Tamil govt jobs   »   Job Notification   »   Tamil Nadu Electricity Board Recruitment
Top Performing

Tamil Nadu Electricity Board Recruitment | தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) தற்போது காலியாக உள்ள பல்வேறு இடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பானது 2022 ஆம் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. குறைந்தது 50000 த்திற்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு, தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். எனவே, மின் வாரியத்தில் பணி புரியும் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதும் இதற்காக விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2022 க்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு போன்ற முழு விவரங்கள் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Fill the Form and Get All The Latest Job Alerts

Tamil Nadu Electricity Board Recruitment Overview

தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2022

நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைகள்
பதவி உதவி பொறியாளர், கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் மற்றும் பல பதவிகளுக்கு
கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு
காலியிடங்கள் 50000+
பணியிடம் தமிழ்நாடு
சம்பளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படும்
அறிவிப்பு தேதி ஜனவரி 2022
விண்ணப்ப முறை ஆன்லைன்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் என 85 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. 2020 ஆம் ஆண்டின் துவக்கத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து 600 உதவி பொறியாளர், 1300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர் – கணக்கு ஆகிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புக்கு இன்ஜினியரிங் உட்பட 2 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். கொரோனா பரவல் காரணமாக, இதுவரை அதற்கான தேர்வு நடத்தப்படவில்லை. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பித்தவர்கள், அதற்கான தேர்வை விரைவாக நடத்துமாறு தமிழக மின்வாரியத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையொட்டி இந்த பதவிகளுக்கான மறு அறிவிப்பு 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாகலாம் என்று தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Read More: TNPSC Group 1 updated result : Mains exam date

How to apply for Tamil Nadu Electricity Board Recruitment?

தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியாகும் பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழுமையான விண்ணப்ப செயல்முறையை அறிய, கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்:

  1. தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) இன் அதிகார்வப்பூர்வ வலைத்தளமான https://www.tangedco.gov.in/ க்கு
    செல்லவும்.
  2. இதில் ‘Recruitment -> Careers -> Advertisement menu’ என்பதை கிளிக் செய்யவும்.
  3. அதிகார்வப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு படிக்கவும், பின்பு ஆன்லைன் விண்ணப்ப இணைப்பை கிளிக் செய்யவும்.
  4. தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்.
  5. தேவையான அனைத்து ஆவணங்களையும் அறிவிக்கப்பட்ட வடிவத்திலும், அளவிலும் பதிவேற்றவும்.
  6. இறுதியாக, பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் சரியானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதி செய்து, பின்னர் சமர்ப்பிக்கவும்.
  7. அடுத்து, விண்ணப்ப கட்டணம் கேட்டால், அறிவிக்கப்பட்ட பயன்முறையின் படி கட்டணம் செலுத்துங்கள், இல்லையெனில் அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள்.
  8. இறுதியாக விண்ணப்ப படிவத்தை எதிர்கால பயன்பாட்டிற்கு நகல் எடுத்துக்கொள்ளுங்கள்.

Read more: வாராந்திர நடப்பு நிகழ்வுகள் November 2nd Week 2021 PDF 

Tamil Nadu Electricity Board Recruitment Eligibility Criteria

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், வாரியம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடும் தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாரியம் ஒவ்வொரு பதவிக்கும் அறிவிக்கும் வயது வரம்பையும், கல்வி தகுதியையும் விண்ணப்பதாரர் பெற்றிருந்தால் மட்டுமே, அவர் அந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த தகுதி ஆனது, ஒவ்வொரு பதவிக்கும் மாறுபடும். பொதுப் பிரிவில் உள்ள விண்ணப்பதாரர்களை தவிர, வேறு பிரிவுகளை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு இருக்கும்.

Tamil Nadu Electricity Board Recruitment Selection Process

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள், எழுத்து தேர்வு / நேர்காணலின் அடிப்படையில் நிரப்பப்படும். தேர்வு முறை பற்றிய முழுமையான விவரங்களை, மின்சார வாரியம் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடும்.

READ MORE: வெற்றி ADDA247 நடப்பு நிகழ்வுகள் 240 வினாடி வினா October PDF 2021

Tamil Nadu Electricity Board Recruitment Salary Details

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள சில பதவிகளுக்கான ஊதிய விவரங்களை அவற்றின் கல்வி தகுதிகளுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் நாங்கள் உங்களுக்கு வழங்கி உள்ளோம்.

Post Name Qualification Salary
 Assistant Accounts Officer CA  Rs. 60155 – 92965/- Per Month
 Field Assistant (Trainee) ITI  Rs.18800-59900/- Per  Month
 Junior Assistant (Accounts) B.Com 19500 – 62000/-
 Assistant Engineer Degree  39800-126500/-
Assessor Degree 19500 – 62000/-

[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 2nd Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/16131958/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-August-2nd-week-2021.pdf”]

Apply Online for Tamil Nadu Electricity Board Recruitment

தமிழ்நாடு மின்சார வாரியம் தனது வலைத்தளத்தில், மேலே கூறப்பட்ட பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட உடன், அதற்கான விண்ணப்ப இணைப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், ADDA247 உடன் இணைந்திருங்கள்.

READ MORE: DRDO Recruitment 2021 Notification

 

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

*****************************************************

Use Coupon code: WIN10(10% OFFER)

TNEB Assessor 2021 - Tamil
TNEB Assessor 2021 – Tamil

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Tamil Nadu Electricity Board Recruitment | தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு_4.1