Tamil govt jobs   »   Study Materials   »   Tamil Nadu Dance Forms
Top Performing

Tamil Nadu Dance Forms | தமிழர்களின் நடனக்கலை

Tamil Nadu Dance Forms: நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். இது ஒரு விடயத்தின் வெளிப்பாட்டு வடிவமாகவோ, சமூகத் தொடர்பாடலாகவோ இருக்கலாம். நடனங்கள் சமயச் சார்பு நோக்கங்களுக்காக ஆடப்படுபவையாக அல்லது பிறருக்கு நிகழ்த்திக் காட்டும் ஒன்றாக அமையக்கூடும். மனிதர் தமது எண்ணங்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தொடர்புமுறை என்றும் நடனங்களைக் கருதலாம். தேனீக்கள் போன்ற சில விலங்குகளும் சில வேளைகளில் நடனத்தைப் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. சீருடற்பயிற்சி (Gymnastics), ஒத்திசை நீச்சல் (synchronized swimming), நடனப் பனிச்சறுக்கு (figure skating) போன்ற விளையாட்டுக்கள் நடனத்தையும் தம்முள் அடக்கியவையாக உள்ளன. கட்டா எனப்படும் தற்காப்புக் கலையும் நடனங்களுடன் ஒப்பிடப்படுவது உண்டு. உயிரற்ற பொருட்களின் அசைவுகள் நடனம் எனக் குறிப்பிடப்படுவது இல்லை. Tamil Nadu Dance Forms தொடர்பான விவரங்களை நாங்கள் உங்களுக்கு இந்த கட்டுரையில் வழங்கியுள்ளோம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Origin and History of Dance Forms

நடனத்தின் தோற்றத்தை அறிந்துகொள்ளக்கூடிய வகையில் தெளிவான தொல்பொருள் சான்றுகள் இல்லை. இதனால், எப்போது நடனம் மனிதப் பண்பாட்டின் ஒரு பகுதியானது என்று சொல்ல முடியாது. மிகப் பழைய மனித நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்னரே சடங்குகள், கொண்டாட்டங்கள், பொழுதுபோக்குகள் போன்ற பல காரணங்களுக்காக நடனங்கள் மனித வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருக்கக்கூடும். வரலாற்றுக்கு முந்திய காலத்திலேயே நடனங்கள் ஆடப்பட்டிருக்கலாம் என ஊகிக்கும் வகையிலான சான்றுகளைத் தொல்லியல் வழங்குகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை வாழிடங்களில் காணப்படும் ஓவியங்களில் உள்ள உருவங்கள் சில நடனமாடுவதைக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது. கிமு 3300 காலப்பகுதியைச் சேர்ந்த எகிப்தியக் கல்லறை ஓவியங்களிலும், இத்தகைய உருவங்கள் உள்ளன. சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த தொல்பொருட்களிலும் நடனம் ஆடும் உருவங்கள் காணப்படுகின்றன.

தொன்மங்களைக் கூறுவதற்கும் நிகழ்த்திக் காட்டுவதற்காகவுமே முதன்முதலாக முறையான நடனங்கள் ஆடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எதிர்ப் பாலாருக்குத் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவும் மனிதர்கள் நடனத்தைப் பயன்படுத்தி இருக்கலாம். எழுத்து மொழி உருவாவதற்கு முன்னர், கதைகளைப் பிந்திய தலைமுறைகளுக்குக் கடத்துவதில் நடனங்களும் பயன்பட்டன. நோய்களைக் குணப்படுத்துவதற்காச் சாமியாடுதல், வெறியாட்டு போன்றவற்றுக்கு முன்னோடியாகவும் நடனங்கள் விளங்கின. இது நடனத்தின் முதல் பயன்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. பிரேசிலின் மழைக்காடுகள் முதல் கலகாரிப் பாலைவனம் வரை உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான தேவைகளுக்கு நடனங்கள் இன்றும் பயன்படுவதைக் காணமுடியும்.

Also Read: Temples in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள்

Indian Dance Forms

இந்திய நடனம் என்பது பல வகை நடனங்களைக் கொண்டுள்ளது., பொதுவாக பாரம்பரியம் அல்லது நாட்டுப்புறம் என இது வகைப்படுத்தப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தின் பிற அம்சங்களைப் போலவே, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு வகையான நடனங்கள் தோன்றி, உள்ளூர் மரபுகளின்படி வளர்ந்தன.

இந்தியாவில் கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய அகாதமியான சங்கீத நாடக அகாதமி, எட்டு பாரம்பரிய நடனங்களை இந்திய பாரம்பரிய நடனங்களாக அங்கீகரிக்கிறது. மற்ற ஆதாரங்களும், அறிஞர்களும் இதை அங்கீகரிக்கின்றனர். இவை சமசுகிருத உரையான நாட்டிய சாஸ்திரம் மற்றும் இந்து மதத்தின் மத செயல்திறன் கலைகளில் வேர்களைக் கொண்டுள்ளன.

நாட்டுப்புற நடனங்கள் எண்ணிக்கை மற்றும் பாணியில் ஏராளமானவை மற்றும் அந்தந்த மாநில, இன அல்லது புவியியல் பகுதிகளின் உள்ளூர் மரபுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. தற்கால நடனங்களில் பாரம்பரியம், நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய வடிவங்களின் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சோதனை இணைப்புகள் அடங்கும். இந்தியாவின் நடன மரபுகள் தெற்காசியா முழுவதிலும் உள்ள நடனங்கள் மீது மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவின் நடன வடிவங்களிலும் செல்வாக்கு செலுத்துகின்றன.

ஒரு நடனம், பாரம்பரியமாகக் கருதப்படுவதற்கான அளவுகோல்கள் இந்திய நடிப்பு கலையை விளக்கும் நாட்டிய சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பாணி பின்பற்றுவதாகும். சங்கீத நாடக அகாடமி தற்போது எட்டு இந்திய பாரம்பரிய நடன பாணிகளுக்கு பாரம்பரிய அந்தஸ்தை அளிக்கிறது: பரதநாட்டியம் (தமிழ்நாடு), கதக் (வடக்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியா), கதகளி (கேரளா), குச்சிபுடி (ஆந்திரா), ஒடிசி (ஒடிசா), மணிப்பூரி (மணிப்பூர்), மோகினியாட்டம் (கேரளா) மற்றும் சத்ரியா (அசாம்) ஆகியன. இந்தியாவின் அனைத்து பாரம்பரிய நடனங்களும் இந்து கலைகள் மற்றும் மத நடைமுறைகளில் வேர்களைக் கொண்டுள்ளன.

Download Now : 2021 Men’s FIH Hockey Junior World Cup Top 50 Questions

Tamil Nadu Dance Forms

தமிழ்நாட்டின் கேளிக்கைக் கலைகளின் வரலாறு என்பது மிகத் தொன்மையானது ஆகும். இங்கு கேளிக்கைகள் என்பது மூன்று வடிவங்களில் இருந்தது. அவையாவன இயல் (இலக்கியம்), இசை, நாடகம். இவைகள் அனைத்திற்கும் மூலமாக இருப்பது தெருக்கூத்து ஆகும். சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்பட்டன. பெரும்பாலான தொன்மையான நடன வடிவங்கள் இன்றளவும் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகின்றன.

நடனம் அல்லது ஆடல் மனிதனுக்கு இயல்பான வெளிப்பாடுகளில் ஒன்று. ஆடலை கூத்து என்றும், நாடகத்தை கதை தழுவி வரும் கூத்து என்றும் கூறுவர். தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உண்டு. தமிழர் மரபில், சிறப்புற்ற ஆடல்கலை வடிவங்களையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் தமிழர் ஆடற்கலை எனலாம்.

நமது கலை கலாசாரத்தை எத்தனை விதமாக சொன்னாலும், நடனத்தின் மூலமாக சொல்லும்போது தமிழுக்கான அழகு மேலும் அதிகரிக்கின்றது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய நடனங்களைப் பற்றி தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும்.

Bharatanatyam

Tamil Nadu Dance Forms | தமிழர்களின் நடனக்கலை_3.1
Bharatanatyam

கிமு 1000க்கு முற்பட்ட நடனமான பரதநாட்டியம், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஒரு பாரம்பரிய நடனமாகும். பண்டைய கலாசாரத்தை பிரதிபலிக்கும் தொன்மையான நாட்டியக்கலை பரதம். இது நவீன காலங்களில், பெண்களால் முக்கியமாக நிகழ்த்தப்படுகிறது. நடனம் பொதுவாக பாரம்பரிய கருநாடக இசையுடன் அமைந்திருக்கும். பாரதநாட்டியம் என்பது இந்திய பாரம்பரிய நடனத்தின் ஒரு முக்கிய வகையாகும். இது தமிழ்நாடு மற்றும் அண்டை பிராந்தியங்களின் இந்து கோவில்களில் தோன்றியது. பாரம்பரியமாக, பரதநாட்டியம் என்பது பெண்களால் பிரத்தியேகமாக நிகழ்த்தப்பட்ட ஒரு தனி நடனமாகும்.

நேர்த்தியான ஆடை அலங்காரமும், அணிகலன்களும் பரதநாட்டியத்திற்கு தனித்துவம் தருபவை. உடலை வளைத்து, கை விரல்களை அசைத்து, கண்களில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, பாதங்களை பம்பரமாக சுழலவிட்டு நாட்டிய மங்கைகள் காட்டும் அபிநயம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும். பரதத்தை சிறுவயதில் இருந்தே முறைப்படி ஏராளமானவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

முதலில் அடவு எனும் கால்களை தரையில் தட்டி ஆடுவது, கைகளில் முத்திரைகள் காண்பித்தல், கால்களில் மண்டலம் என்பவற்றுடன் உடலை அசைத்து ஆடுவது போன்றவை கற்றுக்கொடுக்கப்படுகிறது. பின்பு உணர்வுகளை வெளிப்படுத்தும் அபிநயம் கற்றுக்கொடுக்கப்படும். பரதநாட்டியத்தில் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. முறைப்படி கற்றுக்கொண்டவர்கள் அரங்கேற்றம் செய்வார்கள்.

இந்தியாவில் பரதநாட்டியம் மற்றும் பிற பாரம்பரிய நடனங்கள் காலனித்துவ பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில் கேலி செய்யப்பட்டு அடக்கப்பட்டன. காலனித்துவத்திற்கு பிந்தைய காலத்தில், இது இந்தியாவிலும், வெளிநாட்டிலும் மிகவும் பிரபலமான பாரம்பரிய இந்திய நடன பாணியாக வளர்ந்தது.

Also Read: Tamil Nadu Council of Ministers | தமிழக அமைச்சரவை

Karakaattam

Tamil Nadu Dance Forms | தமிழர்களின் நடனக்கலை_4.1
Karakaattam

கோவில் திருவிழாக்களின்போது பூஜைக்காக நீர்நிலைகளில் இருந்து செம்புக் குடத்தில் நீர் எடுத்து வருவது மரபு. அந்த செம்புக் குடத்தை வைத்து ஆடுவதே கரகக் கலையாகிவிட்டது. இதில் சக்தி கரகம், ஆட்டக்கரகம் என்று இருவகை உண்டு. சக்தி கரகம் தெய்வ வழிபாட்டுக்குரியது. மஞ்சள் நீர், பால், அரிசி போன்றவை நிரப்பப்பட்டு, செம்பை சுற்றிலும் வேப்பிலை, மாவிலை தழைகளை சொருகி, வாய்ப்பகுதியில் தேங்காய் வைக்கப்பட்டிருக்கும்.சக்தி கரகத்தை கொண்டு வரும்போது அதற்கு துணையாக துணைக் கரகம் எடுத்து வருவார்கள். அவர்கள் இசைக்கேற்ப ஆடி வந்ததால் துணைக் கரகம் நாளடைவில் ஆட்டக்கரகம் என பெயர் மாறியது. ஆட்டக்கரகத்திலும் இரண்டு வகையுண்டு. ஒன்று செம்புக்கரகம், மற்றொன்று தோண்டிக்கரகம். கரகக் கலை தமிழகத்தின் புராதன கலையாகும். இது தமிழர்களின் கலாசாரத்தோடு தொடர்புடையது.

Mayilaattam

Tamil Nadu Dance Forms | தமிழர்களின் நடனக்கலை_5.1
Mayilaattam

மயிலை போன்ற தோற்ற அலங்காரத்தோடு ஆடுவது மயிலாட்டம். இந்த நடனம் ஆடும் கலைஞர்கள், மயில் தோற்றத்திலான முகமூடியை அணிந்திருப்பார்கள். இடுப்பில் மயில் தோகையை நேர்த்தியாக அலங்கரித்து, மயிலை போன்று காட்சியளித்து பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடுவார்கள். இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் தோகையை கைகளால் பிடித்துக்கொண்டு மயில் தோகையை விரிப்பது போல் விரித்து அங்கும், இங்கும் ஓடி ஆடுவார்கள். மயில் போன்று கழுத்தை அசைத்தும், வானத்தை பார்த்து நடனமிடுவார்கள். இது கண்களையும், கருத்தையும் கவரும். பெண் கலைஞர்களே மயிலாட்டத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

Kummiyaattam

Tamil Nadu Dance Forms | தமிழர்களின் நடனக்கலை_6.1
Kummiyaattam

நகரத்தில் வசிக்கும் பலருக்கும் நமது பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கும்மியாட்டம் பற்றி அதிகம் தெரியாமல் இருக்கலாம். கும்மியாட்டம் பெரும்பாலும் கிராமங்களில் திருவிழா நாட்களில் பல பெண்கள் சேர்ந்து வட்டமாக சுழன்றபடி ஆடும் ஓர் அற்புதமான நடனக் கலை ஆகும். எந்தவொரு இசைக்கருவியும் இல்லாமல் பெண்கள் ஒரு வட்டமாக சூழ்ந்துகொண்டு கைகளைத் தட்டிக்கொண்டே இறைவனை வேண்டி பாடுவது இதன் சிறப்பம்சம் ஆகும். கும்மியாட்டம் தமிழகத்தை தவிர்த்து கேரளாவிலும் ஆடப்படுகிறது. ஊரும், ஊர் மக்களும் என்றென்றும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று இந்த கும்மியாட்டம் ஆடப்படுகிறது.

Oyilaattam

Tamil Nadu Dance Forms | தமிழர்களின் நடனக்கலை_7.1
Oyilaattam

நாட்டுபுற கலைகளில் ஒன்றான ஒயிலாட்டம் பெரும்பாலும் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆடப்படும் நடனமாகும். இசைக்கு ஏற்றவாறு கைகளில் கைக்குட்டைகளை வைத்து கொண்டு ஆடும் நடனம் தான் ஒயிலாட்டம். ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த நடனத்தை தற்போது பெண்களும் ஆடத் தொடங்கிவிட்டனர். இந்த நடனம் இராமாயணம், மகாபாரதம் மற்றும் முருகனின் வரலாற்றை கூறும்விதமாக அமைக்கப்படும் என்பது மதுரை கிராம மக்களின் கருத்தாகும்.

Also Read : List of Chief Ministers of Tamil Nadu

Thappaattam

Thappaattam
Thappaattam

தப்பாட்டம் தமிழ் பாரம்பரியத்தின் மிக பழமையான நடனங்களின் ஒன்றாகும். இந்த நடனத்திற்கு தென் மாவட்டங்களின் ‘பறையாட்டம்’ என்று மற்றொரு பெயரும் உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய நடனமான தப்பாட்டம் உணர்ச்சி மிகுந்த எழுச்சி நடனம் ஆகும். பறை என்பதற்கு பேசு என்பது அர்த்தம் ஆகும். பறை கருவியை அடித்துக்கொண்டு அதன் ஓசைக்கு ஏற்றபடி ஆடுவது இதன் கலை ஆகும். பல நுற்றண்டுகளுக்கு முன்பு ஆதி மனித சங்கம் விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள எழுப்பிய சத்தம்தான் பறை என மக்களால் நம்பபடுகிறது. இதன் வரலாறு; பண்டைய காலத்தில் விலங்குகளை வேட்டையாடி அதில் மிஞ்சும் தோள்களை வைத்து தயரிக்கபடுவதுதான் பறை கருவியாகும்.

Poikkaal Kudhirayaattam

Poikkaal Kudhirayaattam
Poikkaal Kudhirayaattam

‘பொய்க்கால் குதிரையாட்டம்’ தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் பிரபலமான நடனம் ஆகும். கிராமப்புறங்களில் ஐய்யனாரை வேண்டி இந்த பொய்க்கால்குதிரை ஆட்டம் நடைபெறுகிறது. இந்த நடனம் எந்தளவுக்கு பிரபலம் என்றால் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று டெல்லியில் இந்த பொய்க்கால்குதிரை ஆட்டம் அரங்கேறும். பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு மரக்காலில் நின்று ஆடும் ஆட்டம் என்பதால் இது பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம் ராஜஸ்தானில் கச்சிகொடி என்றும், கேரளத்தில் குதிரைக்களி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், மராட்டிய மன்னர்கள் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக ஒருசில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Puliyaattam

Puliyaattam
Puliyaattam

உடலில் புலி போன்று வர்ணம் பூசிக்கொண்டு ஆவேசமாக ஆடுவதினால் இந்த நடனக் கலை புலியாட்டம் என்று அழைக்கபடுகின்றது. இந்த ஆட்டத்தினை தற்போது தமிழகத்தில் பெரும்பாலோனோர் மறந்துவிட்டனர். ஆனால் கேரளா மற்றும் கர்நாடக போன்ற மாநிலங்களில் மிகவும் பிரபலமான நடனமாக கருதப்படுகிறது.

Kaavadiyaattam

Kaavadiyaattam
Kaavadiyaattam

தை மாதத்தில் தைப்பூச திருநாளில் முருகப்பெருமானை துதிக்கும் பக்தர்களால் வில் வடிவில் காவடி அலங்கரித்து ஆடப்படுவது காவடியாட்டம் ஆகும். இந்த காவடியாட்டம் பெரும்பாலும் பழனி, சிங்கப்பூர், திருச்செந்தூர், இலங்கை மற்றும் புது தில்லி போன்ற பெருமை வாய்ந்த முருகன் கோவில்களில் பிரபலம் ஆகும். காவடியாட்டதில் பலவகையான காவடிகள் உள்ளன. பால் காவடி, பன்னீர்க் காவடி, மச்சக் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, மற்றும் தூக்குக் காவடி என பல்வேறு காவடிகள் உள்ளன.

Also Read: Government of Tamil Nadu | தமிழ்நாடு அரசு

Therukkootthu

Tamil Nadu Dance Forms | தமிழர்களின் நடனக்கலை_12.1
Therukkootthu

கிராமிய மணம் பரப்பும் விதத்தில் வீதிகளில் அரங்கேறும் கலை, தெருக்கூத்து. ‘திருக்கூத்து’ என்று அழைக்கப்பட்ட இது தெருக்களில் ஆடுவதால் தெருக்கூத்து என்று பெயர் மருவியதாக கூறப்படுகிறது. சிவபெருமான்தான் தெருக்கூத்தின் பிதாமகனாக கருதப்படுகிறார். தெருக்கூத்தின் அடிநாதமாக இருப்பது, சிவபுராண நாடகம். அதில் உள்ள சிவநேத்திரசூரசம்காரம், தில்லைகாளி திருநடனம், காத்தவராயன் கழுமரம், கங்கை சபதம் போன்றவை தெருக்கூத்தாக காட்சிப்படுத்தப்படுகிறது. தெருக் கூத்து மானுட வாழ்வியலின் அத்தனை சாரம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. வாழ்க்கை முறைகளையும், நீதி போதனைகளையும் வெளிப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

Badaga Dance

Badaga Dance
Badaga Dance

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இன மக்கள் தாங்கள் கொண்டாடும் எல்லா விழாக்களிலும் இந்த நடனத்தை ஆடுகிறார்கள். தங்களது பாரம்பரிய உடை அணிந்து, இந்த நடனத்தை ஆடி மகிழ்வார்கள். அவர்கள் ஆடும் முறை அற்புதமாக இருக்கும். படுக பாடல் இசைக்கு ஏற்ப நடனத்தை வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் தலைப் பாகை, போர்வை, வேட்டி அணிந்தும், பெண்கள் தலைக்கட்டு, வெள்ளை துண்டை போர்த்திக் கொண்டும் ஆடுவார்கள். சிலசமயங் களில் பாடல்கள் இல்லாமல், கிளாரினட்(ஊது குழல்), பேண்டு வாத்தியங்களுடனும் ஆடுவார்கள். இப்போது இளையதலைமுறையினரும் எளிதாக ஆடும் விதத்தில் படுகர் நடனம் மறுமலர்ச்சி பெற்றிருக்கிறது.

இதனைத் தவிர்த்து தமிழகத்தில் பல்வேறு நடனங்கள் பிரபலமாக உள்ளது. அவைகளில் தேவராட்டம், பொம்மலாட்டம், கோலாட்டம், பாம்பாட்டம், சேவலாட்டம் போன்ற பல்வேறு ஆட்டங்கள் தமிழகத்தில் பிரபலமான நடனங்கள் ஆகும்.

 

*****************************************************

Coupon code- WIN10-10% OFFER

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK - INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Tamil Nadu Dance Forms | தமிழர்களின் நடனக்கலை_15.1