

(எ.கா) மரம் + பெட்டி ₌ மரப்பெட்டி

இரும்பு + சாவி ₌ இரும்புச்சாவி

 

  1. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்

(எ.கா) சட்டை + துணி ₌ சட்டைத்துணி

குடை + கம்பி ₌ குடைக்கம்பி

 

  1. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்

(எ.கா) அடுப்பு + புகை ₌ அடுப்புப்புகை

விழி + புனல் ₌ விழிப்புனல்

 

  1. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்

(எ.கா) பவளம் + பற்று ₌ பவளப்பற்று

மலர் + கண் ₌ மலர்க்கண்

 

  1. ட, ற, ஒற்று இரட்டிக்கும் உயிர்தொடர், நெடி தொடர் குற்றியலுகரத்திற்குப் பின் வல்லினம் மிகும்

(எ.கா) வயிறு + போக்கு ₌ வயிற்றுப்போக்கு(உயிர்த்தொடர்)

முரடு + காளை ₌ முரட்டுக்காளை

நாடு + பற்று ₌ நாட்டுப்பற்று (நெடில்தொடர்)

காடு + தேன் ₌ காட்டுத்தேன்

வல்லினம் மிகா இடங்கள்

  1. வினைத்தொகையில் வில்லினம் மிகாது

(எ.கா)விரிசுடர், பாய்புலி

 

  1. வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது

(எ.கா)கற்க கசடற, வாழ்க தமிழ்

 

  1. விளித்தொடரில் வலி மிகாது

(எ.கா)கண்ணா பாடு, அண்ணா பாடு

 

Apply for : TNCSC Recruitment 2021, Apply 435 TNCSC Tiruvarur Vacancies @ www.tncsc.tn.gov.in

  1. இரட்டைக் கிளவியிலும் அடுக்குத்தொடரிலும் வல்லினம் மிகாது.

(எ.கா)கலகல, பாம்பு பாம்பு

 

  1. அவை இவை எனும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

(எ.கா)அவை சென்றன, இவை செய்தன

 

  1. அது இது எனும் எட்டுச் சொற்களின் பின் வலி மிகாது

(எ.கா)அது பிறந்தது, இது கடித்தது

 

  1. எது, அது எனும் வினைச்சொற்களின் பின் வலி மிகாது

(எ.கா)எது பறந்தது, யாது தந்தார்

 

  1. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினமிகாது

(எ.கா) தமிழ் + கற்றார் ₌ தமிழ் கற்றார்

நீர் + குடித்தான் ₌ நீர் குடித்தான்

துணி + கட்டினான் ₌ துணி கட்டினான்

 

  1. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது

(எ.கா) தாய் + தந்தை ₌ தாய் தந்தை

இரவு + பகல் ₌ இரவு பகல்

செடி+கொடி ₌ செடி கொடி

 

  1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து மற்றப் பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது

(எ.கா) நல்ல + குழந்தை ₌ நல்ல குழந்தை

படித்த + பெண் ₌ படித்த பெண்

செய்யாத+ செயல் ₌ செய்யாத செயல்

 

  1. உயர்திணைப் பொதுப்பெயர்களின் பின் வல்லினமிகாது

(எ.கா) தொழிலாளர் + தலைவர் ₌ தொழிலாளர் தலைவர்

மாணாக்கர் + கூடினர் ₌ மாணாக்கர் கூடினர்

தாய் + பாடினாள் ₌ தாய் பாடினாள்

 

  1. அஃறிணை வினைமுற்றின் பின் வல்லினம் மிகாது

(எ.கா) முழங்கின + சங்குகள் ₌ முழங்கின சங்குகள்

பாடின + குயில்கள் ₌ பாடின குயில்கள்

வந்தது + கப்பல் ₌ வந்தது கப்பல்

 

  1. எட்டு, பத்து தவிர மற்ற எண்களின் பின் வல்லினம் மிகாது

(எ.கா) ஒன்று + கொடு ₌ ஒன்று கொடு

இரு + சீர் ₌ இருசீர்

மூன்று + கிளி ₌ மூன்று கிளி

Read Also : TNEB AE Exam Dates 2021 | TNEB AE தேர்வு தேதிகள் 2021

  1. அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

(எ.கா) அத்தனை + பழங்களா? ₌ அத்தனை பழங்களா?

இத்தனை + பூக்களா? ₌ இத்தனை பூக்களா?

எத்தனை + தேங்காய்? ₌ எத்தனை தேங்காய்?

 

  1. வினாவை உணர்த்தும் ஆ, ஓ, ஏ, யா என்னும் வினா எழுத்துகளின் பின் வல்லினம் மிகாது

(எ.கா) அவளா + தைத்தாள் ₌ அவளா தைத்தாள்?

இவளோ + போனாள் ₌ இவளோ போனாள்?

அவனே + செல்வான் ₌ அவனே செல்வான்?

 

  1. சில, பல என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது

(எ.கா) பல + குடிசைகள் ₌ பல குடிசைகள்

சில + சொற்கள் ₌ சில சொற்கள்

 

  1. விளிப்பெயர் பின்னும், வியங்கோள் வினைமுற்றின் பின்னும் வல்லினம் மிகாது

(எ.கா) கண்ணா + கேள் ₌ கண்ணாகேள்

வேலா + செல் ₌ வேலாசெல்

வாழ்க + தமிழ் ₌ வாழ்கதமிழ்

 

  1. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது

(எ.கா) நாய் + போனது ₌ நாய் போனது

வள்ளி + படித்தாள் ₌ வள்ளி படித்தாள்

 

  1. வினைத்தொகையில் வல்லினம் மிகாது

(எ.கா) ஊறு + காய் ₌ ஊறுகாய்

ஆடு + கொடி ₌ ஆடு கொடி

விரி + கதிர் ₌ விரி கதிர்

 

  1. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது

(எ.கா) தீ + தீ ₌ தீதீ

பாம்பு + பாம்பு ₌ பாம்புபாம்பு

 

  1. சில ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

(எ.கா) வள்ளுவர் +கருத்து ₌ வள்ளுவர் கருத்து

ஒளவை + சொல் ₌ ஒளவை சொல்

 

  1. அவை இவை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது

(எ.கா) அவை+போயின ₌ அவை போயின

இவை + செய்தன ₌ இவை செய்தன

 

  1. படியென்னும் சொல் வினையோடு சேர்ந்து வருமிடத்தில் வல்லினம் மிகாது

(எ.கா) வரும்படி +கூறினான் ₌ வரும்படி கூறினான்

போகும்படி + சொன்னான் ₌ போகும்படி சொன்னான்

 

  1. இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது

(எ.கா) கல + கல ₌ கலகல

பள + பள ₌ பளபள

 

  1. அவை, இவை என்னம் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகாது

(எ.கா) அவை + சென்றன ₌ அவை சென்றன

இவை + செய்தன ₌ இவை செய்தன

 

  1. அது, இது என்னும் சுட்டுகளின் பின்வரும் வல்லினம் மிகாது

(எ.கா) அது + பறந்தது ₌ அது பறந்தது

இது + கடித்தது ₌ இது கடித்தது

 

  1. எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது

(எ.கா) எது + பறந்தது ₌ எது பறந்தது?

யாது + தந்தார் ₌ யாது தந்தார்?

 

  1. இரண்டு வடசொற்கள் சேரும்போது வல்லினம் மிகாது

(எ.கா) சங்கீத+ சபா ₌ சங்கீத சபா

மகாஜன + சபா ₌ மகாஜன சபா

 

  1. சில வினையெச்சத் தொடரில் வல்லினம் மிகாது

(எ.கா) வந்து + போனான் ₌ வந்து போனான்

செய்து + கொடுத்தான் ₌ செய்து கொடுத்தான்

 

உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்றால் என்ன?

ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அவற்றை விளக்கும் பயனும் மறைந்து வருவது உடனும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.

 

(எ.கா) நீர்க்குடம்

அதாவது நீரை உடைய குடம்.இதில் ‘ஐ’ என்னும் 2 ம் வே.உருபும் ‘உடைய’ என அதை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.

நீர்க்குடம்   -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

மட்பானை -மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

கூலிவேலை-நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

தொட்டித் தண்ணீர்-ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

வீட்டுப்பூனை-ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 1  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

*****************************************************

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Read More:

Weekly Current Affairs One-Liners | 18th to 24th of October 2021

Weekly Current Affairs In Tamil 1st Week Of October 2021

Weekly Current Affairs One-Liners | 11th to 17th of October 2021 Weekly Current Affairs in Tamil 2nd Week of October 2021

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் தமிழில் PDF செப்டம்பர் 2021

தமிழ்நாடு மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் தமிழில் PDF செப்டம்பர் 2021

Coupon code- FEST75-75% OFFER

TNPSC GROUP 4, 1, 2, 2A GENERAL TAMIL LIVE CLASS BATCH BY ADDA247 STARTS OCT 14 2021
TNPSC GROUP 4, 1, 2, 2A GENERAL TAMIL LIVE CLASS BATCH BY ADDA247 STARTS OCT 14 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Tamil Ilakkanam | தமிழ் இலக்கணம்: சந்திப்பிழை அறிதல்_4.1