Tamil govt jobs   »   Study Materials   »   தமிழ்நாடு அமைச்சரவை மற்றும் முக்கிய பிரதிநிதிகள்
Top Performing

தமிழ்நாடு அமைச்சரவை மற்றும் முக்கிய பிரதிநிதிகள்

தமிழக அமைச்சரவை: அமைச்சரவை என்பது அரசாங்க அதிகார கட்டமைப்பில் உயர்மட்ட அதிகாரிகளின் அமைப்பாகும், இது நிர்வாகக் கிளையின் உயர் தலைவர்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பெரும்பாலும் அமைச்சர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. சில நாடுகளில் இது, முடிவெடுக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது, சில நாடுகளில் இது ‘அரசாங்கத் தலைவர்’ என்பவர்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. அமைச்சரவை சில நாடுகளில் “அமைச்சர்கள் சபை” என்றும் அழைக்கப்படுகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பு இருக்கும் நாடுகளில், பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொடர்பான அரசாங்க திசையை அமைச்சரவை தீர்மானிக்கிறது, அதே நேரத்தில் ஜனாதிபதி முறைமை உள்ள நாடுகளில், அது ‘அரசாங்கத் தலைவராக’ அதிகாரப்பூர்வ ஆலோசனைக் குழுவாக செயல்படுகிறது. Tamil Nadu Council of Ministers பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த கட்டுரையை படியுங்கள்.

உங்கள் மாநிலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்: தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் நியமனங்கள் வினாடிவினா

தமிழ்நாடு அமைச்சர்கள் குழு

தமிழ்நாடு அமைச்சரவை ஆனது தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்களின் குழுவாகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு, அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர், ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும் படி அழைக்கப் பெறுகிறார். அதன் படி, குழுவின் தலைவருக்கு முதலமைச்சர் பதவி ஏற்பும் இரகசியம் காப்பு உறுதிமொழி ஏற்பும், அத்தலைவரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் துறைகள் வாரியாக அமைச்சர்களாகவும், ஆளுநரால் பதவி ஏற்பும் செய்யப் பெற்றதற்குப் பின், ஆட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்கின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பிற கட்சிகளுடன் இணைந்து அக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு, புதிதாக ஒரு குழுவை அமைக்கின்றனர். இந்தக் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்படுபவர் முதலமைச்சராகவும், அவரது பரிந்துரைப்படி பிற துறைகளுக்கான அமைச்சர்களும் பொறுப்பேற்கிறார்கள்.

 

தற்போதைய தமிழக அமைச்சரவை

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து, 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அமைச்சர்கள் துறைகள் துறை – நிர்வாகங்கள்
1 மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன்.
2 மாண்புமிகு திரு. துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சர் சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத்திட்டங்கள், சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுசீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.
3 மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள், திட்டம் மற்றும் வளர்ச்சி
4 மாண்புமிகு திரு.கே.என். நேரு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர்வழங்கல்
5 மாண்புமிகு திரு. இ. பெரியசாமி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்
6 மாண்புமிகு திரு. க. பொன்முடி வனத்துறை அமைச்சர் வனம்
7 மாண்புமிகு திரு. எ.வ. வேலு பொதுப் பணித்துறை அமைச்சர் பொதுப்பணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)
8 மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் வேளாண்மை, வேளாண்மைபொறியியல், வேளாண்பணிக்கூட்டுறவுசங்கங்கள்,
9 மாண்புமிகு திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் வருவாய், மாவட்ட வருவாய் பணியமைப்பு, துணைஆட்சியர்கள், பேரிடர்மேலாண்மை
10 மாண்புமிகு திரு. தங்கம்தென்னரசு நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் நிதித்துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால நன்மைகள் மற்றும் தொல்லியல் துறை, சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றம்
11 மாண்புமிகு திரு.எஸ். ரகுபதி சட்டத் துறை அமைச்சர் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச்சட்டம்.
12 மாண்புமிகு திரு. சு. முத்துசாமி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத்திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இட வசதி கட்டுப்பாடு, நகர திட்டமிடல் மற்றும் நகர்பகுதி வளர்ச்சி, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்)
13 மாண்புமிகு திரு. கேஆர். பெரியகருப்பன் கூட்டுறவுத் துறை அமைச்சர் கூட்டுறவுத் துறை
14 மாண்புமிகு திரு. தா.மோ. அன்பரசன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் குடிசைத்தொழில்கள், சிறுதொழில்கள் உள்ளிட்ட ஊரகத்தொழில்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
15 மாண்புமிகு திரு. மு. பெ. சாமிநாதன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்.
16 மாண்புமிகு திருமதி. பி. கீதாஜீவன் சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்
17 மாண்புமிகு திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் மீன்வளம், மீன்வளர்ச்சிக் கழகம் மற்றும் கால்நடை பராமரிப்பு
18 மாண்புமிகு திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சர் பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி, கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம்
19 திரு.ஆர்.ராஜேந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சர் சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சர்க்கரை, கரும்புத்தீர்வை, கரும்புப்பயிர் மேம்பாடு
20 மாண்புமிகு திரு. அர. சக்கரபாணி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர்பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு.
21 மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்)
22 மாண்புமிகு திரு. ஆர். காந்தி கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல், பூதானம் மற்றும் கிராமதானம்.
23 மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு
24 மாண்புமிகு திரு. பி.மூர்த்தி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.
25 மாண்புமிகு திரு. எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துதுறை அமைச்சர் போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட
26 மாண்புமிகு திரு. பி.கே. சேகர்பாபு இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
27 டாக்டர் கோவி .செழியன் உயர்கல்வித் துறை அமைச்சர் தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி,மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்
28 மாண்புமிகு முனைவர். பழனிவேல் தியாக ராஜன் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தகவல் தொழில் நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள்
29 திரு.எஸ்.எம்.நாசர் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம்
30 மாண்புமிகு திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பள்ளிக் கல்வி
31 மாண்புமிகு திரு. சிவ. வீ. மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்ச பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்
32 மாண்புமிகு திரு. சி.வி. கணேசன் தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கட் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு.
33 மாண்புமிகு டாக்டர். டி .ஆர் .பி . ராஜா தொழில்துறை அமைச்சர் தொழில்கள்
34 மாண்புமிகு டாக்டர். மா.மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
35 மாண்புமிகு திருமதி.என். கயல்விழிசெல்வராஜ் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலன்

 

 

மேலும் மற்ற தகவலை படிக்க வினாடி வினா கேள்விகள்
தமிழ்நாடு சின்னங்கள் தமிழ்நாடு சின்னங்கள் பற்றிய முக்கிய கேள்விகள்

 

**************************************************************************

தமிழ்நாடு அமைச்சரவை மற்றும் முக்கிய பிரதிநிதிகள்_3.1

தமிழ்நாடு அமைச்சரவை மற்றும் முக்கிய பிரதிநிதிகள்_4.1

தமிழ்நாடு அமைச்சரவை மற்றும் முக்கிய பிரதிநிதிகள்_5.1
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
தமிழ்நாடு அமைச்சரவை மற்றும் முக்கிய பிரதிநிதிகள்_6.1